World Tamil Blog Aggregator Thendral: 100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி

Thursday, 7 May 2015

100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி

100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி
------------------------------------------------------------------
சத்தியமா ஒரு வருடம் தான் பன்னிரண்டாம் வகுப்பை படித்தார்கள்..-

புதுக்கோட்டையில் உள்ள சந்தைப்பேட்டை-அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

2015ஆம் ஆண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

புதுக்கோட்டை நகரில் உள்ள அரசுப்பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற ஒரே பள்ளியும்  இதுதான்.

முதல் மதிப்பெண் 1114 எம் .சௌமியா,

இரண்டாவது மதிப்பெண்1062 கே.இந்துமதி

மூன்றாவது மதிப்பெண் 1039 எம்.வெண்ணிலா

கணிதப்பாடத்தில்200/200 எம்.காயத்ரி

1000க்கு மேல் ஆறு மாணவிகள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தலைமையாசிரியர் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்தார்.

பள்ளி தேர்ச்சியை பாராட்டி புதுகையின் புகழ் பெற்ற மருத்துவர் எஸ்.இராமதாஸ் அவர்கள் மற்றும் சத்தியராம் ஜுவல்லரி இராமுக்கண்ணு அவர்களும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து ,இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

எஸ்.வி.எஸ்.பார்த்திபன் அவர்கள் இனிப்புடன் வாழ்த்துகளையும் தந்து மகிழ்வூட்டினார்.

ஆசிரியர்களை ஊக்குவித்த தலைமையாசிரியர் ந.பார்வதி அவர்களுக்கு ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்வை பகிர்ந்து கொண்டனர்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சௌமியாவிற்கு எனது  முன்னாள் மாணவன் ராமக்கிருஷ்ணன் ரூபாய் 1000 பரிசு அளித்ததை மாணவிக்கு வழங்கி மகிழ்ந்தேன்.

ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

வெற்றிக்கு காரணமான ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்







 

8 comments :

  1. அரசு பள்ளி இத்தகைய பெருமை பெற்றமைக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பெரிய பொருளாதாரத் தன்னிறைவோ, அதிகம் படித்த பெற்றோரோ இல்லாமல், ஒரேயொரு ஆண்டு மட்டும் படித்து சிக்ஸர் அடித்திருக்கிறார்கள் நம் மாணவர்கள்!!!!!! சூப்பர் க்கா!!! வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...சகோ

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற மாணவர்களும், துணை நின்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  5. பாராட்டுக்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  7. 100% சதவீத தேர்ச்சிக்கு
    உந்து சக்தியாக விளங்கிய
    ஆசிரியர்களைப் பாராட்டுவோம்!

    ReplyDelete
  8. வெற்றி பெற்ற மாணவியருக்கும் 100 சதவித தேர்ச்சியுடன் வெற்றி பெற உதவிய ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...