World Tamil Blog Aggregator Thendral: இவர்களுக்கு எத்தனை மார்க் போட..

Wednesday, 7 January 2015

இவர்களுக்கு எத்தனை மார்க் போட..

இவர்களுக்கு எத்தனை மார்க் போட..

எழுத்தே தெரியாதவள்..பிழையாக இருந்தாலும் சுயமாக எழுதுகின்றாள்..தானே தவறின்றி படிக்க விரும்புகின்றாள்..

புத்தகத்தை வெறுத்தவள் இன்று புத்தகத்தை விடாது நேசிக்கின்றாள்.

முரணாய் பிறந்தவள் அன்பால் இயல்பாகின்றாள்...தனித்து இருந்தவள் குழந்தைகளுடன் கலந்து சிரிக்கின்றாள்..

தன் பெயர் எழுதத்தெரியாது ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலப்பள்ளியில் படித்து என்னிடம் வந்தவள் இன்று அழகாக கேள்விக்கு பதில் எழுதுகின்றாள்...

இங்கு இவர்களுக்கு நான் எத்தனை மதிப்பெண்கள் வழங்க?

அரசு கூறுவது போல் செய்ய வேண்டுமெனில் தவறின்றி வாசிக்கவும் எழுதவும் தெரிந்தால் மட்டுமே முழு மதிப்பெண் வழங்க வேண்டும்..

ஆனால் இவர்கள் ஒரு வார்த்தை சரியாக எழுதினாலே மகிழ்ந்து முழு மதிப்பெண்களும் சாக்லைட்டும் தந்ததால் தான் இவர்கள்...இப்போது முன்னேறியுள்ளனர்...

அவர்களின் மனங்களில் படிப்பதை சுகமாக்கினாலே போதும் என்று சொல்கிறது என் மனது...

எனவே முழுமதிப்பெண்களே வழங்குகின்றன என் கைகள்...ஏனெனில் இவர்கள் கவனிக்கப்பட வேண்டிய தெய்வங்கள்...

13 comments :

  1. உண்மையிலும் உண்மை தோழி, ஒவ்வொரு பாராட்டுதலும்,
    ஒவ்வொருகைதட்டலும் சிருசிரு பரிசுகளுமவர்களுக்கு மிகப்
    பெரிய அங்கீகாரம் அவர்களைப்படிப்படியாக முன்னேற்றிச்செல்லும்.

    ReplyDelete
  2. பிழையாக இருந்தாலும் சுயமாக எழுதுவதற்கே முழு மதிப்பெண்!!

    ReplyDelete
  3. திறமைசாலிகளை ஊக்குவிப்பது சிறந்த செயல்களில் ஒன்று போடுங்கள் மார்க் எனது சார்பாகவும் 100/100

    ReplyDelete
  4. அருமை! இவர்களைக் கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும்!

    ReplyDelete
  5. பரஸ்பரம்ம் தோள்தட்டல்கள்தானே மனமூக்கியாய் இருக்க முடியும்?

    ReplyDelete
  6. ஆமாம் கண்டிப்பை விடவும் பராட்டிப் பேசுதலும், அன்பும், தட்டிக் கொடுத்தலும், கெட்டிக்காரர்கள் ஆக்கிவிடும் என்பது உண்மையே. மகிழ்ச்சி தோழி தொடருங்கள்.....

    ReplyDelete
  7. "ஊக்கம்" என்னும் முழு மதிப் பெண்தான்
    முழு நிலவாய் உலகில் உலவி வர உதவும்
    சகோதரி!
    பரவட்டும் அகிலமெல்லாம்
    முழு நிலவின் முழு வெளிச்சம்!
    புதுவை வேலு

    ReplyDelete
  8. அன்பும் ஆதரவுப் பேச்சுகளும்
    பெரும் பலன் கொடுக்கும் சகோதரியாரே
    தொடரட்டும் தங்களின் பணி

    ReplyDelete
  9. ஆனால் இவர்கள் ஒரு வார்த்தை சரியாக எழுதினாலே மகிழ்ந்து முழு மதிப்பெண்களும் சாக்லைட்டும் தந்ததால் தான் இவர்கள்...இப்போது முன்னேறியுள்ளனர்...//

    உண்மையே! இதுதான் மாணவர்களை மட்டுமல்ல...ஏன் நம்மைப் போன்றவர்களையும் ஊக்குவிக்குமே! சாதனை புரிய வைக்குமே!

    ReplyDelete
  10. திறமைசாலிகளை ஊக்குவித்தான் பின்னாளில் சாதனையாளர்களாக மாறுவார்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...