World Tamil Blog Aggregator Thendral: இன்னும் எத்தனைக்காலம் தான் கேட்க வேணும்...?

Tuesday, 7 October 2014

இன்னும் எத்தனைக்காலம் தான் கேட்க வேணும்...?

இன்னும் எத்தனைக்காலம் தான் கேட்க வேணும்...?

மதிப்பிற்குரிய ஜேசுதாஸ் அவர்களுக்குள் உள்ள ஆணாதிக்கச் சிந்தனைகள் வெளிப்படும் நேரங்களாய் ..தற்பொதைய கூற்று..

”அணியும் ஆடையினால் மற்றவர்களுக்குத் தொல்லை தரக்கூடாது”
அதற்கு பதிலடியாய் கவிஞர் வெண்ணிலா....

 தமிழ்” தி இந்து” வில்
”எங்கள் ஆடைகளை உரித்து தான் நீங்கள் எல்லோரும் மீசையை முறுக்கிக் கொண்டு எகத்தாளமாக உலா வருகிறீர்கள் என்ற ரகசியம் அறிந்தவர்கள் நாங்கள்.எங்கள் பிரியத்துக்குரிய ஆண்களை நிர்வானமாக்கிவிட்டு நாங்கள் எப்படி வெளியேறுவோம் ஆண்களே”என சாடியுள்ளார்.

உடையணியாத விலங்குகள்,பறவைகளுக்கு இந்த பிரச்சனைகள் ஏதும் வருவதில்லை .பெண்ணாய் பிறந்த பாவத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி கேட்க வேண்டி வருமோ.?

நேற்று கூட ராமநாத புரத்தில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் நிகழ்ந்துள்ளது.ஜேசுதாஸ் அவர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்.ஆண்களின் வக்கிர குணங்கள் மாறவேண்டும் என நினைத்தால் அது சரியான தீர்வு....அதைவிட்டு இப்படியெல்லாம் பேசுவது உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்வது போலாகாதா....

பெண்கள் எப்போதும் ஆண்களின் கைலி தெரியுது ,உள்ளாடை தெரியுது என புலம்பிக்கொண்டிருக்க மாட்டார்கள் .அவர்களுக்கு சமாளிக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளது.பார்வை சரியில்லாதவர்களின் பேச்சுக்களை புறந்தள்ளி வாழ எங்கள் குழந்தைகட்கு கற்று தருகின்றோம்...அரைகுறை ஆடையில் திரையில் பெண்களை ஆடவிட்டு ரசிக்கும் ஆண்கள் தான் உடைகளைப் பற்றி பேசுகின்றார்கள்...என்பதை புரிந்து கொள்ளுங்கள்..ஆண் குழந்தைகட்கு   பெண்களை மதிக்கும் தன்மையை கற்றுக்கொடுங்கள்...

இன்னும் தொடரும் சிறுமிகளின் பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்பதை உணருங்கள் தோழர்களே.

6 comments :

 1. வணக்கம்
  சபாஷ் சரியாக சொன்னீங்கள் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. //ஆண் குழந்தைகட்கு பெண்களை மதிக்கும் தன்மையை கற்றுக்கொடுங்கள்//
  மிக அருமையா சொன்னீங்க தோழி !
  சில நேரங்களில் பெரிய மனிதர்கள் இவரைபோன்றோர் அவசரபட்டு வார்த்தைகளை விட்டு அசிங்கப்பட்டு போகிறார்கள் .சொல்வதை நாகரீகமாக சொன்னால் எவ்ளோ நன்றாயிருக்கும் .
  அதேபோல அவரை தூற்றுகிறேன் என்று சிலரின் அசிங்கங்களையும் காண நேரிட்டது :(
  நாங்கள் வாழும் வெளிநாட்டில் குளிருக்கு அணியவேண்டும் இவ்வுடை .அவரின் மருமக்களே வெளிநாட்டில் வாழ்பவர்கள் தானே ?
  அவர் அவசர பேச்சால் பெற்ற சேர்த்த பேர் எல்லாம் நாசம் :(

  ReplyDelete
 3. நல்லதொரு பதில் பதிவு சகோதரி!

  ReplyDelete
 4. உடையில் அல்ல
  மனதில் இருக்கிறது
  ஏழு வயதுச் சிறுமிக்கு...
  கொடுமை சகோதரியாரே
  கொடுமை

  ReplyDelete
 5. சரியாக சொல்லியிருக்கிறீர்கள்...
  குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகள் இன்னும் தொடர்வது வேதனை....

  ReplyDelete
 6. இது மாறுவது ஆசிரியர் கைகளில்தான் இருக்கு
  ஆனா பாருங்க அதெல்லாம் பாடத்திட்டத்தில் இல்லை...
  அதுக்கெல்லாம் மதிப்பெண் இல்லை
  எனவே ....
  இன்னும் கொஞ்ச காலம் காத்திருப்போம்...

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget