World Tamil Blog Aggregator Thendral: பாம்பறியுமா மனிதனை...!

Wednesday 30 July 2014

பாம்பறியுமா மனிதனை...!



இன்று காலை சன் டிவியில் தற்செயலாக பார்த்த போது ஒரு பேட்டி. ஆண் என ஒரு கணம் நினைத்து ஏமாந்து விட்டேன்.பெண்ணுக்குரிய எந்த தனி அடையாளமின்றி முழுக்கை வைத்த சட்டையுடன் எந்த வித அணிகலனும் அணியாமல் தெளிவாக பேசிய பெண்ணை பார்த்து வியந்து முழுமையாய் கேட்டேன்.எத்தனை வீரமான பெண்...!

மணிமேகலை

பாம்பென்றால் படையும் நடுங்கும் பழமொழி ஆனால் இவரோ குழந்தையாக எண்ணி பேசிக்கொண்டிருந்தார்.வித்தியாசமா செய்ய வேண்டும் என்பதற்காகவே பாம்பு பிடிக்கும் கலையைக் கற்றுக்கொண்டு மனிதர்களிடம் பாம்பை நேசிக்கும் தன்மையை வளர்ப்பதே குறிக்கோளாய் கொண்டுள்ளார்....

பாம்பு பழி வாங்குமா என்ற கேள்விக்கு அது எதுவும் அறியாத குழந்தை அது, நாம் அடித்தால் அந்த வலி தாங்காமல் எதிர்ப்படுபவரைக்கடிக்குமே ஒழிய....மற்றபடி அது தேடி வந்து கடிக்காது..பிற விலங்குகளைக் கடிக்க கூடாது என்பதால் தான்  அடித்தால் முழுசா அடிச்சு போடுங்கன்னு முன்பு சொல்லிருக்காங்க...என்றார்...

எந்த விதக் கருவியுமின்றி கைகளே கருவியாய் பாம்பைப் பிடிக்க பயன்படுத்துகின்றாராம்.ஒரு குழந்தை போல பாவித்து பேசும் பொழுது வியக்காமல் இருக்க முடியவில்லை.

சாரைப்பாம்பு கடித்தால் விடமில்லை என்பதை இவரின் கைகளில் கடிக்க வைத்து மறுநாள் சென்று அனைவரிடமும் காட்டி பயத்தை போக்குவாராம்....

பாம்பைப் பார்த்து பயத்தில் மனிதர்கள் அடித்துக் கொள்வதை தவிர்க்கவே பாம்பு நீண்ட நாள் வாழ்ந்தால் அதன் விடம் நாகரத்தினம் ஆகும் என்பதெல்லாம் பாம்பைக் காப்பாற்றும் சொற்களே தவிர நாகரத்தினம் ஆகும் என்பது பொய் என்றார்.

மேலும் சாரையும் சாரையும் தான் சண்டையிடும் ,சாரையும் நல்லபாம்பும் சண்டையிடும் என்பதெல்லாம் பொய் என்கிறார்...

ஒரு பெண் இத்தனை வீரமாய் ஒரு உயிரினத்தை காப்பதே குறிக்கோளாய் கொண்டு வாழ்வது பெருமையாக இருக்கிறது.இப்படியே மனிதர்கள் பாம்பைக் கொன்றுக்கொண்டே இருந்தால் டைனோசர் போல அழிந்த இனத்தில் பாம்பும் சேர்ந்து விடும் என்று கவலையுடன் கூறினார்...

கிராமங்களில் முதியோர்கள் வீட்டில் இருப்பார்கள்,அவர்களே அறியாமல் பாம்பு வந்தால் என்ன செய்ய வேண்டுமென்று கற்றுக்கொடுக்கிறேன் என்றார்...

அழகு நாடி ஓடும் பெண்களுக்கிடையில் இப்படிப்பட்ட பெண்கள் வீரத்தின் விளைநிலமாய் வாழ்கிறார்கள் ...வாழ்த்துகள் மணிமேகலைக்கு....

4 comments :

  1. அன்பால் முடியாதது எதுவுமில்லை, இதற்க்கு பாம்பு(ம்) ஒரு உதாரணம்.

    ReplyDelete
  2. வணக்கம்
    தொலைக்காட்சியில் சென்ற நிகழ்ச்சி பற்றி மிக அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் .. அந்தப்பெண்மணிக்கு நானும் வாழ்த்துக்கூறுகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நல்ல விழிப்புணர்வு பதிவு! வீரப்பெண்மணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. விழிப்புணர்வை தரும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...