World Tamil Blog Aggregator Thendral: July 2026

Thursday, 23 July 2026

மாமன்னர் கல்லூரி

"தமிழ் நாட்டின் சிற்பி காமராசர் " 
என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நேற்று பேச வாய்ப்பு கிடைத்தது.
மதிப்பிற்குரிய முதல்வர் முனைவர் சேதுராமன், முனைவர் கணேசன் முனைவர் ஆதவன் பேராசிரியர் பாலமுருகன் முனைவர் இரவிச்சந்திரன் ஆகியோர் நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தினர்.

முதலாண்டு அறிவியல் கணினிப்பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எனது உரையில் உங்களில் எத்தனை மாணவர்களின் தாத்தா பாட்டி படித்துள்ளனர் என்று கேட்டேன் ஒருவரும் கை தூக்கவில்லை . உங்கள் பெற்றோரில் எத்தனை பேர் கல்லூரியில் படித்து உள்ளனர் என்று கேட்டேன்.ஏழு பேர் மட்டுமே கை உயர்த்தினார்கள்.சங்க காலத்தில் அத்தனை பேர் பாட்டு எழுதும் அறிவு பெற்றிருக்க இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் தாத்தா பாட்டிகள் படிக்காததன் காரணம் என்ன என்று யோசியுங்கள்.

Zee tamil தொலைக்காட்சியில் சுமன் என்ற மாணவன் தனக்கு கிடைத்த எதுவும் என் தந்தைக்கு கிடைக்கவில்லை .பண்டிகை நாளன்று நிம்மதியாக வயிறு நிறைய சோறு சாப்பிட்டதில்லை என்று கூறி தனது தாத்தாவையும் தந்தையையும் மேடைக்கு அழைத்தார்.

கை கட்டிக்கொண்டுகூனிக்குறுகி நின்ற  தாத்தாவிடம் இனி யார் முன்னாலும் கை காட்டாதீர்கள் என்று கையை விலக்கி விட்டார்.தாத்தா கண்கலங்க தமுக்கடித்து வாழ்ந்தவன் நான் என் பிள்ளையை கல்லூரியில் சேர்க்க காசில்லாமல் அத்தனை கஷ்டப்பட்டேன்.ஆனால் இன்று என் பேரன் கொண்டு தாத்தா என்ற எனது பெயரை பாடகரின் தாத்தா என் மாற்றி விட்டேன் என கண்கலங்கி கூறினார்...

ஏன் அவர்கள் இப்படி கூனிக்குறுகி வாழ வேண்டும்...

இவர்களின் மேன்மைக்காக பாடுபட்ட எளிய மனிதர் கர்ம வீரர் காமராஜர்..

தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனதும் உடனே கல்வியில் முன்னேற பள்ளிகளைக் திறந்து கல்லூரி மருத்துவக்கல்லூரி தொழிற்கல்லூரி என ஒருபக்கமும் மறுபக்கம் அவர்கள் வெளியே வந்தால் வேலை கொடுக்க மத்திய மாநில உதவியுடன் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள்,தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் கிடைக்க நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம் என மின்துறை வளர்ச்சி மேலும் நீர்ப்பாசனத்திற்காக ஒவ்வொரு நதி தோறும் கட்டப்பட்ட அணைகள் வியக்க வைக்கும் அரசியல் அறிவு...

என் மாமனிதர் காமராஜர் பற்றி உரையாற்றினேன். 

காமராஜரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள நல்வாய்ப்பு.

மன நிறைவான நாளாக 22.7.26 அமைந்தது.