"ஏய் தள்ளு நாங்க தீபஜோதிய பத்தியே தீருவோம் இல்லன்னா இந்த நாடே பத்தி எரியும் நாங்க யாருன்னு தெரியுமான்னு" ஓரே சத்தம்.
தெ...வானையோடு வேட்டைக்கு போயிருந்த ருகன் மருப்பரங்குன்றத்தில் கூச்சலும் கலகமும் செய்பவர்களைக் கண்டு திகைத்தான்.
வேகமாக ஓடி வந்தான்.
என்ன கூட்டம் அங்கே? என்று கூட்டத்திற்கு நடுவே எட்டி எட்டிப் பார்த்தான் .
எதற்காக இந்த கலவரம் என்று தெரியாமல் புரியாமல் சுற்றும் முற்றும் நோக்கினான்.
அவன்தான் ருகன் என்று அறியாத கலகக்காரர்கள் அவனை" பின்னாடி தள்ளி தள்ளிப் போ! நாங்க .போட்டோல தெரியனும் போபோ "என்றார்கள்
ருகன்"என்னப்பா இப்படி விரட்டுற எதுக்கு இங்க கூட்டமா நிக்குறீங்க?சொல்லு முதல்ல"
".அதெல்லாம் சொல்ல முடியாது போபோ "என விரட்டினர்.
வேட்டையில் சிக்கிய மானை அனாயசமாக கழுத்தில் சுமந்து தூக்கிக் கொண்டு வந்த தெ..வானைக்கோ எதுவும் புரியவில்லை? என்ன நடக்குது இங்கே? "என்ன ருகா என்ன நடக்கிறது?" என்று அவள் கேட்க,
தெ..வானை எனக்கும் தெரியல இது ஏதோ கலகக்காரர்கள் போல இருக்குது . எப்பவும் வருகிற பக்தர்கள் போல இல்லை.
"எதற்காக கலகம் பண்றாங்கன்னே தெரியல? நாம ஆயிரக்கணக்கான வருஷங்களாக இங்கே இந்த மலைமேல இருக்குறோம். ஆனா இதுவரைக்கும் இப்படி ஒரு கலகம் நடந்தது இல்லையே" தெ..வானை.
"ஆமா ருகா". ஆனா சில மாதங்களுக்கு முன்னாடி எதற்கோ புதிதாக சிலர் வந்து போராட்டம் செய்தாங்கன்னு "கேள்விப்பட்டேன் என்றாள்.
"இரு நான் தெளிவாக கேட்டு வருகிறேன்"
என்று ருகன் அருகில் நின்று கத்திக் கொண்டிருந்த மஞ்சள் கலர் துண்டுடன் நெற்றியில் பட்டையும் குங்குமமும் வைத்திருந்த ஒருவரின் தோள் மீது கையை வைத்தான் .
அவர் திரும்பி "என்ன? என்றார்
"எதற்காக இங்கே கலவரம் நடக்கிறது .தெரிந்து கொள்ள விழைகிறேன் "என்றான்.
"உனக்கும் தெரியலயா உண்மையில் எனக்கும் தெரியவில்லை அட போயா
இங்க வந்து ஜெ... ஸ்ரீ ..ரா...ஜெ..ஸ்ரீ ரா.. என்று கத்துன்னா ₹500 கொடுக்கிறேன்னாங்க.
ஒரு பிரியாணி பொட்டலமும் தருவாங்களாம் .உனக்கும் வேணா நீயும் கத்து "என்க.
ருகன் "ஆமா நீங்க எந்தூரு?" என கேட்க
நாங்க தென்காசி அதோ அவங்கல்லாம் கோயம்புத்தூர்ல இருந்து வந்திருக்கோம்னு கூறினார்.
ருகன்,தெ..வானையிடம் வந்து "கலகக்கார ஆளுக்கே தெரியவில்லை தெ..வானை.
என்ன செய்யறது இப்ப நாம மலைக்கு மேலே போகணுமே நாம எப்படி போறது?."
"இருங்க நான் போய் கேட்டுட்டு வரேன்னு" தெ..வானை வந்தாள். பெண்ணை பார்த்ததும் பல்லிளித்துக் கொண்டு ஒரு மஞ்சள் துண்டுகாரன் என்ன வேண்டும்மா?என்றான்
"எதுக்கு இங்க கும்பலா நிக்குறீங்கன்னு கேட்டாள்.
நாங்க கார்த்திகை தீப ஜோதி ஏத்த வந்திருக்கோம்.
உனக்கு தெரியாதா போலீஸ்காரங்க விடமாட்டேங்குறாங்க "
"அப்படியா இத்தனை ஆண்டா நீங்க வரலயே இப்ப மட்டும் என்ன திடீர்னு தீபஜோதி?"
".அட ஏம்மா நீ வேற.வ...னுங்க இங்கு வந்து கலகத்த உண்டாக்க திட்டம் போட்டு தான் இதை செய்றாங்க."
"நீங்க தமிழர் தானே இப்படி செய்யலாமா இது ருகனுக்கு பிடிக்குமான்னு" தெ..வானை கேட்டாள்.
"என்ன பண்றது பணம் படுத்துற பாடு.உனக்கு ஒரு விசயம் சொல்றேன் இது பணத்துக்காக கூடும் கூட்டம்.நாளைக்கே கலைஞ்சிடும்னு "சொன்னார்.
தெ..வானை ருகனிடம் வந்தாள் "என்ன உனக்காவது புரிந்ததா" என ருகன் பார்க்க.
"புரிந்தது புரிந்தது" எங்கிங்கிருந்தோ வந்திருக்காங்களாம்மா.
அவங்க உம் பேர சொல்லி இங்க ஒரு குழப்பம் பண்ண போறாங்க போல இருக்கு". எல்லாம் உம்பேர வச்சிகிட்டு இருக்குற ஒரு ஆளு, 6 மணி 6 .05 ன்னு தூண்டி உடுறாரு"
"எதற்கும் ஜாக்கிரதையாக இருந்துக்கோ ருகா.
உனக்கு நீ போட்டிருக்க பட்டையை நாமம்மா போடறதுக்கு முன்னாடி நீ கொஞ்சம் கவனமா இரு "என்றாள் தெ..வானை.
" சரிசரி தெ..வானை நாம இப்போதைக்கு காட்டுக்கே போயிடலாம் காலைல வருவோம்னு வா "என்று தெ..வானை அழைத்துக் கொண்டு ருகன் காட்டிருக்கே திரும்பி விட்டான்.
தேவதா தமிழ் கீதா