World Tamil Blog Aggregator Thendral: எனது இரண்டாவது நூல் "விழி தூவிய விதைகள் "

Tuesday 11 July 2017

எனது இரண்டாவது நூல் "விழி தூவிய விதைகள் "

எனது இரண்டாவது நூலும் முதல் கவிதை நூலுமான

"விழி தூவிய விதைகள்"

வளரி சிற்றிதழின்2015 [௨௦௧௫] ஆண்டிற்கான கவிப்பேராசான் மீரா விருது பெற்ற நூல் ...எனது மனம் உடைந்த காலங்களில் கவிஞ்சர் சுவாதியின் தூண்டலால் பிறந்த நூல் ....இதில் மூழ்கியதால் என்னையே நான் மறந்து இந்நூலை பிரசவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும் .

எனது கவிதைகள் இல்லை என் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலிக்கும் நூல் .இதில் தான் பல்லாயிரக்கணக்கில் இன்றும் உலா வரும் பெண்ணியக் கவிதை "எங்கே போவேன் "என்ற கவிதை வாழ்கிறது ...

வேலுநாச்சியார் பதிப்பகம் என்ற பெயரில் நானே பதிப்பித்த நூல் .தரமான தாள்கள் இருக்க வேண்டும் என்று கூறியதும் அச்சிட்ட திருமிகு எம்.எஸ் ஆர் .ரவி சகோதரர் ....அட்டை படத்தை முப்பரிமாணத்தில் எனக்கே தெரியாமல் சிவகாசியில் அச்சிட்டு சஸ்பென்சாக காட்டினார் .

முதலில் இந்த படத்தை தேர்வு செய்த போது இது வேண்டாம்மா ...பெரிதாக்கினால் உடைந்து வரும் என்றார் ...மிகவும் தேடி இணையத்தில் எடுத்த படம் ....ஓவியர் மகேந்திரனிடம் பெரிதாக வரைந்து தாருங்கள் எனக்கேட்டு வாங்கினேன் . பின் அதை சிறிதாக்கி உடையாமல் வரும் என்று அவரிடம் கூற அட்டையாக்கி தந்தார் ....

காரசாரமான கவிதைகள்...அழகியல் தவிர்த்த நேர்மையான கவிதைகள் என்று இதற்கு முன்னுரையும் அணிந்துரையும் எழுதிய கவிஞர் முத்து நிலவன் அவர்களும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களும் ஒரே மாதிரியான உரையை அளித்த போது மனம் அடைந்த மகிழ்வைச் சொல்ல வார்த்தைகள் இல்லை ..

தொட்டாலே எனது குழந்தையை தொடும் உணர்வு ...வேதனையான காலங்களில் மடியில் வைத்துக்கொண்டு தடவிக்கொண்டிருப்பேன் ....சிறுபிள்ளையென...



இந்நூல் புதுகை நகர்மன்றத்தில் பெண்கள் மட்டுமே அலங்கரித்த மேடையில் தோழர் பானுமதி அவர்கள் வெளியிட கவிஞர் பாலா அவர்களின் இணையர் திருமிகு மஞ்சுளா அம்மா பெற்றுக்கொண்டார்கள் ...

8 comments :

  1. நூல் வெளியீடு அனுபவங்கள் சுவையாக......

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள்...

    ஆமாம்... பத்திக்கு பத்தி ஏன் இவ்வளவு இடைவெளி...?

    ReplyDelete
    Replies
    1. என்று தெரியல சார்...இப்படி ஆச்சு

      Delete
  3. வாழ்த்துகள் நாளும் எழுதுக

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி அய்யா

      Delete
  4. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  5. வாழ்த்துகள்! ககோதரி! தங்களின் படைப்புகள் மேலும் வெளியாகிட வேண்டும்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...