World Tamil Blog Aggregator Thendral: நோய் மட்டுமா காரணம்?

Friday 22 April 2016

நோய் மட்டுமா காரணம்?

நோய் மட்டுமா காரணம்?
 வைகறை தாங்க முடியா வலியால் துடித்து மட்டுமல்ல ,
கடுமையான மன உளைச்சலாலும் நீ துடித்ததை நான் அறிவேன்...

 உன் அன்பையே உன்னை கொல்லும் கருவியாகப்பயன்படுத்திய நல்ல உள்ளங்களின் அலட்சியப்படுத்தலை, நீ அலட்சியப்படுத்த துணிவில்லை உனக்கு...

மருகி மருகி நீ புலம்பிய புலம்பல் என் காதில் ஒலித்துக்கொண்டே உள்ளது... 


கடுமையான மன உளைச்சலே உனது நோயை அதிகப்படுத்தியிருக்குமோ என தவிக்கின்றேன்..

 எப்படியெல்லாம் உன்னை காயப்படுத்த முயன்றார்கள்...கலங்காதேபா என்ற போதும் எனக்காக, இல்லம்மா நான் இனி கலங்க மாட்டேன்..
நான் சரியா இருக்கேன்..என்னை புரிந்து கொள்ளும் நாள் வரும் என்று கூறி மனதில் புழுங்கினாயே...
 உன்னையே நினைத்து வழும் உன் மனைவியை எண்ணி பார்க்கலயே பா... எத்தனை அன்பான குடும்பமாக வாழ்ந்தீர்கள்...

கண் பட்டு விட்டதோ என கலங்குகின்றேன். நாங்க இருக்கோம்மா என்று ஆறுதலாக கூறிய பொழுது என் வீட்டுக்காரர் இருக்கமாட்டாரே அக்கான்னு கதறி அழுதவளை கண் கொண்டு பார்க்க முடியலயே..

 உன் வேதனையில் கிடைக்கும் மகிழ்வு ..எத்தனை காலம் நீடிக்கும்.... மனசாட்சி கொல்லும் நாள் வரும்....வரையில் மீண்டும் ஒரு வைகறை மாளாதிருக்கட்டும்...

9 comments :

  1. வேதனையாக இருக்கிறது சகோதரியாரே
    மன உளைச்சலா
    வைகறைக்கா?
    நம்ப முடியவில்லை
    நண்பரது அன்பையே நண்பரைக் கொல்லும் கருவியாகப்பயன்படுத்திய நல்ல உள்ளங்கள் நன்றாக இருக்கட்டும்

    ReplyDelete
  2. நீங்கள் விருது பெற மதுரை வந்திருந்த போது அவரை சந்தித்து பேசினேன் ,அவரது மறைவை நம்ப முடியவில்லை !

    ReplyDelete
  3. வேதனையாக இருக்கின்றது அவரது குடும்பத்தார் எப்படி மீளப் போகின்றார்களோ....

    ReplyDelete
  4. பாவலர் (கவிஞர்) எவரும்
    சாவடைந்ததாய் வரலாறில்லை
    வைகறை - நீ என்றும்
    வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!

    ஓ! பாவலனே (கவிஞனே)!
    வைகறை என்னும் பெயரில்
    பாக்களால் அறிவை ஊட்டினாய்
    படித்தவர், கேட்டவர் நெஞ்சில் வாழ்கின்றாய்!
    கிட்ட நெருங்காமல் எட்டப் போய்
    எங்கிருந்தோ நம்மாளுங்க உள்ளத்தில்
    வாழும் வைகறையின் குடும்பத்தாருடன்
    துயர் பகிருகின்றோம்!

    ReplyDelete
  5. கவிஞர் வைகறையின் ஆன்மா இனியாவது உறங்கட்டும்.

    ReplyDelete
  6. வருந்துகிறோம் ....

    ReplyDelete
  7. ஆழ்ந்த அஞ்சலிகள்/

    ReplyDelete
  8. மனதுக்கு மிகவும் வேதனை தரும் செய்தி. அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...