World Tamil Blog Aggregator Thendral: என்ன சொல்வது?

Saturday, 12 December 2015

என்ன சொல்வது?

என்ன சொல்வது?

மக்களின் மகிழ்விற்காக உருவாக்கப்பட்டக் கலைகள்...அவனது வாழ்விற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தன ஒரு காலத்தில்...கவலையிலிருந்து விடுபடவும்,கொண்டாட்டத்தை வெளிப்படுத்தவும் பயன் பட்டக் கலைகளின் இன்றைய நிலை மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகிவிட்ட சூழ்நிலை.

ஆதிமனிதன் இயற்கையை வழிபட்டான்...பின் உயிர்கள் பிறக்க காரணமான மனித உறுப்புகளை ,இன்றும் கடவுளாக வழிபடும் சமூகம்...போற்றுதற்குரியவையாக எண்ணின...

பாதுகாப்பிற்காக மறைக்கப்பட்ட மனித உறுப்புகள்...பிற உறுப்புகளைப்போல் தான்..அதுவும் என்பதை சமூகம் உணரவில்லை...

காலப்போக்கில் திட்டுவதற்கு பயன்படுபவையாக அவை மாறிய கொடுமை...

கை கால்களைப்போல் தான் அவையும் ....அது எப்படி திட்டுவதற்கான உறுப்பாக மாறும் என்ற நிலையில்
இன்று தன் வக்கிரமான எண்ணங்களை வெளிப்படுத்த அந்த உறுப்புகளை கூறி தன் பாலியல் வக்கிரங்களைத்தீர்த்துக்கொள்ளும் கேவலமானப்பிறவிகளாக மாறிய நிலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அதை அனைவரும் வன்மையாக எதிர்க்கும் நிலையில் நான் அப்படித்தான் செய்வேன்...என் உரிமை...என சிம்பு கூறியது வக்கிரம் நிறைந்த ஆணாதிக்கச்சிந்தனையின் வெளிப்பாடு....

பாடல்கள் என்பது மகிழூட்டுவதற்கே அன்றி வக்கிர எண்ணங்களைத்தூண்டுவதற்கு அல்ல....
அவன் மட்டுமல்ல....டாடி மம்மி வீட்டில் இல்லன்னு ஆணை உறவுக்கு அழைக்கும் பாடலை எழுதிய கைகளை அன்றே வெட்டியிருந்தால் இன்று இந்தப்பாடல்கள் பிறந்திருக்காது...

தான் அடிக்கடி பேசப்பட வேண்டும் என்பதற்காக அந்த கேவலமானப்பிறவிகள் இந்தப்பாடலை பாடியிருக்கின்றன...
இப்படிப்பட்ட அசிங்கம் தேவையா....இவனை மகனாகப்பெற என்ன பாவம் செய்தார்களோ...?

இப்பாடல் இப்படிப்பட்ட ஆண்களின் முகமூடியை கிழித்தெறிந்துள்ளது...இது வெளியில் வந்து விட்டது..வராதவை எத்தனையோ?

ஆனால் பெண் என்பவள் போகப்பொருளுக்கே என்று திரைப்படங்கள் விதைத்த விதை இன்று மரமாக வளர்ந்துள்ளது.

பிறந்துஇருபத்து நான்கு நாட்களே ஆன குழந்தையையும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட இவைகளே முக்கியக்காரணமாகத்திகழ்கின்றன.

இனியாகிலும் இவற்றை கடுமையாக எதிர்க்க வேண்டும்...தன் இனத்தை சேர்ந்த ஒருவன் இப்படி பாடிய பாடலுக்கு கொதித்துக்கிளம்பிய சகோதரர்களுக்கு என் வணக்கத்தைக்கூறிக்கொள்கின்றேன்..

ஆனால் இது திடீரென கிளம்பிய ஒன்றல்ல என்பதை உணர வேண்டும்.

ஆரம்பத்தில் விட்டுவிட்டோம் என்பது ...நாம் மறுக்கமுடியாத உண்மை..

16 comments :

 1. விரைவில் தண்டனை கிடைக்க வேண்டும் அந்த நாய்களுக்கு...

  ReplyDelete
 2. கழிசடைகள்... வளர்ப்பை தான் குறை சொல்லவேண்டும்..

  ReplyDelete
 3. “இது திடீரென கிளம்பிய ஒன்றல்ல என்பதை உணர வேண்டும்“
  இதுதான் மா உண்மை. சும்மாவா சொன்னான் அந்த வள்ளுவக் கிழவன்- முள்ளுச்செடி சின்னதா இருக்கும்போதே வெட்டுன்னு, இப்ப ஊராளுக கால்களை மட்டுமல்ல வெட்டவரும் கைகளையும் கிழிக்குது! அடியோட அழிச்சி எரிச்சிரணும் இந்த முள்செடிகளை எல்லாம். விதையின் வாசம் கூட இருந்திடக் கூடாது. உங்களப் போல நாங்களும் அவமானப் படுகிறோம் தங்கையே! எங்கள் தாய், சகோதரி, மனைவி, மகளும் பெண்கள் அல்லவா? இந்த நாய்க்கு இந்த உறவுகள் அதன் உன்னதம் தெரியாதோ என்னவோ? வளர்த்தவங்களையும் நாலு வைக்கணும்.

  ReplyDelete
 4. வலி பொதுவானது.
  அனைவர்க்குமானது.
  வெளிப்படையென்றும் குறிப்பென்றும் அவையல்கிளவி என்றும் பிரித்து வைத்த மொழியில், இது போன்ற ஆபாசமான அருவருக்கக் கூடிய சொற்பயன்பாடு கண்டிக்கத்தக்கது.

  ஆனந்தவிகடனில் ஒரு பத்திரிக்கை மாணவி எழுதிய கடிதம் நினைவுக்கு வருகிறது.

  எதிர்ப்பும் கண்டனங்களும் கவிஞரே!

  த ம +1

  ReplyDelete
 5. அனைவரையும் சிந்திக்கச் செய்யும் மிகச்சிறப்பான ஆக்கம்.

  //ஆரம்பத்தில் விட்டுவிட்டோம் என்பது ... நாம் மறுக்கமுடியாத உண்மை..//

  மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

  கடைசியில் கவலையுடன் கன்னத்தில் கைவைத்துள்ள குழந்தைப்படத் தேர்வு அழகாகவும், மிகப்பொருத்தமாகவும் உள்ளது.

  ReplyDelete
 6. உண்மைதான். 'எவன்டீ உன்ன பெத்தான் கையிலே கிடச்சா செத்தான்' என்று எழுதியபோதே கண்டித்திருந்தால் இன்று இந்த பாடல் வந்திருக்காது.
  த ம 3

  ReplyDelete
 7. இத்தனை வளர விட்டதே தப்பு... இன்னும் சினிமாவின் மோகத்தில் வீழ்ந்திருக்கும் இளைஞர்களை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது......

  ReplyDelete
 8. இவனையெல்லாம் நடு ரோட்டில் நிறுத்தி
  கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்

  ReplyDelete
 9. நாகரிக உலகம் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் திட்டுவதற்கு பயன்படுபவையாக அவை மாறியிருக்கிறது...

  ReplyDelete
 10. வணக்கம்

  நிச்சயம் தண்டனை கிடைக்கும்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 11. சகோதரி உங்கள் ஆதங்கம் சரியே என்ன சொல்ல என்று தெரியவில்லை...அதை அந்தக் குழந்தை கேட்பது போல் இருக்கின்றது.."நாங்க என்ன செய்ய எங்க்ள் எதிர்காலம் இப்படித்தானா" என்று

  சரி ஒன்று மட்டும் புரியவில்லை. இந்தப் பாட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது...சரி அப்படி என்றால் திரைப்படங்களில் இதற்கு முன்னும் பல அநாகரீகமான ஆபாசமான பாடல்கள் வந்திருக்கின்றனவே...அதையும் எல்லோரும் எதிர்க்கலாமே எதிர்க்க வேண்டுமே...

  ReplyDelete
 12. சரிதான் கீதா.. அமைதியாய் இருக்கிறது இச்சமூகம் என்று நினைத்துத்தான் வக்கிரத்தை அதிகரிக்கிறார்கள். இப்பொழுதாவது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்வோம்

  ReplyDelete

 13. வணக்கம்!

  பொல்லாப் பொறுக்கிகள் கொண்ட புழுத்தலையைக்
  கல்லால் அடித்தே கழட்டு!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
 14. இவனைப் போன்றவர்களுக்கு தக்க தண்டனையளிக்கவேண்டும். செய்வதையும் செய்துவிட்டு அகங்காரப் பேச்சு வேறு. மொத்தத்தில் வளர்ப்பு சரியில்லை.

  ReplyDelete
 15. "பொல்லாப் பொறுக்கிகள் கொண்ட புழுத்தலையைக்
  கல்லால் அடித்தே கழட்டு!" என்ற
  பாட்டரசர் கி.பாரதிதாசன் அவர்களது
  அடிகளையே நினைவூட்டுகிறேன்!

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 16. உங்கள் ஆதங்களுக்குக்கு சீக்கிரம் கிடைக்கவேண்டும் என்பதே என் போன்றோர் ஆவல்...நடக்கும்....

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget