World Tamil Blog Aggregator Thendral: ippadiyum seyyalaamee-இப்படியும் செய்யலாமே

Thursday 22 October 2015

ippadiyum seyyalaamee-இப்படியும் செய்யலாமே

தமிழர் திருமணம்

-நாம் அட்சதைத்தூவ அரிசியைப்பயன்படுத்துவதில்லை....அதனால் நெல்லை தருகின்றோம் நெல் போல் தழைத்து வாழ்க என வாழ்த்துங்கள் என்றார்...தேவாரத்தையும் ஆழ்வார் பாசுரங்களையும் இனிமையாகப்பாடிய படி..மணமக்கள் திருமணம் முடிந்து மேடையில் இருந்து இறங்கி அனைவரையும் நோக்கி வணங்கியபடி வர அவர்களை மனதார வாழ்த்தி நெல்லைத்தூவினர் அனைவரும்..
அம்மி என்பது தாய்க்குச்சமம்..குழவி என்பது குழந்தையாகக்கருதப்படுவதால் தமிழர்கள் அம்மி மிதிப்பதென்பது ஆறாயிரம் வருடங்களுக்கு முன் வந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டது....அதனால் நாம் இன்று அம்மியைப்போற்றி வணங்கி மகிழ்கின்றோம்..என்றார்...

செம்புலப்பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற சங்க இலக்கியப்பாடலைப்பாடி மணமக்களை மாலை மாற்றி கொள்ளச்சொன்ன போது மனம் நெகிழ்ந்து போனது...

தாய்த்தமிழ் பள்ளி வைத்து நடத்திய ,தமிழ் மேலும் தமிழர் மேலும் அக்கறை கொண்ட ,கைவினையும் கலைநயமும் ஒருங்கே கொண்ட,அக்யுபஞ்சர் மருத்தவராக பலகலைகளிலும் திறமையுள்ள அக்கா புவனேஸ்வரியின் அன்பு மகள் பொன்னீஸ்வரிக்கு இன்று திருமணம்...நிறைவாக நடந்தது...என்ன சொல்றாங்கன்னே புரியாமல் திருமணம் செய்வதை விட நமக்கு புரிந்த தாய்மொழியில் வாழ்த்தி திருமணம் செய்வதென்பது மனநிறைவான ஒன்று...
விருந்தில் குட்டிச்சட்டியில் வைத்த தயிர் நம் மண்ணின் மணத்தைக்காட்டியபடி வைக்கப்பட்டது...எதிலும் புதுமை விரும்பும் அக்கா தன் மகளின் திருமணத்திலும் புதுமை செய்து மனத்தில் நிறைந்து விட்டார்..

7 comments :

  1. வணக்கம்
    புதுமணத் தம்பதியினர் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன். த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தமிழ் முறைப்படி திருமணம் என்று இது போன்று என் குடும்பத்திலும் நடந்திருக்கிறது கீதா. ஆனால் எங்க அம்மா என் திருமணமும் இப்படி நடக்கணும்னு ஆசைப்பட்டாங்க... ஆனா எங்க அப்பா, மாமனார் இருவரும் மேடையில் பேசி தாலி எடுத்து கொடுத்து கட்டச் சொல்லி ஐந்து நிமிடத்தில் திருமணத்தை நடத்தி முடித்து விட்டனர்.

    ReplyDelete
  3. வியப்பு தான் சகோதரி... புதுமை தொடர வேண்டும்...

    ReplyDelete
  4. மணமக்களை வாழ்த்துவோம்
    திருமதி புவனேசுவரி அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்
    போற்றுவோம்
    தம +1

    ReplyDelete
  5. எங்களது நண்பர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி தன் மகனுக்கு இவ்வாறே திருமணம் செய்தார். இவ்வாறான ஒரு திருமணத்தைப் பற்றிய பதிவினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. தமிழ் திருமணம் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. வித்தியாசமான திருமணம்தான்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...