World Tamil Blog Aggregator Thendral: 18.10.15 வீதி கூட்டம்-20

Monday 19 October 2015

18.10.15 வீதி கூட்டம்-20

வீதி கலை இலக்கியக்களம் .கூட்டம் 20
-------------------------------------------------------------
18.10.15 அன்று வீதியின் 20 ஆவது கூட்டம் மிகச்சிறப்பாக புதுகை ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் நடந்தது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையேற்றார்.










மதுரையில் இருந்து வந்து சிறப்பு விருந்தினராக கவிஞர் மா.காளிதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்...அவர் தனது உரையில் வீதி கூட்டம் என்பது நாலு பேர் கலந்து கொண்டு சாதாரணமாக நடக்கும் கூட்டமாக நினைத்தேன் ஆனால் இங்கு முறையாக கவிஞர்களை, கட்டுரையாளர்களை,சிறுகதையாசிரியர்களை அவர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்களைக்கூறி தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் களமாக அமைந்துள்ளதை பார்த்து வியக்கிறேன் என்றார்.கவிதை குறித்து பேசுகையில் தனக்கு பிடித்த கவிதைகளைப்பற்றிய ஒப்பீடு செய்து கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது..

திருச்சி பாரத மிகுமின் தொழிலக முத்தமிழ்மன்ற நிர்வாகிகள் மற்றும் அதன் பொதுச்செயலாளர்..திருமிகு மணிவண்ணன்  ஆகியோர்  முத்தமிழ்மன்றத்தின் சார்பாக விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



கவிதை வாசித்த கவிஞர் சுகன்யா ஞானசூரி இலங்கை மக்களின் வேதனையைக்குறித்தும்,தமிழ்மொழியின் மேல் கொண்ட அக்கறை கொண்ட கவிதைகளைத்தந்து கூட்டத்தினை  சிறப்பான இடத்திற்கு நகர்த்தினார்..அவரின் கவிதைகள் குறித்து விவாதிக்கப்பட்டது..


சிறுகதை-

 “மீண்டும் அகிலன்”என்ற அடர்த்தியான செறிவான கதையை கவிஞர் மாலதி அவர்கள் வாசிக்க அக்கதையின் உண்மை அனைவர் மனதிலும் தைத்தது..அவரின் முதல்கதை அனைவராலும் நேர்மறையாக விமர்சிக்கப்பட்டது...

கட்டுரை

”இரவின் பாடல் “என்ற இரவு குறித்த கட்டுரையைக் கவிதை நடையில் நடைச்சித்திரமாய் ..காட்சிப்படுத்தி அனைவர் மனதையும்  கவர்ந்த சுரேஷ் மான்யாவை அனைவரும் பாராட்டினர்...இன்னும் அவரது திறமைகள் குடத்திலிட்ட விளக்காக இருப்பதைக்கூறி..குன்றிலிட்ட விளக்காக அவரின் திறமைகள் ஒளிவீச வாழ்த்தினர்...

நூல் விமர்சனம்-

கி.ரா.வின் “பெண் கதைகள்”குறித்து கவிஞர் ஸ்டாலின் சரவணன் விமர்சனம் செய்தார்.அந்நூலில்  மூன்று கதைகள் குறித்து கூறுகையில்  ”பேதை “என்ற பேச்சி என்ற பென்ணின் கதை அனைவர் மனதிலும் ஊடுறுவி மனதை கீறிச்சென்றதை உணரமுடிந்தது...மீளாது தவிக்க வைத்தாள் பேச்சி..இரண்டாவது கதையில் கொண்டையா மல்லம்மாவின் கூடலுக்கான தவிப்புகளை அதற்கே உரிய மனநிலையில் கதை ஆசிரியரை விட ஸ்டாலின் கூறி அசத்தினார்...இவருக்குன்னு கிடைச்சிடுது ....காதலைக்கூறாமல் கூறத்தவிக்கும் கதைகள்...

சென்ற வீதிக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்ட கவிஞர் .முத்துச்சாமி அவர்களுக்கு தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் அளித்து மாதாமாதம் ரூ5000 உதவித்தொகை அளித்திருப்பதைக்கூறி வீதிக்கூட்டம் சிறப்பான பாதையில் செல்வதை அடையாளங்காட்டினார்..அவரை அழைத்து வந்து எங்கட்கு அறிமுகம் செய்த சென்ற மாத வீதி கூட்ட அமைப்பாளர் கவிஞர் செல்வா..

வலைப்பதிவர் விழாவில் நேரலை ஒளிப்பரப்பிற்கு காரணமான  யுகே கார்த்திக் ,முகுந்த்.புனிதா.நீலா,அமிர்தாதமிழ்,அப்துல் ஜலீல் மற்றும் நாகநாதன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது...

விழாவில் அறிவிப்புகளாக எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களின் நூல் வெளியீடு 24.10.15 அன்று புதுகை நில அளவையர் சங்கத்தில் நடக்க உள்ளதையும்,வாசிப்பு இயக்கம் குறித்த பயிற்சி 24,25 ஆகிய நாட்களில் நடக்க உள்ளதையும் அறிவித்தார்கள் சுராவும் கவிஞர் நீலாவும்.

இம்மாத விழா ஒருங்கிணைப்பாளர்களான அப்துல் ஜலீல்,அமிர்தா இருவரும் மிகுந்த சிரத்தையுடன் விழாவை நடத்தியது அருமை...எல்லோருமே மறந்து விட்ட அஞ்சலட்டையில் விழாவிற்கு அழைப்பு அனுப்பி நினைவுகளை கடிதக்காலங்களுக்கு அனுப்பியமைக்கு இருவருக்கும் நன்றி...



10 comments :

  1. அருமையான தொகுப்பு கீதா.
    கடந்த மாத நிகழ்வு பற்றிச் சொன்னவர் படத்தின் கீழ் கடந்தமாத அமைப்பாளராக என்னும் சொற்றொடருடன் கவிஞர் செல்வா பெயரைச் சேர்க்கலாம். திருச்சியிலிருந்து வந்த நண்பர்கள் பாரத மிகுமின் தொழிலக முத்தமிழ்மன்ற நிர்வாகிகள் அதன் பொதுச் செயலர் திரு மணிவண்ணன் தலைமையில் வந்திருந்தனர் என்பதையும் குறிப்பிடலாம். (ஏதேது வரவர வீதி, புதுக்கோட்டை தாண்டியும் போய்க்கிட்டிருக்கு..! )

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா வீதி வளர்கிறது...சேர்த்துட்டேன்..அண்ணா,,

      Delete
  2. சிறப்பான விழாவை நிகழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அக்கா..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..இது அனைவராலும் நிகழ்கின்றது சகோ..

      Delete
  3. உங்களின் இலக்கியப் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சிறப்பான முறையில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மேலும் நிகழ்வுகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால் ஒருநாள் நீங்களும் வாங்க....

      Delete
  5. வாழ்த்துகள் பாராட்டப்படவேண்டியவர்களை தக்க தருணத்தில் வாழ்த்துவதே நன்று
    தமிழ் மணம் 2

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...