World Tamil Blog Aggregator Thendral: வலைப்பதிவர் சந்திப்புக்கு டிக்கெட் பதிவு பண்ணிட்டீங்கத்தானே?

Tuesday, 29 September 2015

வலைப்பதிவர் சந்திப்புக்கு டிக்கெட் பதிவு பண்ணிட்டீங்கத்தானே?


இங்க பார்றா..


சிவாஜியின் திறமையும்....நடிப்பும் யாருடனும் ஒப்பிடமுடியாத ஒன்றுல.

மாபெரும் அந்தமேதைக்கு பிரெஞ்ச் அரசாங்கம் அந்நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது நம்ம நடிகர்திலகம் சிவாஜிக்கு கொடுத்த போது உலகே வியந்தது.


பாரதரத்னா விருது கொடுக்கலன்னு எல்லோரும், சிவாஜிக்கு இந்தியா  மதிப்பு கொடுக்கலன்னு  வருத்தப்பட்டார்களாம்....அதற்கு ஒருவர் ,நடிகர் திலகம் சிவாஜியே ஒரு பல்கலைக்கழகம்...அவருக்கு ஏன் விருது...?

பல்கலைக்கழகம் தான் மற்றவர்களுக்கு விருது கொடுக்க வேண்டுமே தவிர ..பல்கலைக்கழகத்திற்கு யாரும் விருது கொடுக்க முடியாது....

இது எதுக்குன்னா...தினம் தினம் பதிவர் பணி கூட்டம்,வீதி கூட்டம் ,முழுநிலா முற்றம் என்ற ஓட்டத்தில் .

போட்டில எப்படியாவது கலந்துக்கனும்னு ...புத்தகங்கள் புடை சூழ எழுத

அமர்ந்த போது நிலவன் அண்ணாவின் அழைப்பு.
..என்ன கீதா
பண்றீங்க?....கட்டுரை எழுதலாம்னு உட்கார்ந்தேன் அண்ணா...

அப்படியா அத அப்றம் பாக்கலாம்.ஒரு சின்ன வேலை[இரவு விடிய விடிய செய்தேன் ] இருக்கு...அத முடிக்கனும் வாங்க என்றதும் எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு...போனா ...

கையேட்டுல கொஞ்சம் மாற்றம் இருக்கு ..மூணு பேரும் சேர்ந்து செஞ்சா முடிஞ்சிடும்னு...பதிவர்களின் பட்டியலை எனக்கு,வைகறைக்கு,அண்ணாக்கு என  மூணு பேருக்கும் பிரிச்சு  கொடுத்து எழுதிட்டு வாங்கன்னு சிரிச்சுக்கிட்டே..சொன்னாங்க...

போங்க அண்ணா நான் கட்டுரையே எழுதல இன்னும்னு சொன்னதுக்குதான் மேலே சொன்ன பல்கலைக்கழகம் ......பேச்சு....

நீங்க விருது கொடுக்குற இடத்துல இருக்கீங்க ..உங்களுக்கு எதுக்கு விருதுன்னு ,முதல்ல இத பாருங்கன்னு ...கொடுத்துட்டாங்க...

என்னடா சாக்கு கிடைக்கும்னு நானும் இருந்தேன்ல...பின்ன இப்படி போட்டிக்கு வந்த கட்டுரையெல்லாம் என்னை இந்த மிரட்டு மிரட்டுனா என்ன பண்றது....?

எப்படா ஜகா வாங்கலாம்னு இருக்கும் போது அண்ணாவும் இப்படி சொல்லிட்டாங்களா...அவ்ளோதான்...என் கூட ஜெயாவும் சேந்தாச்சு..

ஆத்தாடி அண்ணா சிரிச்சுகிட்டே, பாராட்டிக்கிட்டே வேலைப்பளு தெரியாதபடி செய்ய வச்சுடுறாங்க...வைகறை பாவம் இன்னும் அந்தப்பணியில தான்.அண்ணா அழைப்பிதழ்,கேடயம்னு அந்தப்பணியில் இருப்பதால் அண்ணாவின் பங்கையும் அவரே பார்க்கின்றார்...

சுற்றுலா போயிருக்குற ஸ்ரீமலை வந்ததும் கையேட்டுப்பணி முடிஞ்சிடும்ல..

                                         ஷீல்டு மாடல் வந்தாச்சு,அழைப்பிதழ் மாதிரி வந்தாச்சு...வேளை கிடுகிடுன்னு ஆரம்பிச்சாச்சு....கையேட்டுப் பணி தொடருது...

எதிர் நோக்கிய செலவில் பாதி நன்கொடை வந்துருக்கு..மீதியும் வந்துடும்...

விழா நடக்கும் இடம் குறித்த வரைபடம் தயாரிப்பில் இருக்கு..விரைவில் அதுவும்..

பிறகென்ன ஆமா டிக்கெட் பதிவு பண்ணிட்டீங்கத்தானே..23 comments :

 1. ///பல்கலைக்கழகம் தான் மற்றவர்களுக்கு விருது கொடுக்க வேண்டுமே தவிர ..பல்கலைக்கழகத்திற்கு யாரும் விருது கொடுக்க முடியாது......

  இது கொஞ்சம் இடிக்குது போல இருக்குதே.... ஒரே ஒரு பல்கலைகழகம் இருந்தால் நீங்கள் சொல்வது சரி ஆனால் நிறைய பல்கலைகழகம் இருந்தால் அதற்கும் ரேட்டிங்க போட்டு தரம் பிரிப்பது மிக அவசியம் உலக ரேட்டிங்கில் நம் நாட்டு பல்கலைகழகம் மிக அருகில் கூட நெருங்க கூட முடியவில்லை என்பது வருத்தம் அளிக்க கூடிய விஷயம்

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றது சரிதான்...ஆனா அண்ணா கிட்ட பேசி வெல்ல முடியுமா....இருக்கட்டும் அவரிடமே இந்த சந்தேகத்தை கேட்டுவிடுகிறேன்...உங்கள கண்டுபிடிப்பதே சிக்கலா இருக்கும் போலவே...

   Delete
 2. ///ஒரு சின்ன வேலை[இரவு விடிய விடிய செய்தேன் ///
  அதுக்குதான் சொல்லுறது முத்துநிலவன் சார் சொல்லுறப்ப செய்யனும்கிறது. அப்படி இல்லாமல் நல்லா தூங்கிட்டு இரவு விடியும் நேரத்தில் செய்துவிட்டு விடிய விடிய எனப் போடும் போது நீங்கள் என்னவோ நீண்ட நேரம் செய்வது போல தோன்றுகிறது( உங்க மைண்ட் வாய்ஸ் : என்னடா இவன் இப்படி வந்து கழுத்தை அறுக்கிறான் என சொல்லுமே) ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. அய்யோடா அண்ணா இரவு 9 மணிக்குத்தான் அந்த வேலையையே கொடுத்தாங்க சார்...நீங்க வேற வேலை இருந்தா அத முடிச்சா தான் எனக்கு தூக்கமே வரும்....அதுவும் இவ்விழா மகிழ்வான சந்திப்பு ...அறிவிப்பு வந்ததுல இருந்து தூங்கியே பலநாள் ஆச்சுங்கோ..

   Delete
 3. ///நீங்க விருது கொடுக்குற இடத்துல இருக்கீங்க///
  விருது கொடுக்கிறது ஒருவர் மட்டும் இருக்க முடியாது பலர் இருப்பார்கள். அப்படி விருது கொடுக்கும் பலரில் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் விருது கொடுக்கலாமே

  ReplyDelete
  Replies
  1. அப்படி தேர்ந்தெடுக்க முடியாது சார்..ஏன்னா அனைவரும் சிறப்பா இருக்கும் போது...யார தேர்ந்தெடுப்பது....அதனால் அதுக்கு வாய்ப்பே இல்ல...ஆமா டிக்கெட் என்னாச்சு?

   Delete
 4. ஹாஹாஹா
  போட்டிக்குச் சில படைப்புகள் குறைஞ்சுடுச்சே... :(

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா ஆனா இன்னும் 24 மணி நேரம் இருக்குல்ல..வேலை எதுவும் தரலன்னா முயற்சிக்கின்றேன்..

   Delete
 5. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்...வந்துடுங்க..

   Delete
 6. நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
 7. தயாராகிவிட்டோம். புதுக்கோட்டையில் ஒன்றுகூடுவோம். அவ்வப்போதைய பணிகளைப் பகிர்ந்துகொள்ளும் விதம் நாங்களும் உடன் இருப்பதைப்போல உணர்த்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி...அய்யா.

   Delete
 8. மகிழ்வுடன் காத்திருக்கின்றோம் அய்யா..

  ReplyDelete
 9. நான் ஊரில் இருக்கிறேன் சகோதரி. விரைவில் குழுவோடு இணைந்து கொள்வேன். தங்களின் சுறுசுறுப்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும் சகோதரி.

  ReplyDelete
 10. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
 11. சரி எல்லோரும் போய் கலக்குங்க நாம இங்கேயே இருந்து பார்க்கிறோம். ஹா ஹா ...
  கையேட்டில போட்டியில எல்லாம் என் நாடு தப்பு மாற்றுங்கள் ok வா கனடா என்று. வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. ஓகேமா..நீங்க எல்லாம் வந்தா.....இன்னும் விழா சிறக்கும்மா...

   Delete
 12. உங்கள் அனைவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துகள்.

  போட்டிகளில் மட்டுமல்ல, விழாவிலும் கலந்து கொள்ள முடியாது..... அடுத்த பயணத்தில் புதுகைக்கும் வரும் எண்ணமிருக்கிறது. பார்க்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க மிக்க நன்றி சார்.

   Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget