World Tamil Blog Aggregator Thendral: வகுப்பறை சிரிப்பு

Thursday, 26 March 2015

வகுப்பறை சிரிப்பு

இன்று பள்ளியில் காலை முதல் படித்துக்கொண்டேயிருந்ததால் மாறுதலுக்கு நாடகம் நடிக்கலாமா என்றதும் குழந்தைகள் ஆர்வமுடன் குழுமினார்கள் .

முதலில் திருவிளையாடல் நாடகமாம்.பாண்டீஸ்வரி சிவனாகவும் சஃப்ரின் பானு பார்வதியாகவும் அமர குடுகுடுவென திருச்செல்வி மண்டிபோட்டு அமர்ந்தாள் இது யாரு என கேட்க அவள் தான் நந்தியாம்.முருகனுக்கு ஒல்லியான அருந்ததியும்,பிள்ளையாருக்கு சற்று பூசிய ஷெரின் பானுவும் உயிர் குடுத்தார்கள்.டஸ்டர் கட்டையை தூக்கி கொண்டாள் ஒருத்தி .ஏன் என்றதற்கு நாரதர் கையில் வைத்திருக்கும் கட்டையாம்.மயில் தோகை ஒன்றை ஒருத்தியின் தலையில் சூடி அவள்தான் முருகனின் வாகனமாம்.எனக்கு மாம்பழம் கொடுக்கலல்லன்னு கோச்சுகிட்டு முருகன் சுத்த போக பிள்ளையார் சுத்தி சுத்தி வசனத்த மறக்க பார்வதி மெதுவா வசனத்த சொல்லிக்கொடுக்க திடீர்னு நாடகத்துல ஔவைப்பாட்டி வந்து சுட்டப்பழம் வேணுமா இல்லாக்காட்டி சுடாத பழம் வேணுமான்னு கேட்க தலையில் அடித்துக்கொண்டார் நாரத டைரக்டர்.

இப்படியாக மூன்று நாடகம் முடிந்து நான்காவது நாடகத்தில் நடிக்க நடித்த அனைவரும் அமர்ந்து கொண்டு நடிக்காத குழந்தைகளை தள்ளினர்.ஏன்மா என்றதற்கு நாங்களே நடிச்சிட்டு இருக்கோம்ல அவங்களும் நடிக்கட்டும்னு என்றபோது அவர்களின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்வாயிருந்தது.மன வளர்ச்சி குறைவான பவித்ராவிற்கு ஒவ்வொரு வார்த்தையாக மனம் கோணாமல் சொல்ல வைத்து நடிக்க வைத்தார்கள்...திடீர்னு எந்தவித முன் தயாரிப்பும் இன்றி நடத்தப்பட்ட நாடகங்கள்...

வகுப்பு கலகலன்னு இருந்தது..யாருதான் இந்த பாடப்புத்தகத்த கண்டுபுடிச்சாங்களோன்னு இருக்கு...

5 comments :

  1. வணக்கம்
    மகிழ்வான கற்பித்தல்.. எப்போதும்.. மறக்க முடியாத சம்பவங்கள் தொடரருங்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நாடகம் நல்லதொரு நூற்பாடம்!

    ReplyDelete
  3. பாராட்டத்தக்கவேண்டிய முயற்சி. தொடருங்கள்.

    ReplyDelete
  4. பாடங்களுடன் இப்படி வித்தியாசமான கற்பித்தலும் இருந்தால் மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...