World Tamil Blog Aggregator Thendral: மாதொருபாகன்

Sunday, 1 February 2015

மாதொருபாகன்

மாதொருபாகன் நாவலுக்கு இத்தனை எதிர்ப்பு கிளம்பியதற்கு காரணம்....!?

எங்கே பெண்கள் எல்லாம் குழந்தை இல்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடி விடுவார்களோ என்ற அடிப்படை அச்சமே காரணமோ ?

ஆண்கள் குழந்தை இல்லை என்கையில் வேறு திருமணம் செய்து கொள்வது போல் பெண்களும் கிளம்பி விட்டால் என்ன செய்வது என்ற அச்சமே...உண்மையான விசயத்தை ஆத்திரமாக மறைக்கின்றதோ?

இதையே ஆண்கள் செய்வதாக எழுதியிருந்தால் இத்தனை எதிர்ப்பு கிளம்பியிருக்குமா?

அப்படி எதிர்ப்பதென்றால் முதலில் மகாபாரதம் எழுதியவரை அல்லவா எதிர்த்து....போராடியிருக்க வேண்டும்.

பெண்களுக்குத்தான் கலாச்சாரம் உண்டு போல தமிழினத்தில்...

பெண்குழந்தைகள் பாலியல் வன்முறையால் சிதைக்கப் படுவதைக் கேட்டும் ,பார்த்தும் ...மௌனமாய் இருக்கும் சமூகம் இப்போது மட்டும் கொதிப்பது ஏன்?

திரையுலகில் அரைகுறைஆடையில் வருவதை எதிர்க்காத சமூகம் இப்போது மட்டும் ஏன் கொதிக்கின்றது?

மதுவால் ஏற்படும் சீரழிவுகளைப் பார்த்து ரசிக்கும் சமூகம் இப்போது ஏன் கொந்தளிக்கின்றது?

16 comments :

  1. வணக்கம்
    தங்களின் ஆதங்கம் புரிகிறது... சொல்வது சரிதான்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நல்ல கேள்விகள்தான்...
    இப்போது வாசிக்கிறேன்...
    புனைவை வரலாறு என்று காட்ட நினைப்பதாகப் படுகிறது.
    முடித்து விட்டுச் சொல்கிறேன் அக்கா.

    ReplyDelete
  3. அருமை சகோதரி! இதையேதான் நாங்கள் எங்கள் "வாயை மூடிப் பேசவும்" பதிவில் சொல்லி இருந்தோம்....

    அருமையான கேள்விகள்...இந்தச் சமூகம் ஒரு போலி....

    ReplyDelete
  4. திருச்செங்கோட்டுக்காரர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள்.

    ReplyDelete
  5. நல்ல கேள்விகள்தான். ஆனால் பதில் இருக்கிறதா நம்மவர்களிடம்? சமுதாயம் மாற வேண்டுமெனில் முதலில் தனிமனிதன் மாற வேண்டும்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு! நல்ல கேள்விகள்...அதே பயம் தான்! இப்படி ஆண்கள் கத்துவதற்கு!

    ReplyDelete
  7. தங்களது கேள்விகளுக்கு பதில் கொடுப்பது கஷ்டமே,,,,,

    ReplyDelete
  8. கவிஞரே..
    நான் இதைத்தான் துளசிதரன் அய்யாவின் பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன் .
    பொன்னாளின் முடிவை எதிர்ப்பவர்கள் எல்லோரும் காளியின் கண்கொண்டு பார்க்கிறோம்.
    பொன்னாளின் மனம் அங்கு கவனிக்கப்படாமல் போய்விட்டிருக்கிறது.
    காலம்காலமாய்ப்படிந்துவிட்டிருக்கின்ற ஆணாதிக்க மனோபாவம்
    அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியுமா என்ன?
    நன்றி
    த ம கூடுதல் 1

    ReplyDelete
  9. தங்களின் ஆதங்கம் புரிகிறது சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  10. ****ஆண்கள் குழந்தை இல்லை என்கையில் வேறு திருமணம் செய்து கொள்வது போல் பெண்களும் கிளம்பி விட்டால் என்ன செய்வது என்ற அச்சமே...****

    யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. சட்டமும் இதை அனுமதிக்கிறது. புருஷனை விவாகரத்து செய்துவிட்டு தாராளமாக இன்னொருவரை மணக்கலாம் இல்லைனா அவருடன் வாழலாம். அதுதான் முறை! அதைவிட்டுப்புட்டு எதுக்கு இதெல்லாம்? என்பதே கேள்வி!

    இல்லை எங்களுக்கு இதான் பிடிக்கிது அப்படினா..அதையும் யாரும் எதுவும் செய்ய முடியாது.

    ஆனால், குழந்தையில்லாதவங்க எல்லாம் "சாமி பிள்ளை"தான் பெற்றார்கள். நான் போயி ஆராய்ச்சி பண்ணி கண்டறிஞ்சிட்டேன்..அப்படி வாழ்ந்து செத்த பிணங்களுடன் பேசி உண்மையை அறிந்துகொண்டேன் என்றால் "பைத்தியக்காரன் இவன்"னுதான் சொல்லுவாங்க..

    ஊரில் சொல்கிற கதை எல்லாம் உண்மை என்றால், அதைத்தான் நான் நம்புவேன் என்றால்..கார்திக் அம்மா தன் மகன் எப்படி இறந்தான் என்று சொலவது பொய்யாகும். அவர்கள் பைய்யன் இறந்தபோது என்ன நடந்தது என்று செந்தழல் ரவி சொன்ன ஜோடிக்கப்பட்ட கதைதான் உண்மை என்றாகும்.
    நீங்க தாராளமாக செந்தழல் ரவியின் கதையை உண்மை என்று வாதாடலாம். நான் கார்திக அம்மா சொலவதை நம்புவதில் உங்களுக்கு எதுவும் பிர்ரச்சினை இல்ல என்று ந்மபுகிறேன்.

    ReplyDelete
  11. ***இதையே ஆண்கள் செய்வதாக எழுதியிருந்தால் இத்தனை எதிர்ப்பு கிளம்பியிருக்குமா?***

    ஏன் எழும்பியிருக்காது???? நடிகர் கமலஹாசன் சட்டப்படி தன் மனைவியை விவாகரத்து ச்செய்ததற்குகூட ப்லவிதமான விமர்சனத்துக்கு ஆளாகவில்லையா என்ன? That too it was his personal life.

    இப்படி கேள்வி எழுப்பிவிட்டால் உடனே ஆம்பளை செய்ததெல்லாம்/செய்வதெல்லாம் நியாயம்னு எல்லாரும் சொல்கிறார்கள்/நம்புகிறார்கள் என்றாகிவிடாது!

    ReplyDelete
  12. ****அப்படி எதிர்ப்பதென்றால் முதலில் மகாபாரதம் எழுதியவரை அல்லவா எதிர்த்து....போராடியிருக்க வேண்டும்.***

    என்னவோ மகா பாரதத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டது போலவும், வியாசரின் கேவலமான சிந்தனைகளை எல்லோரும் சரி என்று ஏற்றுக்கொண்டு போற்றுவது போலவும் நீங்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

    இதை திரும்பத் திரும்பச் சொன்னாலும் கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கீர்கள்.

    மகா பாரத்தில் அசிங்கப்பகுதி வந்தால் அது அசிங்கம்தான். அது அழகாகிவிடாது. அதேபோல்தான் மாதொருபாகன் என்னும் மண்ணாங்கட்டியும்.

    உங்களால் ரசிக்க முடியுதா ரசிங்க. என்னால முடியலைனா என்னை ஏன் முறைக்கிறீங்க? ரசிப்பது உங்க உரிமைனா. ஜோடிக்கப்பட்ட உண்மைகளை உண்மை என்பதுபோல் காட்டுவதை எதிர்ப்பது தவறல்ல.

    அதை எப்படி எதிர்க்கிறதென்பதே விவாதத்துக்குரியது

    ReplyDelete
  13. ***பெண்குழந்தைகள் பாலியல் வன்முறையால் சிதைக்கப் படுவதைக் கேட்டும் ,பார்த்தும் ...மௌனமாய் இருக்கும் சமூகம் இப்போது மட்டும் கொதிப்பது ஏன்?***

    முன்னதுக்கு கொதிப்பவர்கள் பின்னதுக்கும் கொதித்தால்(லும்) தப்புனு நீங்க சொல்றதுதான் வேடிக்கை!

    ReplyDelete
  14. ***திரையுலகில் அரைகுறைஆடையில் வருவதை எதிர்க்காத சமூகம் இப்போது மட்டும் ஏன் கொதிக்கின்றது?**

    அதை எதிர்த்தாலும் எதிர்ப்பவனை காட்டுமிராண்டி, பெண் சுதந்திர்ரத்தை மதிக்காதவன்னுதான் சொல்றீங்க!

    ***மதுவால் ஏற்படும் சீரழிவுகளைப் பார்த்து ரசிக்கும் சமூகம் இப்போது ஏன் கொந்தளிக்கின்றது?***

    சும்மா பெ முருகனுக்கு வக்காலத்து வாங்கணும்னு இப்படியெல்லாம் கேள்விகளோட எழுதினால் நீங்க சொல்வதுபோல் எல்லாரும் ரசித்ததாக ஆகாது. நீங்க கண்ணைத் திறந்து உங்க வசதிக்கு ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இது தான் உலகம்னு வாழ்றீங்க. அவாளவுதான்!

    ReplyDelete
  15. நீங்கள் சொல்லும் ஆண் ஆதிக்கம், பெண் அடிமை என்பதற்காக இந்த நூல் எதிர்க்கப் படவில்லை. போராட்டம் முழுக்க முழுக்க ஜாதி, சமய அரசியல் சம்பந்தப்பட்டது மட்டுமே. ”சாமிக் குழந்தை” என்பதனை, நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சமூக நிகழ்வாக காட்ட முயன்ற நூலாசிரியர் பெருமாள்முருகன், தற்கால சமூக சூழலை (ஜாதீய உணர்வை) கணிக்கத் தவறி விட்டார்.
    த.ம.6

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...