World Tamil Blog Aggregator Thendral: பூங்கொடி

Saturday, 21 June 2014

பூங்கொடி

பூங்கொடி
------------------
சின்னக்கொடி நான்
சீராக வளரும் முன்னே
சீரழிச்ச கொடுமைய..
பார்த்துகிட்டு இருக்குமோ
தமிழினம்..

தூ..தூ...நீங்களும் உங்க
பண்பாடும்..

இலங்கையிலதானேன்னு
கண்டுக்காம விட்டீங்க..

சென்றாயன் பாளையம்னு
வேடிக்கை பார்க்குறீங்களே

பிள்ளையும் இழந்து
ஊர்கொடுமையும் தாங்குற
அப்பாவ தனியா போராட
விடுறீங்களே

 சீச்சீ நீங்கள்லாம்
மனுசங்கத்தானா

கொடுமைய கேட்காத பாவிகளே
உங்க வீட்லயும்
பெண்பிள்ளைக்கு வாராதோ
என் நிலைமை...

குடிசை ஓட்டையில்
நிலவைப்பார்க்க
தங்கையோட போட்டியிட்டு

கிழிந்த போர்வைக்குள்ள
அண்ணணோட தங்கையும்
சேர்ந்து தூங்கிய என்னை

கதவு இல்லாக் குடிசையில
காலன் போல வந்து
காமவெறி பிடித்த கும்பலொன்று

கதற கதற தூக்கிப் போய்
இருவர் கை பிடிக்க
இருவர் கால் பிடிக்க
அரக்கன் போல மேல் விழுந்தொருவன்
வளராதநெஞ்சுல
வாய வைத்துக் கடித்தான்
வலியோட கத்துனேனே
கொடூரன் விட்டானில்லையே

காலிடுக்கில்
ரத்தம் வர ரத்தம் வர
மாறி மாறி
ராட்சன்களாய் குதறி வச்சானுங்களே

அழக்கூடத்திராணியின்றி
மயங்கிவிழுந்தவளை
மிருகம் போல கடிச்சு
தூக்குல தொங்கவிட்டானுங்க...

இதுதான் தமிழன் பண்பாடா
சிறுகுழந்தை வாழத்தகுதியில்லா
தமிழ்நாட்டி பெருமையைப்
பேசாதீர் வாய் திறந்தினி...

ஊர்கூடித் துரத்திட
என் தந்தை பயந்தோட
துணைவந்தீரோ
தமிழர்களே
ஈழத்தேசமோ இது..?

அரக்கர் கூட்டமோ
அங்குமிங்கும் அலைகின்றது
அடுத்த சிறுமியைத் தேடி
காவலர்களுக்கும் பெண் குழந்தையுண்டு
காசு வாங்கி காமுகர்களை
சுதந்திரமாய்அலையவிடும்
 துரோகிகளைக் கொண்ட

தமிழ்நாடு தீக்கிரையாகி
அழிந்து போகட்டும்
மதுரை போல...
எரிந்து மடியட்டும்
இலங்கை போல..

 சேலம் அருகே சென்றாயன் பாளையத்தில் கதவு
இல்லாக் குடிசையில்தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்து தூக்கில்
தொங்கவிட்டுள்ளனர்.காமவெறிப் பிடித்த மிருகங்கள்.

9 comments :

 1. வணக்கம்
  கவிதையில் ஆதங்கம் புரிகிறது உணர்ச்சி மிக்க வரிகள் இப்படியான நாய்களை தெருவில் கட்டிவைத்து சுடவேண்டும்... இவர்களுக்கும் இப்படியா பிஞ்சு நெஞ்சங்கள் இருக்குத்தானே....கயவர்கள்...பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. இவர்களை நடுத்தெருவில் சுட்டுக் கொல்ல வேண்டும்! அப்போதுதான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் பயப்படுவர்!

  ReplyDelete
 3. கயவர்களின் உடல்களைச் சிறுசிறுத் துண்டுகளாக வெட்டி தமிழ்நாட்டில் வீசி எறியத்தான் வேண்டும்

  ReplyDelete
 4. அடிவயிற்றைப் பிசைகிறது கோரம்!
  தாங்கமுடியவில்லை எனக்கு....

  வரிகள் இதயத்தைக் கீறுகிறது கீதா... :’(

  ReplyDelete
 5. வெட்கப்படவேண்டிய, அனைவரும் தலைகுனிய வேண்டிய நிகழ்வு.

  ReplyDelete
 6. கண்ட துண்டமாக வெட்டி கழுகுக்கு இரையாக போடவேண்டும் பாவிகளை

  ReplyDelete
 7. படிக்கும்போதே.. நெஞ்தம் பதை பதைக்கிறதே,,, இவர்களையெல்லாம் பொது இடத்தில் கட்டி வைத்து துளித் துளியாக ஆசிட் விட்டே கொல்லவேண்டும் எனது சகோதரனாக, நானாக, இருந்தாலும்.

  ReplyDelete
 8. படிக்கவே முடியலையே.......எப்படி....

  ReplyDelete
 9. ஐயோ !!படிக்கவே முடியல்லை ..கேவலமான உலகில் வாழ்கிறோம் நாம்
  வெறி பிடித்த ஜென்மங்கள் அந்த கொடுரர்கள்

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...