World Tamil Blog Aggregator Thendral: வலைப்பதிவர்விழா கூட்டம்-7

Tuesday, 22 September 2015

வலைப்பதிவர்விழா கூட்டம்-7

22.09.15 இன்று மாலை 6 மணியளவில் நண்பா அறக்கட்டளையில்

வலைப்பதிவர் விழாக்குழு கூட்டம் நடைபெற்றது...

விழாவில் முக்கிய முடிவுகள் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டன.

அழைப்பிதழ் விரைவில் தயாராகிவிடும் முகவரி அனுப்பினால்  அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது...

வலைப்பதிவர்க் கையேடு தரமானவையாக வரவேண்டும் என்பதில் கவனமாக குழு உள்ளது.

கவிதைக்கண்காட்சிக்கு கவிதைகளை மைதிலியும் வைகறையும் தேர்வு செய்துள்ளனர்...ஸ்டாலின் ஓவியக்கண்காட்சிக்கு தயாராக உள்ளார்..

கையேட்டுக்குழு பொறுப்பிலுள்ள ஸ்ரீமலையப்பன்...அம்மா...கியூஆர் கோட் எல்லாருக்கும் தயாரிச்சாச்சும்மா...ஸ்கேன் பண்ணா வலைமுகவரிக்கு போய்டும்மா தானாகவே...என்று மலைக்க வைத்து விட்டார்....


உணவுக்குழு தலைவர் ஜெயா பேசிப்பேசி களைத்துப்போன எங்களுக்கு சிற்றுண்டி வாங்கி வந்து உணவு பட்டியலை வாசித்துக்கொண்ண்ண்ண்டே இருந்தார்....

பாவம் நிதிப்பொறுப்பாளர்...[நான் தான்] வந்த நன்கொடையெல்லாம்  உணவுக்குழுவிற்கே கொடுக்க வேண்டியிருக்குமோன்னு மகிழ்வான கவலையை உண்டாக்கிவிட்டார்..



எப்படா 11.10.15 வரும்னு இருக்கு அதுவரை தூக்கம் போச்சு அனைவருக்கும்...முத்துநிலவன் அண்ணா தான் பாவம்..ஆனா தகுதியான தலைமையின் கீழ் செயல்படுவது மிக மகிழ்வாக இருக்கு...ஒவ்வொரு செயலையும் விழாக்குழு உறுப்பினர்களை கேட்காமல் முடிவு எடுப்பதில்லை.

விரைவில் அழைப்பிதழுடன் சந்திப்போம்....



11 comments :

  1. உடனடியாக தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    கட்டுரைப்போட்டி எழுதி இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பார்க்கிறேன் நன்றி சகோ

      Delete
  2. கில்லர்ஜி.. நீங்கதான் கூட்டம் நடக்கும்போதே தொலை பேசினீங்களே..? எங்களுக்குத்தான் இந்த நினைப்புன்னா உங்களுக்கும் எங்க நினைப்புத்தானா..மிகவும் மகிழ்ச்சி..
    கீதா..இந்தப் படத்தை எப்ப புடிச்சீங்க..நா(ங்க) கவனிக்கவே இல்ல.. படமும் பதிவும் அருமை! தொடருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. வரலாறு முக்கியம்ல...

      Delete
  3. எப்படா 11.10.2015 வரும் என்று நாங்களும் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாயிற்று...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

    புதுக்கோட்டை விழாக்குழு சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  6. தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  7. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...