Monday, 23 November 2020
உவமைக்கவிஞர் சுரதா
Wednesday, 18 November 2020
சிறகுகள்
Thursday, 12 November 2020
சூரரைப் போற்று
Sunday, 25 October 2020
வீதி கலை இலக்கியக் களம் 77
Friday, 23 October 2020
உலகப் பெண்கவிஞர் யார் ? எவர்? தொடர் 1
உலகப் பெண் கவிஞர் -யார் எவர் ?
கவிஞர் மாயா ஏஞ்சலோ.
அமெரிக்கப் பெண் எழுத்தாளர் .கவிஞர் ,சமூகச் செயற்பாட்டாளர்
,நடிகை,பாடகி,பத்திரிக்கையாளர்,திரைப்படைப்பாளர் என பன்முகமாய் இயங்கியவர்.கறுப்பெழுத்தின்
முன்னோடிமார்ட்டின் லூதர் ,மால்கம் எக்ஸ் ஆகியோருடன் சமூக இயக்கங்களில்
பங்கேற்றவர் .இனவெறிக்கு எதிராகப் போராடியவர் ஆறு மொழிகளுக்கு மேல் எழுதவும்
பேசவும் தெரிந்தவர் .எகிப்து கானா நாட்டுப்பத்திரிக்கைகளின் ஆசிரியராகப்
பணிபுரிந்த கவிஞர் மாயா ஏஞ்சலோ அவர்கள் ....
அவரது கவிதைகள் அறச் சீற்றம் நிறைந்த சொற்களால் நிறைந்தவை, அவரது வாழ்வின்
துயரத்தை காட்டும் கண்ணாடி. தனது ஏழு வயதில் தாயின் நண்பரால் பாலியல்
வன்புணர்வுக்கு ஆளானபோது குடும்பத்தின் அன்பின் வலியில் அழுகுரலோடு தன்னை
புதைத்துக்கொண்டாள். தனது குரல் அந்த மனிதனை நான்கே நாட்களில் கொன்றுவிட்டது
என்பதை ஏற்க முடியாது ஆறு ஆண்டுகள் மௌனச் சிறையில் மூழ்கினாள். ஆறு ஆண்டுகால
வாசிப்பு அவருக்கு மனித குலத்தின் உயிர் நாடியை உணர்த்தியது. பதினான்கு வயதில்
அநீதிக்கு எதிராக, சொற்களை கொண்டே போர் தொடுக்க முடியும் என்பதை புரியவைத்தது.
"I know why the caged bird sing (1969)".
என்ற சுயசரிதை நூலை அடுத்து
ஒன்பது நூல்களில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.
·
Life
doesn't frighten me (1993).
·
My
Painted House, My friendly chicken and me (1994).
·
Kofi and his magic (1996).
·
ஆகிய நூல்களை குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்.அவரது முதல் சுயசரிதை நூல்
வன்கொடுமைக்கு ஆளான கறுப்பின பெண்ணின் வழியைக் கூறிய போது உலகே அவரைத் தாக்கியது
.நான் வன்முறையையும் ,அடக்குமுறையையும் வன்கொடுமைகளையும் இலக்கியத்தால்
எதிர்கொள்ளத்துணிந்தார் .
அவரது குரல் ஒடுக்கப்படுபவர்களுக்கான
குரல் ,குறுகிய கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டாலும் கீழ் வானத்தில் எனது
சிறகுகள் மிதக்கப் போவதில்லை என்பதை அறிந்தாலும் ,நான் எனது அலகைத்திறந்து பாட
முயற்சிக்கிறேன் .கூண்டுப் பறவைதான் என்றாலும் தான் பாட மறப்பதில்லை என்றவரின்
கவிதை கடத்தும் சோகம் படிப்பவர்கள் மனதில் உறைந்து நிற்கும் .
இன்றைய நவீன உலகில் பெண் உடல்
மாற்றப்பட்டுள்ளதை ,பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தனது சொற்களால் நெய்து
ஆயுதமாக்கினார் .
'உங்கள் கடுப்பான
,திரிக்கப்பட்ட பொய்களால்
வரலாற்றில் என்னை
வரைந்திருக்கலாம்,
பாழ்கதியில் என்னை நீங்கள்
மிதித்து
துவைத்திருக்கலாம் ,அப்படி
இருந்தாலும்
தூசிப்புழுதியாக ,நான்
உதித்தேழுவேன்'
என்று காலத்தால் அழியாத . விளங்குகின்றார் .
அவரது கவிதை வரிகள் ...
'கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்
சுதந்திரப்பறவை காற்று மீதேறித் தாவிப் பாயும்
விசை தீரும்வரை சமநிலை கொண்டு மிதக்கும்
ஆரஞ்சு வண்ண சூரியக் கதிர்களில்
தன் சிறகுகளை நனைக்கும் .
வானத்தை உரிமை கொள்ளும் தைரியம் பெறும்.
ஆனால் கூண்டுப்பறவை தன்
குறுகிய கூட்டுக்குள் அலைகிறது ......
என தொடரும் கவிதை அவரது வலியை காற்றில் எழுதி மனதில் உறைந்து நிற்கும் ..
அவரது நூல்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று ..
நன்றி .
உலகப் பெண் கவிஞர் யார் ? எவர்? தொடர் 2
உலகப் பெண் கவிஞர் யார்?எவர்?
கென்யா கவிஞர் வார்சன் ஷைர்.
அனைவருக்கும் வணக்கம் உலகில் புகழ் பெற்ற கவிஞர்களை
உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த மாதம் மிக இளமையான பெண்கவிஞரான வார்சன்
ஷைர்.சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988 இல் பிறந்தவர்.பிறகு இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்து
லண்டனில் வாழ்ந்து பிரிட்டனைத் தாயகமாக கொண்டு வாழ்கிறார் ...ஏனோ பிரிட்டனை தனது சொந்த நாடாக எண்ணமுடியவில்லை. தாய் நாட்டிற்கு செல்லும் ஆசை கனவாகவே
இருந்தாலும் அவர் தனது சோமாலிய ஆப்பிரிக்க மக்களின் வாழ்வியலை ,பண்பாட்டை ,அவர்களின் வலியை,அகதி வாழ்வின் துயரத்தை ,குறிப்பாக அகதிப்பெண்களின் தாங்கவியலா துன்பங்களைத் தந்து
எழுத்தால் உலகெங்கும் உணரச் செய்தார் .
இளம் வயதினராக இருந்தாலும் அவரது எழுத்தின்
வன்மை ஆப்பிரிக்க மக்களின் துயரத்தை ,வேதனையை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.தனது பூர்விக நாட்டு மக்களைப் பார்க்கும்
பொழுது எல்லாம் தனது மக்களின் பழங்கதைகளை கேட்டு அறிந்து எழுத்தில் பதிவு செய்கிறார்.எல்லா அகதிகளின் துயரங்களை தனது துயரங்களாக எண்ணி பதிவு செய்கிறார்
.”ஒன்று, நான் எந்த நபரைப் பற்றி எழுதுகிறேனோஅவரைப்பற்றி எனக்கு தெரியும் அல்லது நான் எழுதும் ஒவ்வொரு நபரும் நான் தான் .அவர்களின் ஆழ் மன அமைப்பை என்னால் கற்பனை
செய்து பார்க்க முடியும்”என்கிறார் வார்சன் ஷைர்.
தனது கவிதைகளுக்காக இளம் வயதிலேயே பல பரிசுகளையும், அவருக்கான
அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்.2013 இல் ப்ரூனெல் பல்கலைக்கழகம் உருவாக்கிய ஆப்பிரிக்கக்கவிதைப்
பரிசை அவருக்கு வழங்கியது.2014இல் லண்டனின் இளம் அரசவைக் கவிஞராக ஷைர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிரபல
பாப் பாடகி பியான்ஸே நோல்ஸ் 2019இல் வெளியிட்ட ’லெமனேடு’ஆல்பத்தில் வார்சன் ஷைரின்
கவிதை வரிகள் இடம்பெற்றன.
எவ்வளவு புகழ் கிடைத்தாலும் அவரது எளிமையை உலகம் பாராட்டியது. .அகதிகளின் குரலாகவே அவரின் கவிதைகள் முழங்கின.
குறிப்பிடத்தக்க கவிதையாக
“வீடென்பது சுறாமீனின் வாயாக இருந்தாலொழிய
யாருமே தங்கள் வீட்டை விட்டு
வெளியேறுவதில்லை”
என்ற வரிகள் அகதி வாழ்வின் அடையாள வாசகங்களாக உள்ளன.
2011 இல் அவர் எழுதிய
நூலின் பெயரே அவரின் காட்சியாய்”குழந்தைப்பெற்றுக்கொள்ள என் தாய்க்கு
கற்றுக்கொடுத்தல்”என்ற சிறிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்.அவரது கவிதைகள் அனைத்தும்
கட்டப்படாத பூக்களென மணம் வீசி வலம் வருகின்றன.ஒரு தொகுப்பைக்கூட போடாத ஒரு கவிஞர்
உலகப் புகழ் பெற்றுள்ளார் என்றால் அது வார்சன் ஷைர் மட்டுமே.ஏனெனில் அவரது
கவிதைகள் நேர்மையைச் சுமந்து தவறு செய்தவர்களைச் சுட்டெரித்தது.உண்மையின்
சுடரேந்தி துயரத்தின் வலியைக்காட்டியது..
தனிமைக்குறித்து”என் தனிமை மிகவும் நன்றாக இருக்கிறது. நீ
என் தனிமையைவிட நீ இனிமையாக இருந்தால்
நான் உனக்கு மட்டுமே வேண்டும் .”என்றார்.
மிக நீண்ட கவிதைகளில் ஒன்றாக
அசிங்கம்
உன் மகள் அசிங்கம்
அவள் இழப்பை அணுக்கமாக அறிவாள்,
முழு நகரங்களை வயிற்றில் சுமக்கிறாள்.
குழந்தையில் உறவினர்கள் அவளைத் தூக்கமாட்டார்கள்
அவள் உடைந்த மரம்கடல் நீர்
அவள் போரை நினைவுபடுத்துவதாக அவர்கள்
சொன்னார்கள்.
அவளது பதினைந்தாவது பிறந்த நாளில் அவளுக்குச்
சொல்லிக்கொடுத்தாய்
அவள் முடியை எப்படி கயிறு போலக் கட்டிக்கொண்டு
சாம்பிராணி புகைக்காட்டி வாட்டுவதென.
அவளை பன்னீர் கொண்டு வாய்க்கொப்பளிக்க
வைத்தாய்
அவள் இருமியபோது சொன்னாய்
உன்னைப் போன்ற மகாந்தொ
தனிமையாகவோ வெறுமையாகவோ வாசம் வீசக்
கூடாது.
நீ அவள் தாய்
ஏன் அவளை எச்சரிக்கவில்லை
அரிக்கப்படும் படகென அவளை அணைத்தபடி
அவள் கண்டங்களால் போர்த்தப்பட்டிருந்தால்
அவளது பற்கள் சிறு காலனிகளென்றால்
அவள் வயிற் ஒரு தீவென்றால்
அவள் தொடைகள் எல்லைகளென்றால்
ஆண்கள் அவளை நேசிக்கப்பொவதில்லையெனச்
சொல்லவில்லை.
எந்த ஆணுக்கு
உலகம் எரிவதைப் பார்க்க வேண்டும்
தன் படுக்கையறையில் படுத்தபடி ?
உன் மகளின் முகம் ஒரு சிறிய கலகம்
அவள் கைகள் உள் நாட்டுப்போர்
ஒவ்வொரு காதுக்குப்பின்னும்
ஒரு அகதிமுகாம்
அசிங்கமான விசயங்கள் இறைந்து கிடக்கும் உடல்
ஆனாள் கடவுளே,
அவ்வளவு அழகாக அணிகிறாள் அல்லவா
இந்த உலகை?
கவிஞர் வார்சன் ஷைர்.மேலும் அவரைப்பற்றி அறிந்து போற்ற
வேண்டுகிறேன்.
நன்றி
மு.கீதா
Thursday, 1 October 2020
மனிதம்
Sunday, 27 September 2020
தமிழன்பன் அவர்களின் பிறந்தநாள் விழா
Monday, 31 August 2020
பதில்கூறு
சித்தார்த்தன்
Thursday, 27 August 2020
வீதி
Wednesday, 26 August 2020
வீதி கலை இலக்கியக் களம்-75
Wednesday, 12 August 2020
பன்னாட்டுக்கவியரங்கம்
Sunday, 9 August 2020
தேநீர்
Monday, 3 August 2020
பன்னாட்டுக்கவியரங்கம்
பன்னாட்டு கவியரங்கம்
என் தலைப்பு'வயல்'
வயல் குறித்துக் கவிபாட
வரப்போரம் தேடினேன்.
பாலங்கள் விழுந்த ஒலி கேட்டதுண்டு
பாளம் பாளமாய் வெடித்த வயலின்
விம்மல் ஒலி கேட்டதுண்டா?
கேளுங்கள்.
வயலின் வலியிது.
ஏன் மறந்தாய் மனிதா?
எலும்பென வரப்பெடுத்து,
உதிரமாய் நீரெடுத்து,
என்மார்பு சுரந்து,கருப்பை பிளந்து
நிலையாய் ஓரிடத்தில் உன்னை
வசிக்க வைத்த
வயல் கேட்கின்றேன்.
பச்சை பட்டுடுத்தி
பசுங்கிளிகள் கவிபாட,
சேற்று நீரில் மீன் துள்ள,
ஒற்றைக்கால் குருகு பசியாற,
சற்றும் அயராது உழைத்த
உன் பாட்டனின்வியர்வையினை
தென்றலது துடைத்து விட.
அயர்வு கலைந்து ,அசதி கலைந்து
வருவோர் போவோர்க்கெல்லாம்
வரையாது பசிநீக்கி மகிழ்ந்தானே!
ஏன் மறந்தாய் மனிதா?
புரிகிறதா? புரிகிறதா?
வயல் அழித்து,
வரட்டு நாகரிகமென
நீ தேடி ஓடியதெல்லாம்,
இன்று உனக்கு எதிராக! எதிரியாக!
உணர்வழித்து,உணவிழந்து,
உறைகின்ற வீடாக்கி
மகிழும் மனிதா..
இனி எதை உண்ணப் போகின்றாய்?
கான்கிரீட் கற்களையா?
விவசாயப் புரட்சி என்றே
விளைநிலங்களை விடமாக்கினாய்.
தொழிற்புரட்சி என்றே
தொழிற்சாலை கழிவுகளை
என் கருப்பைக்குள் புகுத்தி
கருவறுத்தாய் .
ஏன் மனிதா?
அது மட்டுமா!அது மட்டுமா!
சுரங்கம் வெட்டி, சுரங்கம் வெட்டி
கனிமங்கள் அழித்தாய்-நான்
பாதுகாத்த புதையல்கள் அழிவதை
பார்த்தே நீயும் கடக்கின்றாய்.
சோழநாடு சோறுடைத்து.
சோறின்றி விவசாயி
எலிபிடித்து உண்டநிலை
ஏன் மறந்தாய்?
மீதமிருக்கும் மிச்ச நிலத்திலும்
மீத்தேன் எடுக்க அலையும்
கூட்டத்தோடு கூடியே களிப்பாயோ!?
வள்ளுவா
'சுழன்றும் ஏர் பின்னது உலகம்' என்றாய்.
பட்டறிவு, பகுத்தறிவு ஏதுமின்றி,
கெட்டநிலையறியாது
பறந்து பறந்து ஓடுகின்றான்.
ஒரு வீடு போதாது
இருவீடு,பலவீடென
ஊர்ஊராய்ச் சேர்க்கின்றான்.
ஒரு காரு போதாதென
கார்களாய் வாங்கிக் குவிக்கின்றான்.
வயலை விற்று கார் வாங்கி
கார்ப்பரேட் முதலாளிகளின்
கால்நக்கும் ஏவலாளியானான்.
உழவனோ கூலியாய்.
நீ தூங்கும் வீட்டினிலே,
நிச்சலமான நேரத்திலே,
விதை முட்டும் சத்தம் உணர்ந்தாயோ,
விதை முட்டி முட்டி
முளைக்க முடியாமல் மரித்தவற்றின்
ஓலங்கள் கேட்டாயோ!
உழவன் உயிர் துறந்தாலும்
உணவளிக்கும் வயல் மறவான்.
தொழுதென்னை
வணங்கியே பயிரிடுவான்.
தொண்டு காலமாய்
எனக்கும் அவனுக்குமென
அறுபடாத உறவை
அறுத்தாய் நீ!
காவிரித்தாய் கைவிரிக்க
கையேந்தி அலைகின்றான்.
கைகழுவினர்,
காலால் எட்டி உதைத்தனர்.
கோமனத்துடன் எனது மகன்
உருண்டு புரண்டு அழுதானே!
உணர்விருந்தால் அவனுக்காக
உயிர்க் குரல் கொடுத்திருப்பாய்.
உப்பிட்டுத்தான் உண்கிறாயா?
உணர்வின்றி அலைகிறாயா?
ஏன் மறந்தாய் மனிதா?
பசியென்று வந்தோரை வாழவைத்து
பாரெல்லாம் கொடை கொடுத்து
வாழ்ந்த மனிதா...
இன்று
பீட்ஸா ,பர்கர் உண்டு
பீஸ்பீஸாக அறுத்துக் கிடக்கின்றாய்
தடுக்கி விழும் இடத்திலெல்லாம்
முளைத்து விட்ட மருத்துவமனைதோறும்.
பாரம்பரிய உணவு மறந்தாய்.
பாரமானாய் உலகிற்கே!
தீநுண்மி உயிர் பறிக்க காத்திருக்க,
கூட்டுக்குள் புழுவென
வீட்டுக்குள் முடங்கினாய்.
அயல்நாட்டு விதை விதைத்து,
அன்னை வயலை மலடாக்கி,
அடுத்த வேளை உணவிற்கே
அந்நியரிடம் கையேந்தும்
நிலை தாழ்ந்தாய்.
தகுமா? இது தகுமா?
நன்றி.
மு.கீதா
புதுக்கோட்டை
தமிழ் நாடு
இந்தியா.
Wednesday, 29 July 2020
பன்னாட்டு கவியரங்கம்
Tuesday, 28 July 2020
Geetha's Tips Treat-you tube channel
Monday, 6 July 2020
கண்ணீர்
Saturday, 27 June 2020
வீதி கலை இலக்கிய களம்-73 இணையத்தில்
Thursday, 11 June 2020
வீட்டிற்கு வந்த உறவுகள்
Friday, 5 June 2020
தேர்வு
Tuesday, 2 June 2020
திரை விமர்சனம்
Wednesday, 13 May 2020
தப்பட் திரைவிமர்சனம்
Thursday, 2 April 2020
நூல் விமர்சனம்.-ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு
நூல் விமர்சனம்
#reading_marathan_2020_25
RM261
3/25
"ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு'
சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை.
ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்.
தமிழில்
அனிதா பொன்னீலன்.
புலம் வெளியீடு
விலை ₹170
பக்கம் 208.
தனது முதல் மொழிபெயர்ப்பு நூலிலேயே பிரகாசமான எழுத்தாற்றலின் மூலம் இந்நாட்குறிப்பை நமக்கு மிக அருமையாக மொழி பெயர்த்து உள்ளார்.ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்தால் மட்டுமே இந்நூலின் உணர்வினை நாம் புரிந்து கொள்ள முடியும்.அந்த வகையில் ஸ்லெட்டாவின் நாட்குறிப்பை நாமும் உணரும் வகையில் சிறப்பாக மொழி பெயர்த்து உள்ளார் திருமிகு அனிதா பொன்னீலன்.
ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு,ஆனி ஃபிராங்க் நாட்குறிப்பு பற்றி கேள்வி பட்டு உள்ள நிலையில் சராஜீவோவின் ஆனி ஃபிராங்க் என்று அழைக்கப்படும்" "ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு" படிக்கும் வாய்ப்பு...ஊரடங்கு போது கிடைத்தது.
கொரோனா அச்சத்தில் ஊரடங்கின் நாட்களில் நான் இந்த நூலை வாசித்தது முழுமையாக பதுங்கு குழியில்.... மூன்று மாதங்களுக்கு மேலாக வீட்டை விட்டு நகராத ஸ்லெட்டாவின் மனதை நுண்மையாக அறிந்து கொள்ள முடிகிறது.
யூகோஸ்லாவியா நாட்டிலிருந்து போஸ்னியாவும்,ஹெர்ஸகோவினாவும் விடுதலை அடைந்ததாக அறிவித்ததும், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரோஷியரும், இஸ்லாமியரும் விடுதலை பெற முயல ,அதை எதிர்த்து செர்பியர்கள் நடத்திய போரினை ஸ்லெட்டா தனது நாட்குறிப்பின் மூலம் நமக்கு காட்சிப்படுத்தி குழந்தையின் பார்வையில் போரின் தன்மையை உணர வைத்து மனதை அதிர வைக்கிறாள்.
வசதியான குடும்பத்தில் பிறந்து தந்தை வழக்கறிஞரான மாலிக், வேதியியல் வல்லுநரான அம்மா அலைகா இருவரின் ஒரே செல்ல மகளாக வசதியாக எந்த வித கவலையுமின்றி படிப்பு,இசை,பியானோ வாசித்தல், புத்தகம் வாசித்தல் ,வார இறுதியில் தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு சென்று மகிழ்வாய் இயற்கையை நேசிப்பவளாக, மக்கள் மீது தீராத அன்பை பொழிபவளாக ,வானொலி கேட்பவளாக.... ஸ்லெட்டா.
போர் எதற்காக ஏன் என்று கேள்வி கேட்பவளாக பத்து வயது சிறுமியான ஸ்லெட்டா நம்மை காலத்தின் பின்னே அழைத்து சென்று மனிதர்களின் கோர முகத்தைக் காட்டுகின்றாள்
ஆனி ஃபிராங்க் தனது நாட்குறிப்பிற்கு கிட்டி என பெயர் வைத்ததை அறிந்ததும் தனது நாட்குறிப்பிற்கு "மிம்மி" என பெயர் வைத்து தனது உணர்வுகளை எண்ணங்களை அதனிடம் பதிவு செய்கிறாள் ".மிம்மி" அவளுக்கு சிறந்த தோழியாக அமைதியாக அவளது சோக எண்ணங்களை நிரப்பப்படுவதற்காக பொறுமையாக காத்திருக்கின்றது.
குழந்தைகள் உயிரற்றவைகளுக்கும் பெயர் வைத்து உயிர்ப்பிக்கும் வல்லமையுடையவர்கள்.
செப்டம்பர் 1991 முதல் அக்டோபர் 1993 வரை எழுதப்பட்ட நாட்குறிப்பு நமக்கு செரஜீவோவில் நடந்த போரின் நிலைமையை கூறி மக்கள் படும் துயரங்களை எடுத்து உரைக்கின்றது.
குழந்தைகளுக்கே உரிய தன்மையுடன் எதற்காக இந்த போர்.?.ஏன்? எப்போது முடியும்? என தனக்குள் கேள்வி கேட்கிறாள்.வீட்டின் அருகேயுள்ள குன்றிலிருந்து வீசப்படும் குண்டுகளுக்கு பயந்து வீட்டின் அடிப்பகுதியில் இருட்டாக இருக்கும் நிலவறையில் அடிக்கடி செல்ல
நேரிடும் போதெல்லாம் எப்போது இந்த போர் முடிந்து நண்பர்களுடன் விளையாட முடியும்.... தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு செல்ல முடியும் என்று ஏங்குகிறாள்.
"போர் எங்கள் படிப்பிற்கு இடையூறு செய்து,பள்ளிகளை மூட வைத்து, குழந்தைகளை வகுப்பறைகளுக்கு பதிலாக பதுங்கு குழிகளுக்கு அனுப்புகின்றது . போர் வெறியர்களுக்கு அன்பைப் பற்றியோ, எதையாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையோ எதுவும் தெரியாது.எப்படி அழிப்பது, எரிப்பது, ஏதாவது பொருட்களை எடுத்து செல்வது என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும்."என மிம்மியிடம் பதிவு செய்கிறாள்.
போரின் விளைவாக படுகொலை, கொன்று குவிப்பு, பயங்கரம், இரத்தம், ஓலங்கள், கண்ணீர், பரிதவிப்பு....இவையே ஸ்லெட்டா அறிகிறாள்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வளமான வாழ்க்கை அழிந்து மின்சாரமின்றி, தண்ணீரின்றி,எரிவாயு இன்றி,உணவின்றி ரொட்டிக்கு ஏங்கும் நிலை ஏற்க முடியாத வேதனையாக உள்ளது. அவளுக்கு பிடித்த பிஸாவிற்காக மூன்று மாதங்களாக குழந்தை ஏங்குவதை எப்படி தாங்கிக் கொள்வது.
மஞ்சள் பறவை சிக்கோவும் ,சிஸி பூனையும் அவளுக்கு ஆறுதலாக இருந்து. இறந்து விடுகின்றன.
இந்த போர் அவளிடமிருந்து வருடக்கணக்கான வாழ்க்கையையும்,குழந்தைமையையும்,
முதியவர்களின் அமைதியான முதுமைக் காலத்தையும் திருடிச் சென்றுவிட்டதாக கோபப்படுகிறாள்.
ஒன்றுமறியாத பதினோரு வயது சிறுமி தனது வாழ்வில் விருப்பமின்றி நுழையும் போரின் காரணமாக தான் நேசிக்கும் நாட்டை, உறவுகளை,நண்பர்களை இழந்து தனிமையில் வாடி , அவள் நேசிக்கும் அற்புதமான பிள்ளை பருவத்தை அருவருப்பான போர் கொண்டு செல்வதை எண்ணி கதறுகின்றாள்.
அவளுக்கு போர் வாழ்க்கை பழகிவிடுகிறது.
அவள் எழுதிய நாட்குறிப்பு 1993 ஜுலை 17 நூலாக வெளியிடப்பட்ட விழாவைப் பற்றி மிம்மியிடம்(அந்த நாட்குறிப்பு) கூறுவது சிறப்பு.
அவளது தோழி மஜாவின் முயற்சியில்
செராஜீவோவின் பாதிப்பு மிம்மியால் உலகமெங்கும் அறியவைக்கப்படுகிறது.
மிம்மியை உலகமே நேசிக்கத் துவங்குகிறது.
ஸ்பெயின், பிரான்ஸ்,யு.எஸ்.ஏ., இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து ஸ்லெட்டாவை பேட்டி எடுக்க வருகிறார்கள்.
உலக அளவில் அவளுக்கு பேனா நண்பர்கள் கிடைக்கின்றார்கள்.அவர்களின் ஆறுதலான கடிதங்கள் போரின் நடுவே அவளுக்கு காலங்கழித்து கிடைத்தாலும் மகிழ்வைத் தருகின்றன.
நண்பர்களை இழந்து வாடும் அவளுக்கு அவர்கள் நல்ல நண்பர்கள் ஆகிறார்கள்.
இந்த அற்ப போர் விளையாட்டின் முடிவில் 15,000 பேர் பலி.அவர்களில் 3000 குழந்தைகள் என்பது ஏற்க முடியாத வன்முறை.50,000 பேர் நிரந்தரமாக வாழத் தகுதியற்றவர்களாகிறார்கள்.
இதற்கு நடுவே வருகின்ற பிறந்தநாள் விருந்துகள் மருந்தாக அமைகின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் ஆறுதலாக இருக்கின்றன.
குழந்தைகள் எப்போதும் போரை விரும்புவதில்லை.
ஸ்லெட்டாவை பேட்டி காணும் நிருபர் அவள் அருகே குண்டு விழுந்தாலும் கவலைப்படாமல் இயல்பாக இருக்கும் நிலை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
அவள் தன்னைத்தானே தேற்றி தன்னம்பிக்கையுடையவளாக இருக்கின்றாள்.
பெரியவர்களின் பேராசைக்கு குழந்தைகள் எல்லா நாடுகளிலும் பலியாகின்றனர்....
அவர்களுக்கான உலகத்தை எப்போது உருவாக்க போகின்றோம் என்ற எண்ணத்தை விதைக்கிறது மிம்மி.
மு.கீதா
புதுக்கோட்டை.