World Tamil Blog Aggregator Thendral: March 2016

Thursday, 31 March 2016

கவிஞர் நீலாவின் “அலையும் குரல்கள்”கவிதைநூல்

கவிஞர் நீலாவின் “அலையும் குரல்கள்”கவிதைநூல் ---------------------------------------------------------------

படித்து முடித்ததும் குடியும் ,குடித்தவனும் கண்முன் ஆக்ரோஷமாய் தலைவிரித்தாடும் காட்சி மனதில் நிழலாய்...

 போதையின் மயக்கத்தில் அவனும் அறியா அவனது நிலையை ,உணர்ந்தும் உணராதது போன்ற மாய நிலையை, மூளையை பிறழச்செய்யும் மதுவை ஆறென வீதியெங்கும் ஓடவிட்டு ,தனது அக்ரமங்களை அவனறியாமல் மூட நினைக்கும் அரசின் துரோகம் கண்முன் விரிகின்றது..

Tuesday, 29 March 2016

கவிப்பேராசான் மீரா விருது 2015

நன்றி நன்றி வளரி ஆசிரியர் குழுவிற்கு!

வளரி கவிதை இதழ்மற்றும்,சூல் வாசிப்புத்தளம் ஒருங்கிணைக்கும் கவிப்பேராசான் மீரா விருது 2015 வழங்கும் விழா

 நாள்:3.4.16 இடம்:மதுரை .நற்றிணை அரங்கு..[மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகில்]

 எனது அன்புத்தோழி தேன் மதுரத்தமிழ் கிரேஸும் நானும் 3.4.16 அன்று பெறுகின்றோம்..கிரேஸுடன் பெறுவதை பெருமையாக கருதுகின்றேன்.    


Monday, 28 March 2016

நான் சாவறதுக்கு முன்னே என் குழந்தைக செத்துடனும்ங்க

நான் சாவறதுக்கு முன்னே என் குழந்தைக செத்துடனும்ங்க
---------------------------------------------------------------------


”என் பேரு ஜான்ஸிராணிங்க.எனக்கு 13 வயசுல கல்யாணம் ஆச்சுங்க...நான் எங்க பாட்டி வீட்டுக்குதானே போறோம்னு ஜாலியா விளையாடிக்கிட்டு இருப்பேங்க.

15 வயசுல எனக்கு ஒருபெண் குழந்தை பொறந்துச்சுங்க....எனக்கு ஒண்ணும் தெரியாம நானும் அது கூட விளையாடிக்கிட்டே இருப்பேங்க...

கொஞ்சநாள் கழிச்சு தான் அந்த குழந்தைக்கு ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சுதுங்க...டாக்டருகிட்ட எல்லாம் கூட்டி போனேன்ங்க..கடைசில குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லன்னு சொல்லிட்டாங்க..

சின்ன வயசுல அந்த குழந்தைய பாத்துக்குற குழந்தையா நானும் வளர்ந்தேங்க...குழந்தன்னாவே பயம் வந்துடுங்க.
8 வருசங் கழிச்சு எனக்கு 2 ஆவதா ஒருஆண் குழந்த பொறந்துச்சுங்க...நல்லவேளையா அதுக்கு ஒரு குறையும் இல்லாம நல்லா வளர்ந்தான்ங்க்.

மூணாவதா ஒரு ஆண் குழந்த பொறந்துச்சுங்க.என் வேதனைய அதிகரிக்கிற மாதிரி அதுக்கும் மூள வளர்ச்சி இல்லன்னு சொல்லிட்டாங்க...இரண்டு குழந்தைகளையும் நான் தாங்க பாத்துக்கணும்...என் ஊட்டுக்காரரு இதுங்களுக்காக வெளியூர்ல போய் வேலை பாத்தாருங்க...அவருக்கு மஞ்சக்காமாலை வந்து இறந்து போய்ட்டாருங்க...

எங்க அம்மா அப்பாவ நம்பி நான் அவங்க கூட இருந்தப்ப அம்மா திடீர்னு பக்க வாதம் வந்து படுத்துட்டாங்க...மாசக்கணக்குல நான் தான் அவங்கள பாத்து இப்ப குணமாயிட்டாங்க...இரண்டு குழந்தைகள விட்டுட்டு நான் வேலைக்கும் போவ முடியலங்க..

வயசான அம்மா அப்பாவையும் நான் தாங்க பாத்துக்கிட்டு ,இந்த ரெண்டு குழந்தைகளையும் பாத்துக்க நான் படாத பாடு படுறேங்க.

எனக்கு ஒரே ஒரு ஆசைதான்க...நான் சாவறதுக்கு ஒருநாள் முந்தி இந்த புள்ளைங்க செத்து போயிடனும்க.ஏன்னா எனக்கு அப்றம் இதுகள பாத்துக்க ஆளே இல்லீங்கன்னு”

அந்த தாய் கதறிய போது வேந்தர் டிவி யின் இது உங்கமேடை பேச்சரங்கத்திற்காக வந்திருந்த திரைப்பட இயக்குனரும் நடிகருமான திருமிகு பாக்கியராஜ் கண்கள் கலங்க....என்னம்மா செண்டிமென்டிற்காக நாங்க கற்பனையா காட்சிய சேர்ப்போம். உங்க வாழ்க்கை இத்தை வலி மிகுந்ததா இருக்கேன்னு பதறினார்..
அதுவரை கலகலன்னு இருந்த அரங்கு கனத்த மௌனத்தில் சிறிது நேரம் உறைந்திருந்தது..

அந்த குடும்பத்திற்கு புதுகை கல்வி நிறுவனர்கள் ஒன்றிணைந்து ஒரு இலட்ச ரூபாய் தொகையும்,குடும்பத்திற்கு வேண்டியவற்றை செய்து தருகின்றோம் என்ற உறுதி மொழியும் தந்தனர்.
கவிஞர் தங்கம்மூர்த்தி &அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி அவர்கள் ரூ 10,000 கொடுத்து உதவினர்..மேலும் சிலரும் அவர்களால் முடிந்த தொகை கொடுத்த போது, என்னால் முடிந்த தொகை கொடுத்து, என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

இரண்டாவது மகன் கல்லூரியில் படிக்கின்றான்.
மற்ற இரு குழந்தைகளின் நிலையைக்காண சகிக்கவே முடியவில்லை.
என்னசொல்வதுன்னே தெரியல....
கண்கலங்கிய குழந்தையின் பாட்டியிடம் அழாதீர்கள்....என்று மட்டுமே என்னால் கூற முடிந்தது.







Sunday, 27 March 2016

வீதி கலை இலக்கிய களம் 25 ஆவது கூட்ட சிறப்பு நிகழ்வுகள்

வீதியின் வெள்ளிவிழா
------------------------------------
கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமை ஏற்க,

சிறப்பு விருந்தினர்களான

விகடன் பொறுப்பாசிரியர் திருமிகு பாரதி தம்பி ,

திரைப்படவிநியோகஸ்தர் திருமிகு பாலசக்தி வேலன் ,

வளரி இதழ் ஆசிரியர் திருமிகு அருணா சுந்தரராசன் மற்றும்

 திருமிகு .ஆக்ஸ்போர்டு சுரேஷ்  ஆகியோர் மேடையில் அமர விழா சிறப்புடன் துவங்கியது.

வரவேற்பு
கவிஞர் வைகறை தனக்கே உரிய நடையில் அன்பாக அனைவரையும் வரவேற்றார்....

அறிக்கை வாசித்தல்
கவிஞர் கீதா வீதி எவ்வாறு கூடியது,வீதியென பெயர் வந்த முறை,வீதியில் தலைமை பொறுப்பேற்றவர்கள்,கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள்,கவிதை,சிறுகதை,கட்டுரை வாசித்தவர்கள்,பாடல் பாடியவர்கள்,இலக்கியவாதிகளை அறிமுகம் செய்தவர்கள் போன்ற செய்திகளை தொகுத்து  அறிக்கையாக சமர்பித்தார்.வீதிக்கு இதுவரை வராதவர்கள் கூட வீதியைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் சிறப்புடன் இருந்தது.


Thursday, 24 March 2016

ஏன் செய்யல நாம்?

ஏன் செய்யல நாம்?

 கேரள மக்கள் தங்களின் பாரம்பரிய நடனமான கதக்களி மற்றும் களரி விளையாட்டை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் ,தங்களது பண்பாட்டை உலகு அறியச்செய்யும் வகையில்,சுற்றுலாத்தலமான மூனாறில் ஏற்பாடு செய்துள்ளதுள்ளனர்.

 அமெரிக்காவில் இசையரங்கில் மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா அவர்கள். இசையமைக்கும் பொழுது .ஒரு இசைக்கு மட்டும் அனைவரும் எழுந்து நடனமாடியதாகக் கூறியிருந்ததைப் படித்துள்ளேன்.

 அது என்ன இசை ?என அனைவரும் கேட்கையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய இசையான பறை என பெருமையாகக்கூறினாராம்..

















Tuesday, 22 March 2016

வீதி சிறப்புக்கூட்டம் -25

அன்புடன் அழைக்கின்றோம்....வந்துடுவீங்க தானே...
 வீதி கலை இலக்கியக்களம்
25 ஆவது சிறப்பு கூட்டம்
 நாள்:27.03.16
இடம் :நில அளவையர் கூடம்.புதுக்கோட்டை.              

                                      மதிப்பிற்குரிய எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர் திருமிகு அருள்முருகன் அவர்களின் சிந்தனையால் புதுகையில் தமிழ், கணினியில் புதிய வளர்ச்சியின் அடையாளமாக ,வலைப்பதிவர்களை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி அளித்தார்.இன்று வலைப்பதிவர் விழா சிறப்புடன் நடந்ததும்,புதுகையில் அறுபதுக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இருப்பதற்கும் அவர் அன்று விதைத்த விதையே காரணம்..

                                   அது மட்டுமின்றி சிறந்த இலக்கியவாதிகளை,படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற அவரது சிந்தனையில் தோன்றியது தான் வீதி என்ற அமைப்பு.இதற்கான பெயர் வைத்தலில் நிறைய பெயர்கள் இடம் பெற்றாலும் திரு.மகாசுந்தர் அவர்கள் புதுகையின் சிறப்பு வீதி என்பதால் வீதி என பெயர் வைக்கலாம் என்றதும் அனைவராலும் ஏற்கப்பட்டு வீதி நிலை பெறத்துவங்கி இன்று தனது 25 ஆவது வாரத்தை வெற்றியுடன் கொண்டாட உள்ளது.

 வீதியின் வளர்ச்சியுடன் தங்களை வளர்த்து கொண்டவர்கள் இன்று வீதியை கொண்டாடும் ஆவலில் உள்ளனர்.

வீதி நல்ல படைப்பாளிகளை,வாசகர்களை,கவிஞர்களை உருவாக்கிக்கொண்டு வருகின்றது...

 மகிழ்வுடன் அழைக்கின்றோம்...உங்கள் வருகையால் வீதி சிறக்கட்டும் ....
அனைவரின் கரங்களும் வீதியில் ஒன்றிணையட்டும்..

Wednesday, 16 March 2016

100% தேர்ச்சி

100% தேர்ச்சி
 100% தேர்ச்சி படுத்தும் பாடு....

இன்று கற்றலில் பின் தங்கிய குழந்தைகளை விசம் குடிக்கத்தூண்டுமளவு சென்றுள்ளது..ஏற்கனவே நூற்றுக்கு நூறு எடுக்க முடியாத மீத்திறக் குழந்தைகள் தற்கொலையை நாடும் சூழலில்,தற்போது படிக்க இயலாத குழந்தைகளை இந்த பாடு படுத்தும் நூறு சதவீத தேர்ச்சி முக்கியமாஎன்ற கேள்வி தோன்றுகிறது.
 முன்பெல்லாம் மாணவர்கள் சரியாகப்படிக்க வில்லையெனில் ஒரே வகுப்பில் இரண்டாண்டு படிக்க வைக்கும் முறையாக பாஸ் ,பெயில் என இருந்தது..அப்போது கற்றலில் பின் தங்கிய குழந்தைகள் இரண்டாண்டு படிக்கும் நிலை.

ஆனால் தற்போது ஒன்பதாம் வகுப்பு வரை பாஸ் என்பதால் அனைத்து குழந்தைகளும் பத்தாம் வகுப்பிற்கு வந்துவிடுகின்றனர். இச்சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100%தேர்ச்சி காட்டி வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சில தனியார் பள்ளிகள் அக்குழந்தைகளை மாற்றுச்சான்றிதழ் கொடுத்தோ அல்லது தேர்வு எழுத விடாமல் செய்வதோ போன்ற இரக்கமற்ற செயல்களை செய்கின்றன.இப்படி அவர்களை நீக்குவதன் மூலம் 100% பெற்று விட்டொம் என பறைசாற்றி கொள்கின்றன.


Sunday, 13 March 2016

சாம்பார்ல குளிப்பாட்டிவிடாதம்மா

சாம்பார்ல குளிப்பாட்டிவிடாதம்மா
----------------------------------------------------
நீண்ட நாட்களுக்கு பின் இரயில் பயணம் காலை உறவுகளுடன் சிதம்பரம் சென்று மாலை மாயவரத்தில் மீண்டும் திருச்சி வழியாக பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸில் பெண்களுக்கான பெட்டியில் ஏறினோம்.

கும்பகோணத்தில்...திமுதிமுவென கூட்டம் கூட்டமாய் பெண்களும், குழந்தைகளும் ,முதியவர்களும் ஏற ,பெட்டி மூச்சு விடத்திணறியது.

அக்கா தங்கை இருவர், நான்கு குழந்தைகள் மற்றும் அவர்களுடன் சிலர் மகாமகக்குளத்தில் குளித்து தர்மபுரிக்கு திரும்புவதற்காக ஏறினர்...ஏறும் பொழுதே சண்டைக்காரங்க குரல் போல் அதட்டலும் அதிகாரமுமாக இருந்த அக்கா,சட்டென்று நான்கு குழந்தைகளையும் எங்கள் இருக்கைக்கு மேல் இருந்த பைகள் வைக்கும் இடத்தில் ஏற்றி அமர வைத்தார்...அவர்கள் போட்டுருந்த செருப்புடன்...

சங்கடத்தில் நெளிய...ஆரம்பித்தோம்...ஏன்னா அப்பதான் கும்பகோண மகாமக குளத்தில் கலந்திருந்த கழிவுகளைப்பற்றி பேசி முடித்திருந்தோம்.

Friday, 11 March 2016

நாங்க கொடுக்கிறோம்மா.

நாங்க கொடுக்கிறோம்மா! ------------------------------------

கற்பித்தலின் போது எப்போதும் குழந்தைகளை படிக்கலன்னு தண்டிப்பது இப்போது இல்லை .

பணிக்கு சேர்ந்த புதிதில் அடித்து விட்டு ,நான் அழுவதைப்பார்த்து மாணவர்கள் ஏன் மிஸ் அழுவுறீங்க எங்க நல்லதுக்கு தானே அடிச்சீங்கன்னு சொல்வாங்க..இன்று அந்த மாணவர்கள் என்னுடன் தொடர்பில் மிகுந்த அன்புடன் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

27 வருட அனுபவம் குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்க கற்றுக்கொடுத்துள்ளது...
குழந்தைகளிடம் இருந்தும் நாள் தோறும் கற்றுக்கொண்டே வருகின்றேன். குழந்தைகளுக்கு என்ன படிக்க விருப்பமோ அதைப்படியுங்கள் என்று சொல்லி விடுவேன்.ஒருமதிப்பெண் வினா மட்டும் தான் என்றாலும் என்னைப்பொறுத்தவரை கற்றலில் பின் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஓகே தான்.
 குழுவாகப்படிக்கும் போது கண்காணிப்பாளராக மட்டும் என் செயல் பாடுகள் இருக்கும்.. படிப்பது அவர்களுக்காக தான் என்ற எண்ணத்தை எப்போதும் அவர்கள் மனதில் ஊன்றி விடுவேன். யாருக்காக படிக்கிறீங்கன்னு கேட்டால் கோரஸாக எங்களுக்காகன்னு பதில் வரும்.

 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு போறேன்மா.நான் இல்லன்னு படிக்காம இருக்க கூடாதுன்னு பாவமா கேட்டதும் இல்ல அம்மா நாங்களே டெஸ்ட் எழுதி படிக்கின்றோம்னு சொன்னாங்க...

 இன்று வகுப்புக்கு சென்றபோது குழுத்தலைவிகள் அருகே ஓடி வந்து அம்மா பரிசு கொடுங்கம்மான்னு சத்தம் என்ன பரிசுடான்னு கேட்ட போது .. அம்மா நாங்களே தேர்வு வச்சோம்மா...நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசு வாங்கிட்டு வந்திருக்கோம்மா நீங்க கொடுக்கனும்னு குழுத்தலைவிகள் சொன்ன போது கண்கலங்கி விட்டேன்...

 நீங்க தானே வாங்கி வந்தீங்க நீங்களே கொடுங்கன்னு சொன்னதும் அனைவருக்கும் பரிசளித்தனர்.





 இதில் வருடத்துவக்கத்தில் எதைப்பேசினாலும் மந்தமாகவே இருக்கும் முத்துலெட்சுமி கார்த்திகா,ஆஃப்ரின்,அகல்யா,அஸ்வினி,என்ற குழந்தைகளும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பரிசு வாங்கிய போது மனம் நெகிழ்ந்து விட்டேன்.

பரிசு என்னவோ பென்சிலும் ,லெட் பேனாவும் .,ரப்பரும் தான் என்றாலும் அதை கொடுக்கனும்னு தோன்றிய குட்டி மனங்கள் என் மனதை நெகிழச்செய்து விட்டனர்.

இதைவிட பரிசு வாங்கிய குழந்தைகள் எங்களுக்கு பரிசு கொடுத்த லீடருக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு பரிசு கொடுக்கிறோம்னு சொன்னது தான் ஹைலைட்... வேறென்ன வேண்டும்...எனக்கு...இதைவிட..