Wednesday, 31 August 2016

எங்கள வாழ விடுங்கடா

எங்கள வாழ விடுங்கடா

இப்பதாண்டா கல்வி கிடைச்சு மேல வர்றோம்

இன்னும் சுதந்திரமா பேச முடியலடா

இன்னும் அண்ணன் தம்பிக்குதாண்டா முன்னுரிமை

இன்னும் வேலை பார்த்தும் அப்பா அம்மாக்கு உதவமுடியலடா

இன்னும் இரவுகளில் மட்டும்ல பகல்ல கூட தனியா நடக்கமுடியலடா

காதலிக்க தெரியாம இல்ல..ஆனா
எங்க அப்பாஅம்மாவ காப்பத்தனும்டா
அதுக்குள்ள கட்டையால அடிச்சு
கத்தியால வெட்டி சாகடிக்குறீங்களே
உங்களுக்கு என்னடா பாவம் செய்தோம்

இதக்காரணம் காட்டி பொம்பளபுள்ளகல மறுபடி வீட்டுக்குள்ள முடக்கி போட்டுடுவாங்க பாவிகளா

உன் காதலுக்கு தீனியா எங்க உயிராடா நாய்களா...நாய் கூட பிடிக்கலன்னா தொட மாட்டேங்குதுடா ..
வெறி புடிச்ச காமாந்தகா...

எப்படிடா உங்கள சமாளிக்கிறது....
அவ ஆடை சரியில்ல அதான்னு சொல்றவங்க இதுக்கெல்லாம் என்ன சப்பை கட்டு கட்டுவாங்க...

Tuesday, 30 August 2016

நகை தேவையா இனியும் பெண்களுக்கு?

நகை தேவையா இனியும் பெண்களுக்கு?

யோசிக்க வேண்டிய விசயமாக இன்று நகை உள்ளதை அனைவரும் உணரவேண்டும்.
பெண்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக நகையும் உள்ளது என்பதை நாம் ஏற்கவே வேண்டும்.

இன்று காலை சன் செய்தியில் சென்னையில் கணவன் வேலைக்குச் சென்று விட,குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்ட பகல் நேரத்தில் தனியாக இருந்த பெண்மணியை வீட்டில் பகல் நேரத்தில் கொன்று 45 பவுன் நகையைக்கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

சென்ற வாரம் என் வீட்டின் அருகே உள்ள தெருவில் கடைக்குச்சென்று வீட்டிற்கு திரும்பிய பெண்மணியின் கழுத்து அறுபடும் படி செயினை அறுத்து சென்றுள்ளனர்..இத்தனைக்கும் அது கவரிங் செயின் தானாம்...மஞ்சள் நிறத்தில் இருந்ததால் அப்பெண்மணியின் கழுத்து அறுந்துள்ளது..

இன்னமும் நமக்கு நடந்தால் மட்டுமே நாம் மாறுவோம் என்று இருந்தால் ஒன்று உயிரை பலிக்கொடுக்க வேண்டும் அல்லது பல ஆண்டுகளாக உழைத்து சேகரித்து வாங்கிய நகையை இழக்க வேண்டும்.

நகை ஒரு சொத்து என்று கூறுவர் ஆனால் அதை பாதுகாப்பாக வங்கியில் வைத்து விட்டிருந்தால் இன்று அந்த பெண் இறந்திருக்க மாட்டாள்...ஆனால் தர்போது வங்கியும் பாதுகாப்பில்லை என்பதும் உண்மை.

ஆசிரியர் ஒருவர் காலையில் நடைபயிற்சிக்கு செல்லும் போது செயின் போடுவதில்லை மணி தான் போட்டுச்செல்கிறேன் என்றார்கள்...இது அவரது 7 பவுன் செயினை பறி கொடுத்த பின் வந்த அறிவு...

ஒருபக்கம் பெண்கள் தான் நகை போட்டால் தான் பெண்களுக்கு அழகு என்ற கருத்தை நகைக்கடைக்காரர்களும், சமூகமும், விளம்பரங்களும் மக்கள் மனதில் ஆழப்பதித்து விட்ட நிலையில் பெண்கள் ஒரு பாதுகாப்பிற்காக ,சொத்தாக,அழகிற்காக நகையை விரும்பத்துவங்கிவிட்டனர்..

ஆனால் அது அவர்களின் உயிரையே குடித்துவிடும் ஒன்றாக தற்போது மாறிவிட்டது..

நகை போடாத அயல்நாட்டு பெண்கள் அறிவால் அழகான பெண்களாகின்றார்கள் என்பதை நாம் நம்குழந்தைகளுக்கு உணர்த்துவோம்..நாமும் யோசிப்போம்..இனியும் நகை தேவையா என்பதை.

கஷ்டப்பட்டு சேர்த்த நகைகளை எப்படி பாதுகாப்பது என்பதையும் கற்போம்..



Monday, 29 August 2016

சிறகென

பார்க்காமலே
பேசாமலே
பழகாமலே
பிரியாமலே
வருந்தாமலே
வாழாமலே
சிறகென மிதந்திருக்கலாம்..


Sunday, 28 August 2016

வீதி கூட்டம் -30

                                                                             வீதி
                                               கலை இலக்கியக்களம் கூட்டம்-30

 வீதி கூட்டம் இன்று ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

வரவேற்புரை 

கவிஞர் ரேவதி அவர்கள்...

வந்திருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

தலைமை உரை
      
                      கவிஞர் மூட்டாம்பட்டி ராசு அவர்கள் 

வீதிக்கு தலைமை ஏற்று சிறப்பு செய்தார்.


அண்மையில் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு வீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தனது உரையில் மனிதமும் மனிதநேயமும் மிகச்சிறந்த கவிஞர்களும்,வளரும் கவிஞர்களும் கொண்ட அமைப்பாக வீதி திகழ்கிறது..புதுகைக்கவிஞரான கந்தர்வனின் கவிதைகள் தமிழ்நாடெங்கும் பேசப்படுவதைக்கூறினார்...

கவிதைகள்

 1]கவிஞர் மலையப்பன்
                    ”குறிலாய் மட்டுமல்ல
                    நெடிலாயும் எரிக்கின்றது
                    சா[தீ]தி.”
மேலும் குழந்தை பற்றிய கவிதை,விளைநிலம் பற்றிய கவிதை வாசித்து பாராட்டு பெற்றார்.

2] கவிஞர் செல்வகுமார்
              புதுகையில் பேசப்படக்கூடிய கவிஞர்களில் ஒருவர் மீரா.செல்வகுமார் அவர்கள் அவர்களின் கவிதை.

பற்றும் விரல் நீயெனக்கு...

”ஒரு பட்ட மிளகாய்
உப்புச்சட்டி
கழுவிய தண்ணீர்.
ஒடிந்து விழுந்த
முருங்கையின் கீரை..
என் பட்டினி
கொன்றவளே...
எப்போதும்
பசியள்ளித்
தின்றவளே...
ஓரெழுத்தும்
அறியாத
என் தாயே!
உன் விரல்
பட்டு
படர்ந்ததுதான்
என்
தலையெழுத்து..
---------------------------”
 என்ற அம்மாவின் கவிதையை வாசித்து வீதியின் பாராட்டுகளை அள்ளினார்.

3]கவிஞர் மீனாட்சி சுந்தரம்

                  “தாகத்திற்கு தண்ணீரானாய்
                     --------------------------------------
                    தாயாய் நீயிருக்க
                   அன்னையாய் நானிருக்க ...
என்ற மகள் பற்றிய கவிதையை வாசித்தார்.

நூல் விமர்சனம்

தமிழாசிரியர் குருநாதசுந்தரம் அவர்கள் 

                      எழுத்தாளர் பூமணியின் நூலான ,சாகித்திய அகாதமியின் பரிசு பெற்ற ”அஞ்ஞாடி “நூலை மிகச்சிறப்பாக ...திறனாய்வு செய்தார்.
எப்பேர்பட்ட வரலாற்று நூல் என்பதை அவரது விரிவான திறனாய்வு பார்வை எல்லோருக்கும் எடுத்துக்கூறியது...
நாம் வாசிக்கும் நாவல்கள் சமூகத்தேடல்களை உருவாக்குபவையாக இருக்க வேண்டும்,நாவலை வாசிக்கும் தன்மையை மூன்று வகையாக கூறலாம் .முதலாவதாக வெறுமனே வாசித்தல்,இரண்டாவதாக சமூகத்தோடு பொருத்திப்பார்த்தல்,மூன்றாவதாக நாவலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதான வாசிப்பு என்று கூறினார்.

தலித் இனம் பற்றிய பார்வை மிக மோசமானதாகவே இலக்கியங்களில் காட்டப்படும் ஆனால் பூமணி தலித் இனத்தைச்சார்ந்தவர்களின் உயரியத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக நாவலைப்படைத்துள்ளார்.கோட்பாடுகளில் அடக்க வேண்டுமாயின் சர்ரியலிச கோட்பாட்டில் இந்நாவல் அமைந்துள்ளது எனக்கூறி மிகச்சிறப்பாக ,அழகாக,விரிந்த பார்வையில் எடுத்துரைத்த விதம் ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்,நாவலைக்காணும் முறை ஆகியவற்றைக்கூறுவதாக அமைந்தது.
அவர் நாவலை அறிமுகப்படுத்திய போது வீதியே கண்சிமிட்டாமல் கவனித்து கொண்டிருந்ததை மறுக்கவியலாது..

முன்னிலை :கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் 




                       தனது உரையில் மூட்டாம்பட்டி ராசு என்றாலே அவரது இரு வார்த்தைகள் காலத்தால் அழியாது மனதில் பதிந்த ”தாகசுகம்”என்ற வார்த்தைகளை மறக்க முடியாதெனக்கூறி,தலித்தியம் என்பது அடித்தட்டு மக்களின் பார்வையிலிருந்து பார்க்கும் பார்வைதான் என்றும் ஆதவன் தீட்சன்யாவின் மழைக்காலம் பற்றிய கவிதையைக்கூறினார்.

ஆய்வுரை 

        முனைவர் மகா.சுந்தர் அவர்கள்

                ”வழக்குரைக்காதை ஒரு மீள்பார்வை”என்ற நோக்கில் அவரது ஆய்வை எடுத்துரைத்தார்..இளங்கோவடிகள் சமணத்துறவியாக சிலப்பதிகாரத்தில் வெளிப்படும் இடங்களையும்,படைப்பாளியாக வெளிப்படும் இடங்களை எடுத்துக்காட்டிய விதம் மிக அருமை.தற்கால வழக்காடும் முறை எப்படி அக்காலத்திலேயே இருந்ததை எடுத்துக்காட்டினார்.

பாண்டிய மன்னின் தீர்ப்பிலிருந்து 

                                       வழக்கு -யானோ கள்வன்?
                                       தீர்ப்பு -யானே கள்வன்!
                                       தண்டனை -கெடுக என் ஆயுள்!

புதுப்புது செய்திகளைப்படிக்க படிக்க தரக்கூடிய அறிவுச்சுரங்கமாக சிலப்பதிகாரம் இருந்ததை மிகச்சிறப்பாக ஆய்வுரையை நிகழ்த்தினார்.

கட்டுரை-புரட்சித்துறவி
                      தமிழாசிரியர் கு.ம.திருப்பதி அவர்கள் 


             தனது கட்டுரையில் தற்கால ஈஷா யோகா நிலையச்சீர்கேடும்,தனிமனிதனாக இறந்த தன்மனைவியைத் தூக்கிக்கொண்டு வந்த மனிதனின் நிலையுமே இக்கட்டுரை எழுதக்காரணம் என்று கூறினார்.

சுதந்திரத்திற்காகப் போராடிய வ.வே.சு அய்யர் அமைத்த ஆசிரமத்தில் தலித்களுக்கு தங்க அனுமதியில்லை...

அன்னிபெசண்ட் அம்மையாரால் நிறுவப்பெற்ற பிரம்மசமாஜத்திலும் அவர்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் 1800 நூற்றாண்டில் வாழ்ந்த வெள்ளாடை அணிந்த மாமுனி மனிதர்களுக்காக மனித நேயம் தழைக்க....வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்று உலகில் தேவை இரக்கம் ஒன்று மட்டுமே...அவர் பசிப்பிணியைப் போக்குவதையே முதன்மை நோக்கமாகக்கொண்டதற்கு காரணம் அக்காலத்தில் பஞ்சங்களால் மில்லியன் கணக்கில் மக்கள் இறந்ததால் பசி நோயைத்தீர்ப்பதையே அவரது குறிக்கோளாகக்கொண்டிருந்தார்.

உலகமெல்லாம்  ஒருமை என உலகையே ஒன்ராக நினைத்தவர் வள்ளளார் என்று மக்களால் அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் அவர்கள்

”கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்றார்.” அதனால் அவரது பெருமை அழிக்கப்பட்டுவிட்டது.
ரிக் வேதத்தில் பாவத்தின் பலன் பசி நோய் அதை நீ தீர்த்தால் நீயும் பாவியாவாய் என்கிறதாம்...

வேதம் ,மதம் ,சமயம்,சாதி அனைத்து பொய் என 1800 ஆண்டிலேயே கூறிய மகான் என்றும் தற்காலத்தில் மிகவும் அடிப்படைத்தேவையாக உள்ளது
                ”உயிர்களிடத்தில் காட்டவேண்டிய இரக்க குணம் ஒன்றே”என்றும் தனது கட்டுரையை மிகச்சிறப்பாக படைத்தார்.

சிறுகதை-கருகித்தளிர்த்த துளிர்.

கவிஞர் மாலதி அவர்கள் 


தனது சிறுகதையில் கருப்பொருளாக சிறுவயதில் பாதிக்கப்பட்ட குழந்தையை எடுத்துக்கொண்டு அக்குழந்தை வாழ்வின் சிக்கல்களைச்சந்தித்து வெற்றி பெறுவதை தனது சிறுகதையில் காட்டிய விதம் சிறப்பு.

பாடல் -கவிஞர் இந்துமதி

பாரதியாரின்”காக்கைச்சிறகினிலே”பாடலை இனிமையாகப்பாடி வீதிக்கு இனிமை சேர்த்தார்.

சிறப்பு விருந்தினர்-கவிஞர் விச்வநாதன் தஞ்சை 





தனது உரையில் பாலாவின் நண்பர்,பாலக்குமாரனின் நண்பர் என்றும் தன்னைக்கூறியதுடன்...கவிதைப்பற்றி கூறுகையில்
 “எது மனதில் நிற்கிறதோ அது கவிதை “என்றார்.இதுவரை 9 புத்தகங்கள் எழுதியுள்ளேன்,தமிழக அரசின் ஒரு புத்தகத்திற்கு வாங்கியுள்ளேன் என்றும் கூறி...எழுத்தாளர்கள் இக்காலத்தில் மதிக்கப்படுவதே இல்லை என்று தனது ஆதங்கத்தைக்கூறினார்.
வங்கதேசத்தில் கவிஞர்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள் என்று கூறிய போது பெருமையாக இருந்தது அந்நாட்டை நினைக்கும் போது.

வீதி இத்தனை மாதங்களாக செயல்பட்டுக்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்று பாராட்டினார்.

அறிமுகம் -
                     ”மேல் நாட்டு மருமகள்” என்ற படத்தின் 
இயக்குனர் ஷாஜகான் 
 வீதியால் புதுகைக்குப்பெருமையா?புதுக்கோட்டையால் வீதிக்கு பெருமையான்னு தெரியல என்று கூறி சிறிய கதை ஒன்றை கூறி தனது சினிமாத்தேடலைப்பற்றி ஒப்பீடு செய்தார்.
அவர் மகளுக்கு எழுதிய கவிதை கூறி மகிழ்ந்தார்.

பாராட்டு-கவிராசன் அறக்கட்டளை வழங்கும் நல்லாசிரியர் விருதைப்பெற உள்ள கவிஞர் மாலதியைப்பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

நன்றி திருச்சியிலிருந்து வந்து வீதியில்  கலந்துகொண்ட திருமிகு தமிழ் இளங்கோ மற்றும் கறம்பக்குடியிலிருந்து வந்து கலந்து கொண்ட ஆசிரியர்கள் இந்துமதி,சாமி ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி.

நன்றியுரை கவிஞர் பவல்ராஜ்

வீதிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

இம்மாதக்கூட்டத்தினை அமைப்பாளர்களான கவிஞர் பவல்ராஜ்,கவிஞர் ரேவதி ஆகியோர் மிகச்சிறப்பாக நடத்தினர்.அவர்களுக்கு வீதி தனது வாழ்த்துகளைக்கூறிக்கொள்கின்றது.






 

Saturday, 27 August 2016

மழை

தொட்டுச்செல்லும் சாரலும்
தொடாமல் ஓடும் மழைநீரும்
பட்டுதெறிக்கும் நீர்த்துளியும்
கப்பல் விடும் குழந்தைகளும் 
எதுவும் மாறவில்லை..
பாவாடை சட்டை
 புடவையானதைத்தவிர.....

Friday, 26 August 2016

என்ன செய்ய போகின்றீர்?

கொண்ட கவுண்டன் பாளையத்தில் மில்லுக்கு பிழைப்பு தேடி வந்த பீகார் குடும்பத்தின் எட்டுமாதக்குழந்தை பாலியல் வன்முறையால் பிறப்பு சிதைய ,மண்டை உடைந்து கிடந்த கோலம்...வேலைக்குச்சென்ற அப்பாவும்,குழந்தையைத்தூங்கவைத்து கடைக்குச் சென்ற அம்மாவும் செய்த பாவம் என்ன?



பிழைப்பு தேடி வந்தோம்
வாழ்விப்பீர்களென..

பிறந்த எட்டுமாத சிசு நான்
புணர்ந்த கொடூரனை
புதைத்திட மாட்டீரோ,,

குழந்தையையும் சீரழிக்கவா
ஆணினம்....

ச்சீசீ கேவலமான ஆண்களை
எதுவுமே செய்ய மாட்டீரோ
கேள்விப்பட்டு கடக்கும்
கேவலமானவர்களே..

ஒருவனைச் சிதைத்தால் கூட
அடுத்தவன் தொட யோசிப்பானே
நானும் உங்களின் மகள்தான் ....

சட்டம் செய்யும் கடமை
என கவலையின்றி இருப்பீர்களோ....

என்ன செய்யப்போகின்றீர்கள்
அப்பாக்களே...
உங்கள் இனமென்று விட்டுவிடுவீர்களோ..

பெண்கள் வாழத்தகுதியற்ற நாட்டில்
வாழ்ந்திட விருப்பமின்றி
சாகின்றேன்.....

துடிதுடித்து சாகவோ பிறந்தேன்...


அண்ணன்களே
தம்பிகளே
அப்பாக்களே
தாத்தாக்களே
நண்பர்களே...




Wednesday, 24 August 2016

மறக்க முடியாத நாளாக 24.8.16

மறக்க முடியாத நாளாக 24.8.16

நூற்றாண்டு கடந்த ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்ற விழா..
முகநூல் நண்பர் திருமிகு அறிவுடைநம்பி அவர்கள் , தங்கள் பள்ளியின் தமிழ்த்துறை சார்பாக நடக்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்...அவருக்காக கலந்து கொள்வதென முடிவு செய்து வருகின்றேன் என்றேன்.
விழாவின் பொறுப்பாளர் திருமிகு ஜான்பிரிட்டோ அவர்கள் என்னிடம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அழைத்த போது கூட நான் ஏதோ சிறியபள்ளி என்ற எண்ணத்தில் சரி என்று அப்பள்ளியில் பணிபுரியும் வலைப்பூ சகோதரர் திருமிகு மணவை ஜேம்ஸ் அவர்களிடம் கேட்ட போது...

அப்பள்ளியின் சிறப்பையும் பிரமாண்டத்தையும் உணர்ந்தேன்..
1907 இல் ஆசிரிய பயிற்சி பள்ளியாகத்துவங்கப்பட்டு பின் 1945 இல் உயர்நிலைப்பள்ளியாக செயல்படத்துவங்கியப்பள்ளி
1978 முதல் மேல்நிலைப்பள்ளியாகச் சிறப்புடன் செயல்பட்டு கொண்டு வருகின்றது.

5 வருடங்களாக வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்றம் துவங்கி மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி வருகின்றனர்.

ஏறக்குறைய 2000 மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளியின் தாளாளரும் தலைமையாசிரியருமான அருட்தந்தை சகாய செல்வராஜ் அவர்களின் எளிமை மிகவும் வியக்க வைக்கின்றது.


நான் வருகின்றேன் என்றவுடனே நண்பர் அறிவுடைநம்பி அவர்கள் உபசரித்து பள்ளிக்கு அழைத்து சென்றார்...ஆசிரியர்கள் அனைவரும் அன்புடன் வரவேற்றனர்.
தமிழாசிரியர்கள் பாரம்பரிய உடையில் விழாவை நடத்தியது மிகவும் சிறப்பு.

முற்றிலும் ஆண்கள் பணிபுரியும் பள்ளி...பெண் ஆசிரியர்கள் யாரும் இல்லையா எனக்கேட்டேன்..இல்லை என்றார்கள்...

துறுதுறுவென ஓடி ஆடிக்கொண்டிருந்த பசங்களைக்கண்டதும் அவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது எனலாம்...அவர்களின் பணிவு இக்காலத்தில் இப்படி கூட மாணவர்கள் இருக்கின்றனரா...ஆச்சரியப்பட்டேன்..

ஒரு மாணவன் படித்துக்கொண்டே சமையல் பணிகளுக்கு போவதாக அறிந்த போது அவனின் பொறுப்பு மனதை நெகிழ வைத்தது.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் அருமை..
ஆசிரியர்களின் விருந்தோம்பல் பண்பு பாராட்டுதற்குரியது..என் மேல் அன்பும் நம்பிக்கையும் வைத்து அழைத்து சிறப்பித்த நண்பர் அறிவுடைநம்பி அவர்களுக்கு மிக்கநன்றி...

நூற்றாண்டு பாரம்பரியமான பள்ளியின் விழாவில் மனம் நிறைவாக விழாவில் கலந்து கொண்டு வந்தேன்.






Tuesday, 23 August 2016

வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -30

                                 அன்புடன் அழைக்கின்றோம் 
                  இலக்கியப்பறவைகள் கலந்துரையாடி மகிழும் கூட்டிற்கு.. 
                 -------------------------------------------------------------------------------------
                                                    வீதி 
                         கலை இலக்கியக்களம் கூட்டம் -30
 நாள் :28.8.16 ஞாயிறு

 இடம்:ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி புதுக்கோட்டை .
            [புதிய பேருந்து நிலைய மாடி]

 காலம் :காலை 9.30 மணி முதல் மதியம் 1.00மணி வரை

 தலைமை: கவிஞர் மூட்டாம்பட்டி இராசு அவர்கள்.

 சிறப்பு விருந்தினர் :கவிஞர் விச்வநாதன் அவர்கள் தஞ்சாவூர். 

 கட்டுரை :திருமிகு கு.ம.திருப்பதி தமிழாசிரியர்

 நூல் விமர்சனம் : எழுத்தாளர் பூமணி அவர்களின் ”அஞ்ஞாடி ”
                          திருமிகு குருநாதசுந்தரம் தமிழாசிரியர்.
 ஆய்வு:         ”வழக்குரை காதை மீள்பார்வை”
                     திருமிகு மகா.சுந்தர் தமிழாசிரியர்.

 கவிதை :
                கவிஞர் மலையப்பன்
                  கவிஞர் மணிகண்டன்
              கவிஞர் மீனாட்சி சுந்தரம்.

 பாடல் :மிடறு நூலாசிரியர் கவிஞர் முருகதாஸ்.

சிறுகதை :கவிஞர் மாலதி

 அமைப்பாளர்கள்: கவிஞர் பவல்ராஜ் ,கவிஞர் ரேவதி


அறிவிப்பு
விழாவில் வீதியின் நிறுவனர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் புதுகையின் தொன்மை கூறும் ஆய்வு நூல்”பாறை ஓவியங்கள்”விலை ரூ300 வீதிக்காக ரூ200 விலையில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.






Saturday, 20 August 2016

பெண்ணின் பெருமைகளாய் சாக்‌ஷி ,சிந்து


நொடிப்பொழுதும் சுமந்தே திரிந்து
நொந்து போன பெண்களுக்கு
ஒலிம்பிக்கில் எடை பெரிதல்ல...

துன்பங்களை சிறகுகளாக்கி
பறக்கத்துடிக்கின்றவர்களுக்கு
சிறகுப்பந்து எட்டாக்கனியல்ல..

விட்டுவிடுங்கள் அவர்களை
எல்லோரும் சாதனையாளர்களாவார்கள்..

பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த
சாக்‌ஷி ,சிந்துவை பாராட்டி மகிழ்கின்றோம்..

உடலை மறந்து
திறமையைப்பாராட்டிக்கொண்டே இருக்கும்
ஆண்களை வணங்குகின்றோம்..

ஜோக்கர்.-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.

ஜோக்கர்.-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.

 வாழ்த்துகள் ராஜூ முருகன் சார்.

 இத்தனை பச்சையாக நாட்டை தோலுரித்துக்காட்ட முடியுமா?கைதட்டிக்கொண்டே இருக்க வைத்த நச் வசனங்கள்.

கதாநாயகன் என்று யாராவது வருவார்களே என பொதுப்புத்தியோடு இருந்த எனக்கு, ஜனாதிபதியாக தன்னை எண்ணி வாழ்கின்ற சோமசுந்தரத்தின் வாழ்க்கையோடு நானும் இணைந்தேன்....

 சமூக அக்கறை உள்ளவர்கள் காசு கொடுத்து திரையரங்கில் பார்த்தால் அதில் வரும் பணத்தைக்கொண்டு கழிப்பறை கட்டித்தரப்போகிறோம் என்று இப்படத்தை தயாரித்தவர்களால் மட்டுமே கூற முடியும்.


 நாட்டின் சீர்கேடுகளைத் தட்டிக்கேட்பவனை ஜோக்கராகத்தான் பார்க்கிறது கோமாளிக்கூட்டமான இந்த சமூகம்...

மன்னர்மன்னாக நடித்த சோமசுந்தரத்தின் நடிப்பு அட்டகாசம். பார்வையிலேயே கழிப்பறை மேல் உள்ள காதலைக்காட்டும் மல்லிகாவான ரம்யா பாண்டியன் பேசாமலே பேச வைக்கின்றார். பொன்னூஞ்சலாக நடித்த ராமசாமியும்,இசையாக நடித்தவரும் மிக அருமையாக வாழ்ந்துள்ளனர். 

பெண்கள் சுதந்திர இந்தியாவில் கழிப்பறைக்காக படும் பாடு....டிஜிட்டல் இந்தியாவின் முகத்திரை..

 பள்ளியில் ...ஓடும் பேரூந்தில்...பணிபுரியும் இடத்தில் என எல்லா இடங்களிலும் அடக்கி அடக்கியே அடங்குகின்றோம்..

 சமூக அக்கறை உள்ளவரால் மட்டுமே காசுக்கு விலை போகாமல் இப்படிப்பட்ட திரைப்படத்தை எடுக்க முடியும்...

 நாட்டிற்கு உண்மையான தேவை எது என அறிந்து அதை திரைக்கதையாக்கி தந்த ராஜூமுருகன் மற்றும் அவரது குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்..

Friday, 19 August 2016

ஆசிரியரெனில் அவசியம் வருக அம்மா அப்பா எனில் கட்டாயம் வருக

ஆசிரியரெனில் அவசியம் வருக
அம்மா அப்பா எனில் கட்டாயம் வருக

 நம் குழந்தைகளின் கல்வி குறித்து நாம் பேசாமல் கேட்காமல் யார் கேட்பர்.

என் பிள்ளை படிச்சு கல்லூரி போயிட்டாங்கன்னு நினைக்க வேண்டாம் ..அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி தரமான கல்வியான்னுயோசிக்கனும்..
மனப்பாடக்கல்வி நம் குழந்தைகளை அழித்துவிடாமல் காக்க...
 புக வரும் குலக்கல்விதனை அறவே எதிர்க்க...
குழந்தை தொழிலாளர் வேலை பார்த்துக்கொண்டே கற்க வேண்டுமாம்.....மாற்றுப்பள்ளியில்...

 பொதுக்கல்வியை சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகள் ஆகியும் தரவில்லை என்பது எத்தனை கொடுமை... கல்வியின் வரலாறை நாம் அறிய ...புதிய கல்வி எதை அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர வாருங்கள்....

தி இந்துவில் ஒருவாரமாக வரும் கல்வி பற்றிய கட்டுரைகளைக் கண்டீர்களா..? நாம் சிந்திக்கவும் செயல்படவேண்டிய காலம் இது... ஒன்றிணைவோம்....புதியக்கல்வி உண்மையிலேயே எதை அடிப்படையாகக்கொண்டுள்ளது என்பதை அறிவோம்...
 வாருங்கள்..

Thursday, 18 August 2016

கவிஞர் வைகறை குடும்ப நலநிதி வழங்கிய விவரம்.

             கவிஞர் வைகறை குடும்ப நலநிதி
          வங்கியின் மூலமாகத் தந்தவர்கள் பட்டியல் 30.7.16 வரை

.எண்
நாள்
          பெயர்

தொகை ரூபாயில்
கூடுதல்
1
6.5.16
திருமிகு பகவான் ஜி
வலைப்பதிவர் மதுரை
  1,000

2
6.5.16
திருமிகு இராஜா [] அரசன் சென்னை
  1,000

3
6.5.16
திருமிகுசிவக்குமார்.
வலைப்பதிவர்
  1,000

4
7.5.16
திருமிகு தமிழ் இளங்கோ
வலைப்பதிவர் திருச்சி.
  2,000

5
7.5.16
திருமிகு செல்வதுரை
வலைப்பதிவர் மதுரை
   500

6
8.5.16
திருமிகு முரளீதரன்
வலைப்பதிவர் சென்னை.
  1,000

7
9.5.16
திருமிகு கோபி சரபோஜி
வலைப்பதிவர் சிங்கப்பூர்.
  2,500

8
9.5.16
திருமிகு புலவர் இராமாநுசம்
வலைப்பதிவர் சென்னை
  1,000

9
10.5.16
திருமிகு ஜம்புலிங்கம்
வலைப்பதிவர் தஞ்சை.
  2,000

10
10.5.16
திருமிகு கரந்தை ஜெயக்குமார்
வலைப்பதிவர் தஞ்சை.
  2,000

11
11.5.16
திருமிகு தமிழரசன் சே.தமிழா
முகநூல் நண்பர் சென்னை
  5,000

12
13.5.16
திருமிகு நெப்போலியன்
சிங்கப்பூர்.
  5,000

13
13.5.16
திருமிகு கலையரசி
வலைப்பதிவர் பாண்டிச்சேரி.
  2,000

14
14.5.16
திருமிகு பிரபா
முகநூல் நண்பர்
  1,000

15
14.5.16
திருமிகு அ.பாண்டியன்
வலைப்பதிவர் மணப்பாறை
  1,000

16
18.5.16
திருமிகு கர்னல் கணேசன்
வலைப்பதிவர் சென்னை.
  5,000

17

20.5.16
திருமிகு மரியசிவானந்தம்

  2,000
35,000
18
26.5.16
கவிஞர் ஜெயதேவன்
முகநூல் நண்பர்
 2,000

19
30.5.16
திருமிகு திலகராஜ் பேச்சியப்பன் முகநூல் நண்பர் சென்னை.
 5,000

20
14.6.16
திருமிகு எஸ் சுரேஸ்

2,000

21.
14.6.16
திருமிகு கீதா பிரகாஷ்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்.
2,000

22
14.6.16
திருமிகு வீரக்கடம்பு கோபு
திண்டுக்கல்.
  500

23
18.6.16
கவிஞர் சுப்ரா வே சுப்ரமணியன் முகநூல் நண்பர்.
2,000

24
25.7.16
திருமிகு கிரேஸ் பிரதிபா
வலைப்பதிவர் அமெரிக்கா.
5,000

25
26.7.16
திருமிகு ரமணன்

1,000

26
26.7.16
திருமிகு ரத்னவேல் அய்யா
முகநூல் நண்பர்.
1,000

27
27.7.16
திருமிகு கீதா-துளசிதளம்
வலைப்பதிவர் சென்னை.
 2,000

28
30.6.16
திருமிகு துரைபாண்டி

   500

29
30.7.16
திருமிகு சரவணக்குமார்
சென்னை.
 5,000

30
30.7.16
திருமிகு குமரகுரு
சென்னை
10,000
38,000



மொத்த கூடுதல்
------------
73,000

30.7.16 வரை வங்கியின் மூலம் வரவு ரூ 73,000/



                17.8.16 கவிஞர் வைகறை குடும்பநிதி
               கையில் நிதி தந்தவர்கள் பட்டியல்
. எண்
நாள்
         பெயர்
தொகை ரூபாயில்
கூடுதல்
1
5.5.16
திருமிகு நா.முத்துநிலவன்
வலைப்பதிவர் புதுகை.
 10,000

2
5.5.16
திருமிகு மு.கீதா
வலைப்பதிவர் புதுகை
 10,000

3
5.5.16
பேராசிரியர் துரைப்பாண்டியன்
பாரத் மெட்ரிக் பள்ளி புதுகை
 10,000

4
5.5.16
திருமிகு சுரேஷ்
சமையற்கலைக்கல்லூரி புதுகை
 5,000

5
5.5.16
திருமிகு சோலச்சி
வலைப்பதிவர் புதுகை
 5,000

6
5.5.16
திருமிகு கா. மாலதி
வலைப்பதிவர் புதுகை
 5,000

7
5.5.16
திருமிகு கதிரேசன்
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் புதுகை.
 6,000

8
5.5.16
தமிழகத் தமிழாசிரியர் கழகம் புதுகை.
 5,000

9
5.5.16
திருமிகு மணிகண்டன்
வீதி நண்பர்.
 1,000

10
5.5.16
 புலவர் ஜெயா
வீதி நண்பர்.
  500

11
5.5.16
திருமிகு மீனாட்சி சுந்தரம்
வலைப்பதிவர் புதுகை
1,000

12
9.5.16
திருமிகு பொன் கருப்பையா
வலைப்பதிவர் புதுகை
1,000

13
12.5.16
விதைக்கலாம் நண்பர்கள்

15,000

14
12.5.16
விதைக்கலாம் திருமிகு
கஸ்தூரி ரங்கன் வலைப்பதிவர் புதுகை
10,000





84,500
15

12.5.16
விதைக்கலாம்  திருமிகு மலையப்பன்
வலைப்பதிவர் புதுகை
 2,000

16
12.5.16
விதைக்கலாம் நிகழ்வில்
திருமிகு ரபீக் சுலைமான்
முகநூல் நண்பர்
5,000

17
12.5.16
கில்லர்ஜி அபுதாபி
வலைப்பதிவர்

2,005

18
19.5.16
விதைக்கலாம் நிகழ்வில்
 ரோஷ்ணி-வெங்கட் நாகராஜ்
வலைப்பதிவர் தில்லி
3,000

19
19.5.16
திருமிகு அப்பாஸ் யாஸ்
முகநூல் நண்பர்.
  500

20
19.5.16
திருமிகு சிவாஜி
விதைக்கலாம்

  500

21
7.6.16
திருமிகு மரபின் மைந்தன் முத்தையா
[பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நண்பர்கள் வழியாக]
11,000

22
15.6.16
திருமிகு புதுகை செல்வா
வீதி நண்பர்
2,500

23
22.6.16
திருமிகு அனுசுயா ஆசிரியர்
..மேல் நிலைப்பள்ளி
4,000

24
சோலச்சி
மூலம்
திருமிகு நிலோபர் இ.நி.
உளுவம்பட்டி.
  500

25
  “
திருமிகு மு.சின்னக்கண்ணு
.நி.ஆ காட்டுப்பட்டி.
  500

26
   “
திருமிகு எஸ்.நாகலெட்சுமி த.ஆ மரிங்கிப்பட்டி
  500

27
   “
திருமிகு ர.சரோஜா தேவி
சமையலர் மரிங்கிப்பட்டி.
  500

28
   “
திருமிகு நெல்சன் இ.நி.
.மேட்டுப்பட்டி.
  500

29
   “
திருமிகு சசிகலா இ.நி.
ஆனைப்பட்டி
  500
33,505
30
   “
திருமிகு செல்லம் டோரா
.நி.ஆ ஆனைப்பட்டி
  500

31
   “
திருமிகு ஜெய்ஸ்ரீ த.
கதவம்பட்டி
  400

32
   “
திருமிகு மீனா வனிதா
.நி.ஆ கதவம்பட்டி.
  300

33
   “
திருமிகு ராமலெஷ்மி இ.நி.ஆ கதவம்பட்டி.
  200

34
சோலச்சி மூலமாக
திருமிகு இரா.வடிவேல் இ.நி.ஆ கதவம்பட்டி.
  200

35
  “
திருமிகு து.சுதாகர் இ.நி.
கதவம்பட்டி.
  100

36
  “
திருமிகு பழ.வனிதா இநி.
கதவம்பட்டி.
  100

37
  “
திருமிகு சேகர் ஆசிரியர்
கொத்தமங்கலப்பட்டி.
 1,000

38
  “
திருமிகு மூட்டாம்பட்டி இராசு.வீதி நண்பர்
  500

39
  “
திருமிகு மகாதேவி த.
இடையப்பட்டி.
  500

40
19.6.16
கவிஞர் பாக்யா
1,100

41
  “
கவிஞர் யாழிசைமணிவண்ணன்.சிங்கப்பூர்.
5,000

42
  “
கவிஞர் ஈழபாரதி
இலங்கை.
5,000

43
  “
திருமிகு கார்த்திகேயன் சென்னை
1,000

44
6.7.16
திருமிகு விஜயலெட்சுமி
மா...நிறுவனம் புதுகை.
1,000

45
  “
திருமிகு அப்துல்ஜலீல்
வீதி உறுப்பினர்.
5,000

46
   “
திருமிகு அமிர்தா தமிழ்
வீதி உறுப்பினர்.
5,000

47
31.7.16
சோலச்சி வழியாக
திருமிகு ந.சுமதி த.
முருகராஜ் நகர்.


  500
27,400
48
  “
திருமிகு எஸ்.கேத்தரின் இ.நி.
முருகராஜ் நகர்.
  500

49
  “
திருமிகு ம.விக்டோரியா த.
கோதண்டராமபுரம்.
  500

50
  “
திருமிகு சுமதி த.
குடுமியான்மலை..
  500

51
  “
திருமிகு பிரகாஷ் இ.நி.
பெருமாநாடு.

  500

52
  “
திருமிகு லில்லிகிறிஸ்டி த.
அன்னை நகர்.
  500

53
  “
திருமிகு.எம்.ஜெயந்தி ஆசிரியப்பயிற்றுநர்.அன்னவாசல்.
  500



31.7.16 அன்று வீதிக்கூட்டத்தில் வந்த வரவாக


54
31.7.16
திருமிகு முனைவர் நா.அருள் முருகன் அவர்கள் .
முதன்மைக்கல்வி அலுவலர் கோவை.
வீதி அமைப்பின் நிறுவனர்.
 5,000

55
   ”
திருமிகு உமா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.திருவரங்குளம்
 1,000

56
  “
திருமிகு ராசி பன்னீர்செல்வன்
வலைப்பதிவர் புதுகை.

5,000

57
  “
திருமிகு மகேஸ்வரி ரமேஷ்
வீதி நண்பர்
 1,000

58
 “
திருமிகு கதிர் ஆதவன் சென்னை
  500

59
  “
திருமிகு மணிகண்டன் ஆறுமுகம் விதைக்கலாம்
1,000

60
  “
திருமிகு நாறும்பூ நாதன்
திருநெல்வேலி
 1,000

61
  “
திருமிகு பௌல்ராஜ்
வீதி நண்பர்

 2,000
19500
62
  “
திருமிகு தூயன்
வீதி நண்பர்.
  500

63
  “
திருமிகு நாகராஜன்
வலைப்பதிவர் புதுகை
1,000

64
  “
திருமிகு ஸ்டாலின் சரவணன்
வீதி நண்பர் கறம்பக்குடி
1,000

65
  “
திருமிகு  சிவா [சச்சின்]
வீதி நண்பர்
1,000

66
  “
திருமிகு உஷா சுப்பரமணியம் விதைக்கலாம் வழியாக
1,500

67
  “
திருமிகு சத்தியமூர்த்தி  ஆசிரியர்.

 500

68
 “
திருமிகு ஜெயலெஷ்மி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்,வலைப்பதிவர் .கீரனூர்
10,000

69
  “
திருமிகு சுமதி தமிழாசிரியர்
..மே.நி.பள்ளி சந்தைப்பேட்டை
1,000
16500


கையில் வந்த மொத்த தொகை

1,81,405


















கவிஞர் வைகறை குடும்ப
        நிதி
வரவு வந்துள்ள விவரம்




வங்கி மூலம் வரவு


 73,000


கையில் வந்த வரவு

1,81,405


மொத்த கூடுதல் தொகை

2,54,405


கவிஞர் வைகறை குடும்பத்தினரிடம்
அளித்துள்ள தொகை விவரம்




எல்..சி பாலிசி தொகை
ரூ 2,03,753



கையில் தந்துள்ள நிதி தொகை
 ரூ 50,500



 மொத்தமாக தந்துள்ள தொகை.
ரூ 2,54,253


*விதைக்கலாம் அமைப்பின் மூலம் வந்துள்ள மொத்த தொகை ரூ38,500
*கவிஞர் சோலச்சியின் முயற்சியால் இதுவரை கிடைத்துள்ள தொகை
ரூ 15,300  
                       நிதி வழங்கிய விவரம்.
                   எல்..சி யில் கவிஞர் வைகறையின் மகன் ஜெய்சன் பெயரில் ரூ 2,03,753 க்கு பாலிசி எடுக்கப்பட்டு ,அதற்கான ரசீதும்,நிதியாக ரூ50,500 ம் வீதி கலை இலக்கியக்களம் 29 ஆவது ஜூலை மாதக் கூட்டத்தில்
31.7.16 அன்று வீதியின் நிறுவனர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களால்  வைகறையின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இனிமேல் வரும் தொகை அடுத்தடுத்த திங்களில் வீதிக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு திருமதி ரோஸ்லின் வைகறையிடம் அவ்வவ்போது ஒப்படைக்கப்படும் என்பதை வீதி அன்புடன் அறிவிக்கின்றது.வங்கி மூலமும் ,கையிலும் நிதியை அள்ளித்தந்து உதவிய நல்ல உள்ளங்களை வீதி மனம் நெகிழ்ந்து தனது நன்றியை அர்ப்பணிக்கின்றது.
                                                                   
                                                    மு.கீதா
                                             நிதி பொறுப்பாளர்
                              வீதி கலை இலக்கியக்களம்-புதுக்கோட்டை