Friday, 26 August 2016

என்ன செய்ய போகின்றீர்?

கொண்ட கவுண்டன் பாளையத்தில் மில்லுக்கு பிழைப்பு தேடி வந்த பீகார் குடும்பத்தின் எட்டுமாதக்குழந்தை பாலியல் வன்முறையால் பிறப்பு சிதைய ,மண்டை உடைந்து கிடந்த கோலம்...வேலைக்குச்சென்ற அப்பாவும்,குழந்தையைத்தூங்கவைத்து கடைக்குச் சென்ற அம்மாவும் செய்த பாவம் என்ன?



பிழைப்பு தேடி வந்தோம்
வாழ்விப்பீர்களென..

பிறந்த எட்டுமாத சிசு நான்
புணர்ந்த கொடூரனை
புதைத்திட மாட்டீரோ,,

குழந்தையையும் சீரழிக்கவா
ஆணினம்....

ச்சீசீ கேவலமான ஆண்களை
எதுவுமே செய்ய மாட்டீரோ
கேள்விப்பட்டு கடக்கும்
கேவலமானவர்களே..

ஒருவனைச் சிதைத்தால் கூட
அடுத்தவன் தொட யோசிப்பானே
நானும் உங்களின் மகள்தான் ....

சட்டம் செய்யும் கடமை
என கவலையின்றி இருப்பீர்களோ....

என்ன செய்யப்போகின்றீர்கள்
அப்பாக்களே...
உங்கள் இனமென்று விட்டுவிடுவீர்களோ..

பெண்கள் வாழத்தகுதியற்ற நாட்டில்
வாழ்ந்திட விருப்பமின்றி
சாகின்றேன்.....

துடிதுடித்து சாகவோ பிறந்தேன்...


அண்ணன்களே
தம்பிகளே
அப்பாக்களே
தாத்தாக்களே
நண்பர்களே...




4 comments:

  1. கொடுமை...
    கேவலத்தின் உச்சம்...

    ReplyDelete
  2. துயரம்.
    வார்த்தைகள் நெருப்பாய் சுடுகிறது.
    உளவியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டாலொழிய இதற்கு தீர்வு காண்பது சிரமம்தான்.

    ReplyDelete
  3. குழந்தையைக் கூட விட்டுவைக்காத கோடூரன்களை என்ன செய்வது? வேதனை!

    ReplyDelete
  4. கொடுமை... இப்படிப் பட்டவர்களை வெட்டுவதில் தவறில்லை.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...