Tuesday, 30 August 2016

நகை தேவையா இனியும் பெண்களுக்கு?

நகை தேவையா இனியும் பெண்களுக்கு?

யோசிக்க வேண்டிய விசயமாக இன்று நகை உள்ளதை அனைவரும் உணரவேண்டும்.
பெண்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக நகையும் உள்ளது என்பதை நாம் ஏற்கவே வேண்டும்.

இன்று காலை சன் செய்தியில் சென்னையில் கணவன் வேலைக்குச் சென்று விட,குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்ட பகல் நேரத்தில் தனியாக இருந்த பெண்மணியை வீட்டில் பகல் நேரத்தில் கொன்று 45 பவுன் நகையைக்கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

சென்ற வாரம் என் வீட்டின் அருகே உள்ள தெருவில் கடைக்குச்சென்று வீட்டிற்கு திரும்பிய பெண்மணியின் கழுத்து அறுபடும் படி செயினை அறுத்து சென்றுள்ளனர்..இத்தனைக்கும் அது கவரிங் செயின் தானாம்...மஞ்சள் நிறத்தில் இருந்ததால் அப்பெண்மணியின் கழுத்து அறுந்துள்ளது..

இன்னமும் நமக்கு நடந்தால் மட்டுமே நாம் மாறுவோம் என்று இருந்தால் ஒன்று உயிரை பலிக்கொடுக்க வேண்டும் அல்லது பல ஆண்டுகளாக உழைத்து சேகரித்து வாங்கிய நகையை இழக்க வேண்டும்.

நகை ஒரு சொத்து என்று கூறுவர் ஆனால் அதை பாதுகாப்பாக வங்கியில் வைத்து விட்டிருந்தால் இன்று அந்த பெண் இறந்திருக்க மாட்டாள்...ஆனால் தர்போது வங்கியும் பாதுகாப்பில்லை என்பதும் உண்மை.

ஆசிரியர் ஒருவர் காலையில் நடைபயிற்சிக்கு செல்லும் போது செயின் போடுவதில்லை மணி தான் போட்டுச்செல்கிறேன் என்றார்கள்...இது அவரது 7 பவுன் செயினை பறி கொடுத்த பின் வந்த அறிவு...

ஒருபக்கம் பெண்கள் தான் நகை போட்டால் தான் பெண்களுக்கு அழகு என்ற கருத்தை நகைக்கடைக்காரர்களும், சமூகமும், விளம்பரங்களும் மக்கள் மனதில் ஆழப்பதித்து விட்ட நிலையில் பெண்கள் ஒரு பாதுகாப்பிற்காக ,சொத்தாக,அழகிற்காக நகையை விரும்பத்துவங்கிவிட்டனர்..

ஆனால் அது அவர்களின் உயிரையே குடித்துவிடும் ஒன்றாக தற்போது மாறிவிட்டது..

நகை போடாத அயல்நாட்டு பெண்கள் அறிவால் அழகான பெண்களாகின்றார்கள் என்பதை நாம் நம்குழந்தைகளுக்கு உணர்த்துவோம்..நாமும் யோசிப்போம்..இனியும் நகை தேவையா என்பதை.

கஷ்டப்பட்டு சேர்த்த நகைகளை எப்படி பாதுகாப்பது என்பதையும் கற்போம்..



10 comments:

  1. இந்த மோகம் தீர்வதற்கு வழியில்லை போலும்.....

    ReplyDelete
    Replies
    1. உண்டு சார்...சென்னையில் பெண்கள் அணிவது குறைந்து வருகின்றது....

      Delete
  2. சம்பத்து ,ஆபத்து என்றாகி வருகிறது :)

    ReplyDelete
  3. புன்னகை இருக்க பொன்நகை எதற்கு என்று ஐஸ் வெச்சாலும் கேக்க மாட்டேங்குறாங்க.
    அரை பவுன் நகைக்காக எங்கள் ஊரில் ஒரு கிழவியை கழுத்தறுத்து கொலை. வேதனை
    விஜயன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் இன்னும் மாறனும்..

      Delete
  4. அதற்காகத்தான், காவல்துறையினர் தங்கம் போன்று காட்சியளிக்கும் கவரிங் நகைகளையும் அணியக்கூடாது என்பார்கள். திருடர்களுக்கு அது தங்கமா கவரிங்கா என்று தெரியாது. தங்கம் என்று நினைத்தே திருடுவார்கள். அது உயிருக்கு ஆபத்து. பார்வைக்கு தங்கம் இல்லை என்று தெரியும்படி உள்ள அணிகலன்களை அணிவதே நல்லது. ஆனால், பிரெஸ்டிஜ் என்ற பகட்டுக்காக பெண்கள் தங்கத்தை துறக்க தயாராக இல்லை என்பதே உண்மை.
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சிறுவயதிலிருந்தே போடாமல் பழக்கனும் இனியாவது..

      Delete
  5. இந்திய பெண்கள் தங்கநகைகள் மீது ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறார்கள்?
    //நகை போடாத அயல்நாட்டு பெண்கள் அறிவால் அழகான பெண்களாகின்றார்கள் என்பதை நாம் நம்குழந்தைகளுக்கு உணர்த்துவோம்.//
    இந்த உண்மைகளை நீங்களாவது எடுத்து சொல்வது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. கவுரவத்திற்காக அணிகின்றனர் தெரிந்தும்...

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...