நன்றி நன்றி நன்றி.....
-----------------------------------------------வலைப்பதிவர் திருவிழா -2015
வலைப்பதிவர் விழா எல்லோரும் எதிர்பார்த்தது போல் மிகச்சிறப்புடன் நடந்து முடிந்துள்ளது..அந்த நிறைவு மனம் முழுக்க நிறைந்து மனதில் ஆழ்ந்த அமைதியை உருவாக்கி உள்ளது...பசியைக்கூட மறக்கச்செய்துள்ளது என்றால் மிகையில்லை...
விழா சரியாக ஐந்து மணியளவில் நிறைவு பெறவேண்டியதால் இறுதியாக நான் அனைவருக்கும் தனித்தனியே குறிப்பிட்டு தயாரித்த நன்றியுரையை [5 பக்கம் எழுதுனேன்...எஸ்.ரா பேச்சைக்கூட கேக்காம]வாசிக்க நேரமில்லாத காரணத்தால் விரிவாக பேச சொன்ன நிலவன் அண்ணாவே இரண்டு வரியில் கூறுங்கள் கேட்டுக்கொண்ட காரணத்தால் மிகச்சுருக்கமாக கூறினேன்.
அவ்வுரையை இங்கு பகிர்ந்து கொண்டு எங்களது நன்றிதனை அனைத்து வலைப்பதிவர்களுக்கும் சமர்பிக்கின்றேன்.
* இனிக்கின்ற செந்தமிழே
இனியவளே இணையத்தால்
இத்துணை உறவுகளை
எமக்கீந்தவளே உனக்கு என்
இதயம் நிறைந்த நன்றி..
* புதுகையில் கணினிச்சங்கம்
புதியதாய் தோன்றக்காரணமானவர்
தான் விதைத்த விதையின்று
விருட்சமாய் வளர்வதை
விழிகளால் ரசித்து மகிழும்
எங்கள் இதயங்களில்
தமிழாய் வாழும்விழா தலைவர்
முனைவர் நா.அருள்முருகன் அவர்களுக்கு
மனம் நிறைந்த நன்றி...புதுகையில் வீதிக்கூட்டம் துவங்கியதும் இவரால் தான்..
* புதுகையின் மைந்தர், அழகப்பா
பல்கலையின் துணைவேந்தர்,
எளிமையே இவரின் சிறப்பு.
எங்கள் அழைப்பை ஏற்று
அன்புடன் வந்து சிறப்பித்த
முனைவர் சுப்பையா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிதனை கூறிக்கொள்கிறோம்.
*
இணையத்தால் இணைந்த
இதயங்களுக்கு போட்டிவைத்து
பரிசை அள்ளித்தந்த
தமிழ் இணையப்பல்கலைக்கழகத்திற்கும்
சிறப்பு விருந்தினராக வந்திருந்து சிறப்பித்த
துணை இயக்குனர் தமிழ்பரிதி அவர்களுக்கும் எங்களது நன்றி..
*அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வலைத்தள மேம்பாடு பற்றி பேசிய நீச்சல் காரன் இராஜாராம் அவர்களுக்கும் நன்றி.
*போட்டிக்கு நடுவராகப்பணியாற்றி சிறப்பானவர்களை தேர்வு செய்த நடுவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி..
* தமிழின் சொற்களஞ்சியமாய்த்திகழும் விக்கிமீடியா இரவிசங்கர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி..
*விழா பற்றி தெரிந்ததும் கேடயத்திற்கான தொகையைத்தந்து உதவிய தமிழ்க்களஞ்சியம் இணையத்திற்கும் மிக்க நன்றி.
வாசித்தலே சுவாசித்தலாய்
எழுதுதலே வாழ்க்கையாய்
எண்ணற்ற நூல்களுக்கு உயிர்கொடுத்த
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி....
* புதுகையை மட்டுமல்ல உலகெங்கிலும் தனது இலக்கிய உரையால்,காந்தக்குரலால் தன்வசப்படுத்துகின்ற, இவ்விழாவிற்கு உறுதுணையாய் நின்று விழாசிறக்க பாடுபடுகின்ற கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
*இவ்விழா மற்றும் போட்டிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது என்றால் ,தனது சொந்த வேலைகள் அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டு விழா சிறக்க உழைத்த வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
*இவ்விழா சிறக்கும் வகையில் நூல்களை வெளியிட்ட கரந்தை அண்ணாவிற்கும் ,ரூபன் சகோதரருக்கும் மனம் நிறைந்த நன்றி.
*பதிவர்களுக்கு தரமான கைப்பை கொடுக்க வேண்டும் என்று விரும்பிய போது அதற்கான செலவை பகிர்ந்து கொண்ட மதர் தெரசா நிறுவனத்தினர் மற்றும் செந்தூரான் கல்வி நிறுவனத்தினருக்கும் மிக்கநன்றி.
*இவ்விழா அரங்கம் நிறைந்து இருக்கிறதென்றால்...முன்பே திட்டமிட்டு விழா பற்றி பதிவுகளை மகிழ்வாக எழுதி,ஆவலுடனும் ஆர்வமுடனும் வெளிநாடுகளிலிருந்தும்,இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்து மகிழ்வாய் கலந்து கொண்டு சிறப்பித்த வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
*இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த புகழ்பெற்ற ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
* சர்வஜித் அறக்கட்டளை மூலம் 200 க்கும் மேற்பட்ட அநாதையாய் இறந்து போனவர்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்து சேவையே நோக்கமாய் வாழும் எம்பள்ளித்தலைமையாசிரியர் அவர்களின் கணவர் மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
*மேலும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த புதுகையின் புகழ்மிக்கவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
*எண்ணப்பறவைகள் என்ற வலைப்பதிவர் மகா.சுந்தர் அவர்களின் மகள் சுபாஷிணி தனது இனிய குரலால் அனைவரின் மனதையும் நெகிழச்செய்துவிட்டாள்...அன்பான நன்றி அக்குழந்தைக்கு..
* இவ்விழாவின் துவக்கக்கூட்டத்தில் விழாவின் செலவு குறித்து பேசுகையில் ரூ50000 ஆகலாம்.என பேசி கொஞ்சம் கொஞ்சமா விரிவடைந்து
இன்று ஏறக்குறைய ரூ2,75,000.அளவிற்கு செலவு செய்யும் துணிவை உண்டாக்கியவர்கள் விழாவிற்கு நன்கொடையாக ஏறக்குறைய ரூ1,40,000 [இன்னும் முழுமையாக வரவு செலவு கணக்கு பாக்கல..விரைவில் கணக்கை பதிவு செய்கின்றேன்...கால அவகாசம் தேவைப்படுகின்றது ..இன்னும் வர வேண்டிய தொகை வராத காரணத்தால்]அள்ளித்தந்தவர்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள வலைப்பதிவர்கள் தான் முக்கிய காரணம்..அவர்களது அன்பிற்கு எப்படி நன்றி சொல்வதெனத்தெரியாமல் திகைத்து நிற்கின்றோம்...நீங்கள் அள்ளிக்கொடுக்கவில்லையெனில் நாங்கள் தடுமாறித்தான் போயிருப்போம் இத்துணை சிறப்பாகச்செய்ய..
*விழாவில் நிகழ்வு சிறப்பா?உணவு சிறப்பா என்றால்..பழனி.கந்தசாமி அப்பா உணவுதான்மா என்பார்..என்றும் நினைக்கும் படியான உணவும் உபசரிப்பும் அளித்த உணவுக்குழுவினருக்கு, முக்கியமாக ஜெயாவின் நண்பர்கள் திருமிகு அண்ணாத்துரை மற்றும் திருமிகு ரமணன் அவர்களுக்கும் மிக்க நன்றி..எந்த வேலையைக்கொடுத்தாலும் சிறப்பாகச்செய்ய கூடியவர் உதவிக்கல்வி அலுவலராகப்பணி புரியும் ஜெயா ..என்பதை நிரூபித்துவிட்டார்..
*உலகெங்கிலும் இவ்விழாவை கண்டுகளித்து விழாவிற்கு வரமுடியவில்லையே என்ற ஏக்கத்தை துடைத்து நேரலையாக ஒளிபரப்பிய யு.கே.நெட்வொர்க் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி..அவர்களை அறிமுகம் செய்த தம்பி கஸ்தூரிக்கு மிக்க நன்றி.
* வலைப்பதிவர்களின் கவிதைகளை காட்சியாக வரைந்து அரங்கத்திற்கு அழகூட்டிய ஓவியக்குழுவினருக்கு மனம் நிறைந்தநன்றி.கவிதைகளைத்தேர்வு செய்த தங்கை மைதிலி,வைகறை,குழு பொறுப்பாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி.
*புத்தக விற்பனையை கவனித்துக்கொண்ட சோலச்சி ,நாகநாதன்,ஜலீல்,ஆகியோருக்கும் நன்றி.
*உங்கள் கைகளில் தவழ்கின்ற கையேட்டினை சிறப்பாக வடிவமைத்த குழுவினருக்கும் பதிப்பகத்தாருக்கும் மனம் நிறைந்த நன்றி.
*தரமான கைப்பையை குறைவான நாட்களில் தயாரித்துக்கொடுத்த திலக் பேக் உரிமையாளருக்கு நன்றி.
*சிறப்பான மண்டபத்தை குறைவான வாடகையில் கொடுத்து உதவிய அருட்தந்தைகட்கு மிக்கநன்றி.
*சிறப்பாக மேடை அலங்காரம் செய்த விவேக்கிற்கு மிக்கநன்றி.
*விழா நிகழ்வை ஓளிஒலியால் சிறக்கச் செய்த அமைப்பினருக்கு நன்றி.
*கீபோர்டு ,தபேலா வாசித்தவர்களுக்கு நன்றி.
*இவ்விழா நிகழ்ச்சிக்கூட்டங்களுக்கு இடம் தந்து உதவிய யுகே கார்த்தி,மற்றும் நண்பா அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு மிக்கநன்றி.
*இவ்விழா அனைவர் மனதையும் நிறைக்கச்செய்தது என்றால் முக்கிய காரணம் சிறந்த தலைமைப்பண்பு உடைய ஒருங்கிணைப்பாளராக ,அத்துணை வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு...முதல் நாள் 7 மணி வரை கேடயம் செய்வதில் தவறு வந்து விடக்கூடாதென்ற கவனமானச்சிந்தனையில் நேரம் காலம் பாராது உழைத்த முத்துநிலவன் அண்ணா தான் காரணம்..அவரின் வழி காட்டுதலில் தான் நாங்கள் செயல்பட்டோம் என்பதும் எங்களது கருத்துகளைக்கேட்டே அவர் வழிகாட்டினார்..என்பதும் முக்கியமானது...
நிலவன் அண்ணாவிற்கும், இவ்விழாவைச்செம்மையாக்கிய விழாக்குவினருக்கும் மகிழ்வையும் பாராட்டுதலையும் கூறிக்கொள்கின்றேன்.
[இதனால் உள்ளூரில் யாரிடமும் நன்கொடை வாங்க முடியல..என்கவலை எனக்கு]
விழாக்குழு
இவர்கள் தான் விழா சிறக்க காரணம்...
பொன்.க அய்யா,வைகறை,ஜெயா,மாலதி,பாலாஜி,ரேவதி,நாகநாதன்,ஜலீல்,சோலச்சி கஸ்தூரிரங்கன்,மைதிலி,ஸ்டாலின்,கு.ம.திருப்பதி,குருநாதசுந்தரம்,மகா.சுந்தர்,துரைக்குமரன்,கிருஷ்ணவேணி,சுமதி,அமிர்தாதமிழ்,மீரா செல்வக்குமார்,ராசி பன்னீர்செல்வம்,பா.ஸ்ரீமலையப்பன்,நீலா,அ.பாண்டியன்,சு.மதியழகன்,எஸ்.ஏ .கருப்பையா,தூயன்,பாலாஜி,யுகே கார்த்தி,நண்பா கார்த்திக்,சுரேஷ்மான்யா,சிவா....இளங்கோ,,அனைவருக்கும் மிக்க நன்றி.
மொத்தத்தில் விழாவின் நிறைவு எல்லார் மனதையும் நிறைத்துள்ளது...எக்காலமும் புதுகை வலைப்பதிவர் விழா நினைவில் நிற்கும் என்பது உண்மை....
விழாவை வெகு சிறப்பாக நடத்திய அனைவருக்கும் எமது வாழ்த்துகளும், நன்றியும் இவ்வளவு பணம் வரும் என்று நான் நி்னைக்க வில்லை சந்தோசமான விசயம் இது பதிவர்களின் உள்ளத்தை வெளிப்படுத்துகிறது
ReplyDelete- கில்லர்ஜி
தமிழ் மணம் 1
உடனே வருகை புரிந்தமைக்கு நன்றி ஆவி வடிவில் விழாவை கண்டு ரசித்து உணவை பார்த்து மகிழ்ந்த உங்களுக்கும் வாழ்த்துகள் சகோ...
Delete???????????
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநேரத்தின் சூழ்நிலை கருதி மேடையில் நன்றியுரையைச் சுருக்கமாகச் சொல்லியதே நன்று. எழுத்து வடிவினில் இன்று தந்த கவிதையை அந்த நேரத்தில் நீங்கள் வாசித்து இருந்தாலும் யாரும் பொறுமையாக ரசித்து இருக்க மாட்டார்கள். கவிதைக்கு நன்றி.
Deleteஉண்மைதான் சார்...எப்போதும் நாற்காலிகளுக்குத்தான் நன்றி சொல்வேன் ..ஆனா நேற்று அரங்கிலனைவரும் கலையாமல் இருந்தனர்..
Deleteமிக்க நன்றி அம்மா
ReplyDeleteஅம்மாக்கு ஏன்பா நன்றி..
Deleteவிழாவில் அனைவரையும் அன்புடன் முகமலர வரவேற்று உபசரித்த உங்கள் விருந்தோம்பல் குணம் எங்களை மிகவும் கவர்ந்தது. எல்லார் நெஞ்சங்களிலும் இவ்விழா பற்றிய இனிய நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும். அண்ணன் முத்துநிலவன் அவர்கள் தலைமையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் கடினமாக உழைத்த விழாக்குழுவினர் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!
ReplyDeleteஉங்களைப்பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மா....உங்களின் அன்பான பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றிமா..
Deleteநன்றி சகோதரி...
ReplyDeleteசார் உங்களது ஈடுபாடு வியக்க வைக்கின்றது....நன்றி..
Deleteதோழி எங்களோடுபேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் விழாவின்சிந்தனைகளோடுமட்டுமே
ReplyDeleteஒவ்வொருஅடியும் எடுத்துவைத்த( உங்களுக்குமிகப்பெரியநன்றிய்யா...அப்புடியெல்லாம்....
சொல்லமாட்டேன்).ஒவ்வொரு நொடியும்மகிழ்ச்சியைத் தந்ததுய்யா.
மகிழ்ச்சிமா
Deleteநன்றிக்கு நன்றி, கீதா அம்மா. நான் உண்மையில் ரசித்தது காலை டிபனையும் மதிய உணவையும்தான்.
ReplyDeleteஅப்பா நீங்க இப்படி சொல்வீங்கன்னு நான் சரியா தானே எழுதியிருக்கேன்...நன்றிபா
Deleteஐயா
Deleteஎத்தனை யூனி என்செய்ம் சாப்பிட்டீர்கள்.
--
Jayakumar
அருமையான திட்டமிட்ட நேர்த்தியான விழாவாக அமைய உங்கள் அனைவரின் உழைப்புதான் காரணம் . உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்... உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி கீதா.
ReplyDeleteஇவ்வளவு பணிகளிலும் இங்கு வந்ததற்கு மகிழ்ச்சிமா
Deleteதங்களின் முகம் மலர்ந்த வரவேற்பும் உபசரிப்பும் விழாவின் இனிமையை மேலும் கூட்டியது என்றால் அது மிகையில்லை. சகோ!
ReplyDeleteதங்களின் நன்றியுரையும் அருமை!
த ம 5
மிக்க நன்றி சகோ..
Deleteஅருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நன்றி...
Deleteவாழ்த்துகள் கீதா. விழா பிரமாதமாய் இருந்தது. ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு எழுத ஆசைதான், ஆனால் இப்போ பார்த்து ஓடவேண்டியவை அதிகமாகிவிட்டது. உங்கள் அனைவருக்கும் நன்றி கீதா
ReplyDeleteபரவால்லமா...உங்களின் அன்பு எல்லோரும் உணர்ந்துள்ளோம்..நன்றிமா..
Deleteவிழாவினை மிகச் சிறப்பாக
ReplyDeleteநடத்திக் கொடுத்த உங்களுக்குத்தான்
நாங்கள் நன்றி சொல்லவேண்டும்
இனி எந்தப்பதிவர் சந்திப்பிற்கும்
புதுகை பதிவர் சந்திப்பே நிச்சயம்
ஒரு அளவு கோலாய் இருக்கும்
வாழ்த்துக்களுடன்...
உங்களது ஈடுபாடு, ஆலோசனைகள்,நன்கொடைகள் மலைக்கவே வைக்கின்றது....மிக்க நன்றி சார்
Deleteஅன்புத் தங்கையே இந்த விழாவின் அத்தனை பெருமையும் உங்களுக்கும் எனது இன்னொரு சகோதரி ஜெயலட்சுமிக்கும் நம்மோடு காலநேரம் பாராமல் பாடுபடட இளைய பட்டாளத்திற்கும் தான் மா. உங்களோடு போ்ட்டிபோட வயது காரணமாக என்னால் முடியாது என்பது புரிந்தும் செயல்பட வைத்ததே நீங்கள் இருவரும்தான். (உட்கார்ந்து கற்பனையிலேயே எல்லாவற்றையும் புதிது புதிதாக சிந்தித்து விடுபவன் நான். இன்னும் என்னென்ன செய்தால் விழா வெற்றி பெறும் என்ற எனது யோசனைக்குச் செயல் வடிவம் தந்த உங்கள் இருவர் மற்றும் கடைசிவரை அசராமல் பாடுபட்ட அன்புத் தம்பிகள் அனைவரின் உழைப்பு உழைப்பு உழைப்பு எதையும் எதிர்பாராத உழைப்பு அதுதான் வெற்றி. கடைசியில் உங்களையே சுருக்கிக்கொள்ளச் சொன்னதில் எனக்கும் மிகப்பெரிய வருத்தம் தான் எனினும் நீங்கள் -இந்த நிலைகடந்து- நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பக்குவம் வந்தவர் என்பதால்தான் துணிந்து சொன்னேன். அதை ஏற்றுக்கொண்ட உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி மா. (வில்வம் மாதிரி வெளியிலிருந்தும் ஆதரவு தந்த அத்தனை பேரின் பங்கும் சேரந்த இந்த விழாச் சிறப்புக்கு என்னை மட்டும் பொறுப்பாக்கி எனக்கு மட்டும் மாலை போட வந்ததை இதனால்தான் நான் விரும்பவில்லை)
ReplyDeleteஅண்ணா ....என்னை பக்குவப்படுத்தி ,நான் வளரக்காரணமாய் இருந்து என் வளர்ச்சியைக்கண்டு பாராட்டி ,ஊக்கப்படுத்தி மகிழும் உண்மையான உங்களது அன்பு என் வாழ்வில் வரம் தான்...நீங்கள் மறந்து இருப்பீர்கள் தமிழ் கற்பித்தல் பயிற்சிக்காக நாம் சென்னை சென்று பயிற்சி பெற்றோம்....அதற்கு என்னை தேர்வு செய்தது நீங்கள் தான்...அதற்கு பின் தான் என்னுள் இருந்த திறமைகள் வெளி வரத்துவங்கியுள்ளது...இந்த இலக்கிய ,வலைத்தள உலகம் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் நான் இருக்கும் இடத்தில் இன்று புல் என்ன மரமே முளைத்திருக்கும்...வேதனையான காலங்களில் என்னை தேற்றியதே இலக்கிய உலகம் தான்....நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லி பிரித்து பார்க்க முடியும்...வயது பற்றி கூறாதீர்கள் இளஞர்களை விட வேகமாக செயல் படும் நீங்கள் வயது பற்றிகூறலாமா...?எல்லோரும் மனதார விழாவின் வெற்றியையே சிந்தனையாய் ஓடினோம் சாதித்தோம் என்பது தான் உண்மை..மாலை அனைவருக்கும் போட இயலாதென்றே உங்களில் இருக்கும் எங்கள் எல்லோருக்கும் சேர்த்து போட்ட மாலைதான் அண்ணா...அது...மகிழ்கின்றோம் நாங்கள்...சங்கடமேன் உங்களுக்கு..?
Deleteமிகச் சரியாக ஐந்து மணிக்கு விழா நிறைவடைய எவ்வளவு சமரசங்களை செய்திருக்கிறீர்கள். விழாவிற்கு வருவதற்கு முன் "முதல்நாள் வருபவர்களின் கவனத்திற்கு" அந்த பதிவைக்கூட படிக்க இயலவில்லை. வெள்ளி இரவு சுத்தமாக எனக்கு தூக்கமில்லை. அவ்வளவு எதிர்பார்ப்பும் பரபரப்பும். சனிக்கிழமை அதிகாலை கோவையிலிருந்து கிளம்புவதற்கு முன் தான் மண்டபத்திற்கு வரும் குறிப்புகளைப் படித்தேன். இந்த விழா குறித்து அறியத்தந்தது வலைச்சித்தரின் கூகிள் ப்ளஸ்சிலிருந்து வந்திருந்த மின்னஞ்சல் என்றாலும் விழாக் குழுவினர் சார்பாக முகவரி தேடி வந்து (எனது வலைப்பூவில் ) அழைத்தது தாங்கள்தான். பச்சை புடவையில் செல்கிறார்களே அவர்கள்தான் கீதா மேடமான்னு உங்கள் குடும்பத்தினரிடமே கேட்டேனென நினைக்கிறேன்.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
விழாவை நாங்கள் நேரலையில் பார்த்தேன்.. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. சிறப்பாக நடைபெற்றது... தங்களுக்கும் தலமை தாங்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோ நீங்கள் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..சகோ
Deleteபுதுகை பதிவர்களின் தன்னலமற்ற பணி போற்றுதலுக்கு உரியது சகோதரியாரே
ReplyDeleteபோற்றுதலுக்கு உரியது
மிக்க நன்றி அண்ணா...
Deleteஎந்நாளும் இந்த நிகழ்ச்சியை மறக்க மாட்டேன். பல விசயங்களை இந்த விழாவின் மூலம் கற்றுக் கொண்டேன். குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து விடுங்க. உங்களுக்கும். நன்றி.
ReplyDeleteஉங்கள் வருகையால் பெருமைபெற்றோம்....மிக்க நன்றி சார்.
Deleteதேனீ போன்ற தங்கள் சுருசுருப்புக்கு,தலைசாய்த வணக்கம் கணக்கில!
ReplyDeleteஅய்யா உங்களின் உடல்நலக்குறைவிலும் இவ்வளவு தூரம் எங்களுக்காக வந்திருந்து நாள் முழுதும் இருந்து சிறப்பித்தீர்கள்...இதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு...மிக்க நன்றி அய்யா...
Deleteவீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை செய்து பார் என்பது போல விழாவை வெற்றிகரமாக நடத்திய பெருமை உங்களையும் விழா குழுவினரையும் சாரும் நேரடியாக எங்களால் பார்க்க முடியாவிட்டாலும் ஒளிபரப்பின் மூலம் பல எழுத்துலக ஜாம்பவான்களை காண முடிந்தது நன்றி .
ReplyDeleteஉண்மைதான் மகிழ்வாகத்தான் இப்பணியைச்சுமந்தோம்.....மிக்க நன்றி சார்.
Deleteகுழுவில் ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சமம் என்ற நிலையில் தேனீ போல சுறுசுறுப்பாகவும், விவேகமாகவும் பணியாற்றிய விதத்தை நேரில் கண்டு வியந்தோம். பின்வரும் வலைப்பதிவர் மாநாடுகளுக்கு இவ்விழாவினை முன்மாதிரியாகக் கொள்ளலாம். அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteஅய்யா உங்களின் பெருமை எஸ் .ரா.வின் பேச்சு மூலம் பலரும் அறிந்தார்கள்...கொண்டாடப்படாத உங்கள் பணிக்கு முன் இது சாதாரணம்....உங்களின் ஆர்வமும் ஈடுபாடும் விழாவிற்கு மேலும் மெருகூட்டியது அய்யா..
Deleteவலைப்பதிவர்2015 விழா -நன்றியுரை = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
ReplyDeleteஎங்கள் அருமை மகள் கீதா அவர்கள் அவரது முகநூல் பக்கத்தில் = Devatha Tamil = நிகழ்ச்சியில் முழு விபரங்களை நேரலையாக You Tube இல் 2 பகுதிகளாக ஏற்றி link கொடுத்திருக்கிறார். நண்பர்கள் அவர்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொண்டு பார்த்து ரசிக்க வேண்டுகிறேன்.
இன்றி பதிவுகள் உயிர்த்துடிப்போடு இருப்பதற்கு புதுக்கோட்டை, தஞ்சை பதிவர்கள் காரணம். அதற்கு திரு முத்து நிலவன் & அவரது அணியினர் தான் காரணம். வயது, உடல் நிலை காரணமாக கலந்து கொள்ள முடியாதது எனக்கு மிகுந்த வருத்தம். அன்று இரவே எங்கள் அருமை மகள் கீதாவிடம் போன் செய்து விசாரித்தேன் - அனைவருக்கும் வாழ்த்துகள்.
எனக்கும் அந்த வருத்தம் உண்டு அப்பா ...முதன் முதலில் வருகின்றேன் என கூறியவர் நீங்கள் தான்...மிக்க நன்றி அப்பா..
Deleteவிழாவினை மிகச் சிறப்பாக திட்டமிட்டு அதனை சரியாக செயல்படுத்திக் காட்டிய விழாக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். கலந்து கொள்ள முடியாவிடினும், பதிவர்கள் அனைவரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அங்கே இருக்க முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
ReplyDeleteநிகழ்ச்சி தயாளிப்பாளர் பட்டறையின் ஏடுகளில்
ReplyDeleteவிழா நிகழ்ச்சியை செம்மையாக நடத்திய விழா குழுவினர்களை பாராட்டும் விதமாக "நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்" என்கிற தலைப்பின் கீழ் "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் நிகழ்ச்சி மேலாண்மை குறித்த விவரங்கள் இடம்பெறுகிறது" என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய விழா குழுவினர் அனைவரும் மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறையின் ஏடுகளில்
ReplyDeleteவிழா நிகழ்ச்சியை செம்மையாக நடத்திய விழா குழுவினர்களை பாராட்டும் விதமாக "நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்" என்கிற தலைப்பின் கீழ் "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் நிகழ்ச்சி மேலாண்மை குறித்த விவரங்கள் இடம்பெறுகிறது" என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய விழா குழுவினர் அனைவரும் மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
elango sir sonnathuthaan enathu kaaruthum madam.
ReplyDeleteeluthil vasikkumpothu nallaa irukku.
vizavai vetrikaramaaka nadathi muditha vizaa kuzuvinar anaivarukkum vaazthukkal.
மிக்க நன்றி சகோ...
ReplyDeleteமன்னிக்கவும் சகோ...தாமதமான வருகைக்கு. எங்கள் கருத்து இருவரும் சேர்ந்து எழுதுவதால்...குறிப்பாக இதற்கு....துளசிக்கு சற்று உடம்பு சரியில்லாமல் போனதால்...
ReplyDeleteஉங்கள் அனைவரது உழைப்பும்தான் இந்த விழாவைத் தூக்கி நிறுத்தியது என்றால் மிகையல்ல. உங்களது முகம் மலர்ந்த வணக்கம், புன்சிரிப்புடன் செய்த பணி என்பது கூடுதல் + ...அனைவரது விருந்தோம்பல்....எல்லோரது நட்பு...
இதற்குத்தான் நாங்கள் நன்றி உரைக்க வேண்டும் சகோ! நீங்கள் எல்லோருக்கும் நன்றி கூறினாலும் நாங்கள் எல்லோரும் கூற வேண்டும்...ஆம் நாங்கள் நிறைய தெரிந்து கொண்டோம், கற்றுக் கொண்டோம் ...
விழாக் குழுவினர அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்....அதனை நண்பராக, ஒரு சிறந்த தலைவராகத் தங்களை எல்லாம் வழி நடத்திச் சென்ற சகோதரர் எங்கள் மதிப்பிற்குரிய திருமிகு முத்துநிலவன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள் பல!
நன்றி...
ReplyDeleteநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...
இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்←
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்