World Tamil Blog Aggregator Thendral: தமிழனின் அதிகாரி யார் இப்போது?

Saturday 24 October 2015

தமிழனின் அதிகாரி யார் இப்போது?

அவருக்கு மாதம் ரூ 3000 சம்பளம்...பள்ளியில் துப்புரவாளர் பணி..ஊதியம் போதாமல்...விடுமுறை நாட்களில் வேறு பணிகளுக்கு சென்று ஊதியம் ஈட்டுகிறார்....அவர் பேசுகையில் குழந்தையை படிக்க வைக்க முடியலம்மா..ஆனா மனைவி குழந்தையை ஆங்கில வழிக்கல்வில தான் அதுவும் பணம் கட்டித்தான் படிக்க வைக்கணும்கிறா...எல்.கே.ஜி.கே ஆயிரக்கணக்கில் கட்ட வேண்டியதாயிருக்கு... என்று புலம்பினார்..வருத்தமாக இருந்தது...ஆங்கிலேயர் போனபின்னும் ஆங்கிலத்திற்கு அடிமையாக இருக்கும் நிலை என்று மாறும்...?

நமக்குதான் ஆங்கிலம் வரல குழந்தையாவது நல்லா படிக்கணும்னு நினைப்பது தவறில்லை...ஆனால் இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் போது பணத்திற்காக வீட்டில் வரும் பிரச்சனைகள்....நினைக்கையில் ..

என் வகுப்பில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களை விட தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களே பாடங்களை எளிதாக புரிந்து கொள்வதை கண்கூடாகப்பார்க்கின்றேன்..இதில் நானும் உள்ளடக்கம் என்பது தான் வருத்தமான ஒன்றாக...தமிழின் அருமை உணராத தலைமுறையால் எதிர்காலத் தலைமுறை தமிழில் படிப்பவர்களை ஏளனமாக பார்க்கும் நிலையை உருவாக்கி விட்டோம்...இருக்குற பிரச்னைகளில் கல்வியும் ஒரு பிரச்சனையா மாறிகிட்டு இருக்கு...எளிய மக்களுக்கு..

15 comments :

  1. "அன்று என் பையனுக்கு ஆங்கிலம் தெரியாதுனு பெருமையா சொல்லுவாங்க! இன்று என் பையனுக்கு தமிழே தெரியாதனு ரெம்ப பெருமையா சொல்றாங்க!!!!!

    ReplyDelete
  2. வேதனைப்பட வேண்டிய விசயம்...

    ReplyDelete
  3. அரசுப்பள்ளி, தமிழ்வழி கல்வி என்றாலே ஏளனப்போக்கு என்ற நிலை மலிந்துவிட்டது வருத்தமான ஒன்று!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் அதிகமாகிக்கொண்டே வருகின்றது சகோ.

      Delete
  4. உண்மைதான் சகோதரி ! அரசானது கல்வியை அவரவர் தாய் மொழியில் தான் கற்க வேண்டும் என ஆணை பிறப்பித்தால் ஒழிய! தமிழ் மொழி வளர்வது கடினம் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ...விழாவில் உங்களை பார்த்தும் பேசமுடியவில்லை ...உண்மைதான் நீங்கள் சொல்வது .வருகைக்கு நன்றி சகோ..

      Delete
  5. வேதனைப்பட வேண்டிய விஷயம்தான் அக்கா..
    ஆனால் எல்லாருமே அப்படித்தானே மாறியிருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்பா...சிரமமான சூழ்நிலையிலும் நன்கொடை அனுப்பி உள்ளதைப்பார்த்து மனம் நெகிழ்ந்து போனது...நன்றி பா.

      Delete
  6. #பள்ளியில் துப்புரவாளர் பணி..

    இரண்டு விதமாக அனுகலாம் பொதுவாக பெரும்பான்மை அடிமைச்சமூகத்தினர் துப்புரவாளர்களாக பணியாற்றுபவர்கள் . அவர்களின் பிள்ளைகளும் அதே பணியைத்தான் செய்யவேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில் தள்ளப்படுகிறார். தன் பிள்ளை தன்னைப்போல அல்லாமல் மாற்று வேலைக்குச் செல்ல வேண்டுமென நினைத்திருக்கிறார் . அது தவறில்லை ஆனால் அறிவுத்திறன் ஆங்கிலவழிக் கல்வியில்தான் புகுத்தப்படுகிறது எனும் இரண்டாவதான பொதுபுத்தி அனுகுமுறையை உறுவாக்கியவர்கள் யார்?
    இங்கே பணக்கார வர்க்கத்தின் முடிவையே ஏழைகளும் எடுக்கிறார்கள் அதற்காக அவர்கள் உயிரை விடவும் தயங்குவதில்லை என்னைப் பொறுத்தவரையில் இதை மொழிப்பிரச்சனையாக பார்க்கவில்லை பொருளாதார பிரச்சனையாக பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பொருளாதாரமும் ஒரு காரணம்..மொழி பற்றும் தெளிவும் இருப்பின் யாரும் தாய்வழிக்கல்வியை தவிர்க்க மாட்டோம்...

      Delete
  7. எளிய மக்களுக்கு அனைத்துமே பிரச்சினைதான்
    தம +1

    ReplyDelete
  8. பலருக்கு படிக்க வைப்பதே பிரச்சனையாக இருக்கிறது - தாய் மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ. எல்லா இடங்களிலும் இப்பிரச்சனை உண்டு. வடக்கில் கூட ஹிந்தி மீடியம் எடுப்பவர்களை விட, ஆங்கில மீடியம் எடுப்பவர்கள் தான் அதிகம்....

    ReplyDelete
  9. இது நாடு முழுவதும் உள்ள பிரச்சனைதான்....இதைப்பற்றி எழுத்தாளர் சுஜாதா கூட எழுதியிருக்கின்றார்...

    தாய்மொழியை நன்றாக அறிந்திருந்தால் வேறு எந்த மொழியும் எளிதில் வந்திடும். ஜப்பான், சைனா மக்கள் இன்னும் சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் தாய்மொழிக் கல்விதான் பயிற்றுவிக்கின்றார்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...