வாழ்த்துகளுடன் செல்வோமே....இவர்களுடன்
--------------------------------------------
மாண்புக்குரிய அப்துல்கலாம் நம்மை விட்டு நீங்கிய கணத்தில் அவரின் நினைவாக தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு.விதைக் Kalam.
விதைக் Kalam குழுவினர்.சகோ கஸ்தூரிரங்கனின் அவர்களின் ஊக்கத்தாலும்,மலையப்பன்,கார்த்திக், போன்ற 20 இளைஞர்களால் துவங்கப்பட்டு இன்று 50 உறுப்பினர்களாக வளர்ந்துள்ளது.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று இவ்வமைப்பினர்... 5 மரக்கன்றுகள்,கடப்பாறை,கூண்டு சகிதம் கிளம்பி பாதுகாப்பான பள்ளிகளில் 5 மரக்கன்றுகளை ஊன்றி வருவதுடன் மட்டுமின்றி அவற்றின் வளர்ச்சியை கவனித்து மகிழ்கின்றனர்.
எல்லோருக்கும் முன்னுதாரணமாகத்திகழும் இந்த இளைஞர்கள் தனது பாதையில் 25 ஆவது வாரத்தை தொட்டுள்ளது பாராட்டுதற்குரியது.
வரும் ஞாயிறு14.02.16 அன்று காலை சேங்கைத்தோப்பில் 300 ஆவது மரக்கன்றை ஊன்றி மேலும் 50 மரக்கன்றுகளை ஊன்ற உள்ளனர்.
பேசியே பொழுது போக்குபவர்களின் மத்தியில் தன்னாலான முயற்சியை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அக்குழுவினர் இவ்வாரத்தைக்கொண்டாட அனைவரையும் அழைக்கின்றனர்..
மனமுள்ள நல்லவர்கள் புடைசூழ இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடக்கட்டும்...
14.02.16 அன்று காலை 6 மணியளவில் பனிப்புகை சூழ மகிழ்வுடன் கொண்டாட அழைக்கின்றனர்.
புதுகை பசுமையாகிட உழைக்கும் விதைக்கலாம் குழுவினர் ஆர்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் முயற்சிகள் யாவும் வெற்றிபெற
ReplyDeleteதங்களின் குழுவிற்கு எமது வாழ்த்துகளும்
ReplyDeleteதமிழ் மணம் 1
இது மிகவும் பசுமையான செய்தியாக உள்ளது.
ReplyDeleteஇதில் ஆர்வத்துடன் பங்கேற்று செயல்படும் அனைவருக்கும் நம் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதுகை பசுமை சூழ வாழ்த்துக்கள் குழுவிற்கு
ReplyDeleteநல்ல நெஞ்சங்களின் நல்ல முயற்சி....
ReplyDeleteஅரிய பணியை மேற்கொண்டுவரும் அனைவரும் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
ReplyDeleteவிதைக்'கலாம்' குழுவினருக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteத ம 3
அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். இன்றைய கன்றுகள் நாளைய விருட்சங்களாய் வளர்ந்து நன்மை பயக்கட்டும்.
ReplyDeleteவிதைக்கலாம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்பான பணி... தொடரட்டும்.
விதை விதை கலாமின்
ReplyDeleteகொள்கையை விதை....
நாளை ஒரு இளைஞர்
சமுதாயத்தை அறுவடை
செய்ய இன்றே விதை....
அருமையான செயல், குழுவினருக்கு வாழ்த்துக்கள்...தங்கள் செப்பணி தொடர வாழ்த்துக்கள்!!
ReplyDelete