World Tamil Blog Aggregator Thendral: கற்பிக்கவோ?கற்கவோ?

Friday 20 November 2015

கற்பிக்கவோ?கற்கவோ?

கற்பிக்கவோ?கற்கவோ?
----------------------------------------

இன்று காலை முதல் பிரிவேளையில் குழந்தைகளிடம் சற்று பேசலாம் என ஒவ்வொருவராக வீட்டில் என்ன பணிகள் செய்கின்றீர்கள் எனக்கேட்டேன்...
பொதுவாக என் வகுப்பு மாணவிகளிடம் லீவில் என்ன ஜாலியா இருந்தீங்களான்னு கேட்டா போங்கம்மா.லீவே வேண்டாம்மா என்பார்கள்..

ஏன்மா என்றால்...
அம்மா வேளை சொல்லிக்கிட்டே இருப்பாங்கம்மா...என்றாள் ஒருத்தி...வீடு என்பது அனைவருக்கும் பொதுவானது அதில் அம்மா மட்டும் வேலை செய்ய மற்றவர்கள் ஓய்வில் இருப்பது முறையாம்மா என்றதற்கு இல்லம்மா அப்பதான் கடைக்கு போயிட்டு வருவேன்மா மறுபடி மறுபடி கடைக்கு போக சொல்வாங்க ,திட்டிக்கிட்டே இருப்பாங்க, வீடு வேண்டாம்மா என்ற போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது...

நான் சிறுவயதில் லீவுன்னா அதை என் உறவுகளுடன் எப்படியெல்லாம் கொண்டாடினோம், ஏன் இந்தக்குழந்தைகள் வீட்டில் இருப்பதை விரும்பவில்லை...

விடுமுறை அவர்களை வீட்டுக்குள் அடைக்கின்றது...பிடித்த சேனலை டிவியில் பார்க்க அம்மா,தாத்தா,பாட்டிகள் அனுமதிப்பதில்லை,
வீட்டில் பணி செய்வதை குழந்தைகள் விரும்பவே இல்லை என்பதை உணர்ந்தேன்...

வீட்டில் உனக்கும் வேலை செய்ய வேண்டியக்கடமை உள்ளதும்மா.நீ கட்டாயம் ஏதாவது உதவி அம்மாவிற்கு செய்ய வேண்டும்மா..என அறிவுறுத்திய போது ஏற்றுக்கொண்டனர்..

பெற்றோர்கள்..குழந்தைகளை சிறிதளவாவது வீட்டுப்பணிகளில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை உணரவில்லை...வளர்ந்த பின் தாங்கள் வீட்டு வேலை செய்வதை குழந்தைகள்..அவமானமாக ,வேண்டாத ஒன்றாக எண்ணத்தலைப்படுகின்றனர்...

அடுத்து எத்தனை பேர் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்றனர் என்று கேட்ட போது ,ஒரு குழந்தை தினமும் சாப்பாடு எடுத்து வருவதில்லை என்றனர்..ஏன்மா எனக்கேட்டதற்கு அப்பா காலையில் 3 மணிக்கும் ,னஅம்மா காலையில் 6 மணிக்கும் குழந்தைகள் எழு முன்னே வேலைக்கு சென்றுவிடுவார்களாம்...மதியம் 12 மணிக்கு வந்து சமைத்து வைத்துவிட்டுச்செ்றுவிடுவார்களாம் அதனால் இக்குழந்தை மதியமும் உணவு கொண்டு வருவதில்லை...கூடப்படிக்கும் குழந்தைகளே தினமும் தங்களது உணவை பகிர்ந்து கொடுத்துள்ளனர்...

சத்துணவு சாப்பிட வேண்டியது தானே என்றதற்கு..பலர் அதை சாப்பிடுவதில்லை என்பதும் ,கட்டாயத்திற்காக வாங்கி வீட்டிற்கு எடுத்து சென்று கொட்டுகின்றனர்..அது அடிக்கும் வாடை பிடிக்கல என்கிறார்கள்..சத்துணவு சமைப்பவர்களிடம் கேட்டால் அரிசியே அப்படி வருகிறது நாங்கள் என்ன செய்வது என்கின்றனர்..
மொத்தத்தில் சத்துணவு பாதிக்குழந்தைகள் சாப்பிடாமல் எடுத்துச்சென்று கொட்டுவது அல்லது அவர்கள் வீட்டு விலங்குகளுக்கு போடுகின்றனர்,,

பாலீஷ் செய்த வெள்ளை அரிசியால் சர்க்கரை நோய்தான்மா வரும் சத்துணவு உடலுக்கு நல்லதும்மா என்று சமாளித்தேன்..காலையில்நான் சாப்பிட எடுத்துச்சென்ற உணவைக்கொடுத்து சாப்பிடச்சொன்னேன்...சாப்பிட்டு ஒரு குதியலுடன் அவள் டப்பாவைக்கொடுத்த போது இவள் தினமும் காலையில் சாப்பிட என்ன செய்யலாம் என்ற கவலை வந்தது..

மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு தண்னீர் எடுத்துக்கொடுத்தல்,கூட்டுவது ,தங்களது துணிகளைத்தாங்களே துவைத்துக்கொள்வது,கடைக்குச்செல்வது,சில குழந்தைகள் சமைப்பது என செய்வதாகக்கூறினர்..

குழந்தைகளை பெற்றோர்களுக்கு உதவி செய்வது அவர்களின் கடமை என்று உணர்த்திய பின், காலையில் நான் குறித்துக்கொடுக்கும் கேள்விகளைப் படித்து விட்டால் மதியம் முகமூடி அணிந்து விளையாடலாம் என்ற பின் அவர்கள் என்னைக்கவனிக்கவே இல்லை குழுவாக அமர்ந்து சமர்த்தாகப்படிக்க ஆரம்பித்து விட்டனர்.

மதியம் பத்து முகமூடிகளைக்கொடுத்து அவர்களையே குழுவாக நடிக்க சொன்னேன்..அவர்களே நாடகத்தை உருவாக்கிட வேண்டும் என்றேன்..




..முகமூடிகளை அணிந்து விளையாடிய மாணவிகளுக்கு நடுவில், மண்டையோடு முகமூடி அணிந்து ஒருத்தி வர அழகிய முகமூடி அணிந்த பெண் ,அவளை விளையாட்டில் சேர்க்க கூடாது அவள் அசிங்கமாக மண்டையோடு முகத்துடன் இருக்கிறாள் என்றாள் உடனே கூட இருந்த எலி ,சிங்க,புலி,சிறுமி.எல்லோரும் அவளை சமாதானப்படுத்தி அழகு என்பது மனதைப்பொறுத்தது,,...முகத்தைப்பொறுத்தது அல்ல..நம் செயல்களைப்பொறுத்தது என்று கூறி அவளையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றது அவளும் மனம் மாறி சரி எல்லோரும் சேர்ந்து விளையாடலாம் என்றாள்...

ஓவ்வொரு குழுவும் ஒரு கருத்தை வலியுறுத்தி நடத்தபோது தான் என் கற்பித்தல் செழுமையடைவதை உணர்ந்தேன்...
கற்றுக்கொடுக்கின்றனர் குழந்தைகள் நாளும் நாளும் எனக்கு...

26 comments :

  1. நாம் பயணிக்கும் விதத்தில் பயணித்தால் (நான் ஆசிரியர் என்ற எண்ணம் இல்லாது) குழந்தைகளிடம் நிறையக் கற்றுக் கொள்ளலாம்... உங்களின் அணுகுமுறையும் பாடம் எடுக்கும் திறனும் அவர்களுக்கும் ரொம்பப் பிடித்துப் போகும்...
    நல்ல முயற்சி அக்கா... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தம்பி

      Delete
  2. கஷ்டமா இருக்கு கீதா..
    நல்ல கருத்துடன் நடித்துள்ளனர் குட்டீஸ்

    ReplyDelete
  3. வீட்டு விலங்குகள் கூட மோந்து பார்த்து விட்டு சாப்பிடுவதில்லை...!

    ReplyDelete
  4. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    ReplyDelete
  5. =====================================================================

    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    ===========================================================================


    மதிய உணவின் தரத்தை உயர்த்த வேறு வழியே கிடையாதா? என்ன கொடுமை! தப்பு செய்வது அரசாங்கமா, அதிகாரிகளா என்று தெரியவில்லை. குழந்தைகளுக்குப் போடும் உணவில் இப்படிச் செய்ய எப்படித்தான் மனம் வருகிறதோ...

    தம +1

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வதுன்னு தெரியல..தான்

      Delete
  6. நீங்கள் பணிபுரிவது அரசுப் பள்ளி என்று நினைக்கிறேன். அங்குதான் ஆசிரியர்கள் வாழ்க்கையையும் கற்றுத் தருவார்கள். நீங்கள் கற்றுத் தருகிறீர்கள். கொடுத்துவைத்த மாணவர்கள். பாராட்டுகள்! தொடர வாழ்த்துகள்!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. அரசுப்பள்ளிதான் அதிலும் 17 வருடங்கள் கிராமங்களில் பணி புரிந்துள்ளதால் குடும்பச்சூழ்நிலை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

      Delete
  7. அருமையான கற்பித்தல் முறை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  8. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    ReplyDelete
  9. வணக்கம்
    சிறப்பான கற்பித்தல் முறை.. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. சத்துணவு - சாப்பிட முடியாத உணவாக இருப்பது கொடுமை......

    குழந்தைகளும் வீட்டு வேலைகளில் பங்கெடுப்பதன் அவசியம் புரிய வைத்தது நன்று. முகமூடி விளையாட்டும் பிடித்தது!

    ReplyDelete
  11. கற்பித்தல் என்பதே அடிப்படையில் கற்றல்தானே? ஆர்வமுள்ள ஆசிரியர் மட்டுமே இதை உணர்வர். நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். அருமைம்மா.

    ReplyDelete
  12. சகோ! முதலில் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். குழந்தைகளை ஈடுபடுத்தி கற்றலைக் கற்பிப்பதற்கு. அருமையான மிகச் சிறந்தப் பயிற்சி. இதில் கற்றல் மட்டுமல்ல குழந்தைகளின் திறமையும் மேம்படும். தைரியமும் வரும். அருமை அருமை...

    சத்துணவு வேதனை.....எங்கு தவறு நடக்கின்றது? அதை நிர்வாகிக்கும் அதிகாரிகளா? சமைப்பவர்களின் பங்கா? அதை அங்கு கொண்டு தருபவர்களின் பங்கா? இல்லை அரசா? ஏன் அரசிற்கு இதைத் தெரியப்படுத்தக் கூடாது?

    குழந்தைகளையும் ஈடுபடுத்தி வீட்டில் உதவ வேண்டும் என்பதைப் புரிய வைத்தது...அருமை விளையாட்டும் அருமை...தொடருங்கள் உங்கள் முயற்சிகளை...வாழ்த்துகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...