சந்தைப்பேட்டை அ.ம.மே.நி.பள்ளியில் நாணயவியல் கண்காட்சி
இரண்டு மாதங்களுக்கு முன் எங்கள் பள்ளியில் நாணயவியல் கண்காட்சி
நடந்தது...சூழல் காரணமாக என்னால் உடனே எழுத முடியவில்லை...ஆனால் அதன் சிறப்பை கூறவேண்டும் என்ற எண்ணம் இன்று வடிவில்...
நடந்தது...சூழல் காரணமாக என்னால் உடனே எழுத முடியவில்லை...ஆனால் அதன் சிறப்பை கூறவேண்டும் என்ற எண்ணம் இன்று வடிவில்...
ரூபாயில் எத்தனை மாற்றங்கள்...
டீச்சர் இந்த 50 ரூபாய்களில் ஏதும் வித்தியாசங்கள் தெரிகிறதா ?.என நாணயவியல் கழகத்தலைவர் திருமிகு பஷீர் அலி அவர்கள் கேட்ட போது ஒண்ணும் தெரியலயே சார் என்றேன்....நல்லா உற்றுப்பாருங்கள் என்றார் அப்போதும் ம்கும் என்றேன்...சிரித்துக்கொண்டே பாரளுமன்றம் தெரிகிறதா ?என்றார்...ஆம் என்றேன்...
மேலே உள்ள கொடியைப்பாருங்கள் என்றார்..பார்த்தபோது வியந்தேன்..ஒரு நோட்டில் பாராளுமன்றத்தின் மேல் கொடிக்கம்பம் மட்டுமே இருந்தது,மற்றொன்றில் ஏதோஒரு கொடி பறந்தது,வேறு ஒன்றில் நம் தேசியக்கொடி பறந்தது....நாம் தினமும் புழங்கும் ரூபாயில் நுணக்கமாக எத்தனை விசயங்கள் உள்ளன..என மலைத்தேன்.
மேலும் பல நாடுகளில் தமிழ்மொழி மூன்று, நான்காம் இடத்தில் இருக்க இந்திய ரூபாயில் மட்டும்..கீழே உள்ளது என...தமிழ்மொழிக்கு மரியாதை இல்லை என்பதை வேதனையோடு பகிர்ந்து கொண்டார்...
125 நாடுகளுக்கும் மேற்பட்ட நாணயங்கள் ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து பொக்கிஷமாக வைத்துள்ளார்..
அனைத்துக்குழந்தைகளும் இதைக்கண்டு அறிந்து கொள்ள வேண்டும் என்பதையே நோக்கமாகக்கொண்டு செயல் படுகின்றார்.கண்காட்சியைப்பார்த்த பின் மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு பரிசுகளை அள்ளித்தந்தார்...
நாம் பார்த்தே இராத, பார்க்கவே முடியாத அரிய பழங்கால நாணயங்களைக்காட்டிய போது அதிசயத்து நின்றோம்...
எளிமையான ,பழகுவதற்கு இனிமையான,தன்னால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்வதுடன்,மேலூம் பலரிடமிருந்து பெற்று வழங்கியும் ...மதிப்பிற்குரிய மனிதராக திருமிகு பஷீர் அலி வாழ்ந்து வருகின்றார்...எனக்கு தெரியாத எவ்வளவோ நல்ல விசயங்கள் அவரைப்பற்றி கேள்வி படுகின்றேன்..
பள்ளிகளில் யாரும் விரும்பினால் அழைக்கலாம்..
பஷீர் அலி: 9626232725
திருமிகு பஷீர் அலி ஐயாவிற்கு வாழ்த்துகள்...
ReplyDeleteமிக்க நன்றி சார்.
Deleteநாணய சேகரிப்பு ஒரு அற்புதமான பொழுதுபோக்கு மட்டுமல்லாது பலருக்கு வாழ்க்கையாகவுமே ஆகிப்போகிறது.. என்னிடமும் நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளது. அபூர்வமாக எதுவும் இல்லையென்றாலும் பல தரப்பட்ட பலநாட்டு நாணயங்களை நம்முடைய சேமிப்பில் பார்க்கும்போது எழும் உற்சாகம் எழுத்தில் அடங்காது.. நாணயக் கண்காட்சி பற்றிய பகிர்வுக்கு நன்றி கீதா.
ReplyDeleteஉண்மைதான்மா..நானும் கொஞ்சம் வைத்துள்ளேன் ஆனா அவரிடம் அரிய நாணயங்கள் எல்லாம் உள்ளது...
Deleteஅனைவரையும் யோசிக்க வைக்கும் செய்திகளுடன் கூடிய மிகவும் அருமையான பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றி சார்...உண்மையாகவே எல்லோரும் ஒருமுறை காணவேண்டும் வலைப்பதிவர் விழாவில் கூட வைக்க எண்ணி..பின் விட்டுவிட்டோம்..
Deleteகண்காட்சியில் கலந்துகொண்ட உணர்வு. நல்ல ஒரு மனிதரையும் அறிமுகப்படுததியுள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா...
Deleteபகிர்வுக்கு நன்றி! அவரது அலைபேசி எண் தராமல் விடுபட்டு உள்ளதே!
ReplyDeleteஎண்ணை இணைத்துவிட்டேன் சகோ...நன்றி வருகைக்கு..
Deleteநல்ல தகவல்கள் சகோ நானும் விபரமறிந்த காலத்திலிருந்து பல நாட்டு ரூபாய்களை சேகரித்து வருகிறேன் ஐயா பஷீர்அலி அவர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteவிரைவில் உங்களின் நாணயங்களையும் காட்சிப்படுத்தலாம்...சகோ..
Deleteதிருமிகு பஷீர் அலி ஐயா அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்
ReplyDeleteபோற்றுவோம்
தம+1
உண்மைதான் அண்ணா..
Deleteநல்லதொரு கண்காட்சி -குறிப்பாக மாணவ, மாணவியருக்கு உதவிகரமானது.
ReplyDeleteஇந்த பஷீர் அலி சார் புதுக்கோட்டைக்காரரா? அவரைப்பற்றி இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம். அடுத்தமுறை புதுக்கோட்டை வருகையில் அவரை சந்திக்க முடிந்தால் சில அபூர்வமான வெளிநாட்டு நோட்டுகள் நாணயங்களை அவருக்கு என்னால் தரமுடியும்.
ஆம் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள அறந்தாங்கியைச்சார்ந்தவர்..நிச்சயம் சந்திக்கலாம்..உங்களின் உதவி எல்லா மாணவர்களையும் அறியச்செய்யும்...அவசியம் வாருங்கள்..சார்.
Deleteநாணயச் சேகரிப்பு - சிறப்பான ஒரு பொழுதுபோக்கு. திரு பஷீர் அலி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteஉண்மைதான் அறிவார்ந்த பொழுதுபோக்காக பஷீர் அலி செயல்படுகின்றார் சார்..நன்றி.
Deleteபயனுள்ள கண்காட்சி மாணவ, மாணவியருக்கு.
ReplyDeleteஇந்த பஷீர் அலி-சார் புதுக்கோட்டைக்காரரா? அவரைப்பற்றி இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் நீங்கள்.
அடுத்த முறை புதுக்கோட்டை வருகையில் அவரைச் சந்திக்க நேர்ந்தால், அவருக்கு சில அபூர்வமான வெளிநாட்டு நாணயங்கள், நோட்டுகளை என்னால் தர இயலும்.
-ஏகாந்தன், டெல்லி
கண்காட்சி மூலம் பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteத ம 4
மிக்க நன்றி..சகோ..
Deleteஅருமையான நிகழ்வு! புகைப்படங்களுடன் இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ! பஷீர அலி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி அறியத்தந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDeleteகீதா: நானும் மகனும் பல நாட்டுக் காயின்கள் ரூபாய்களைச் சேர்த்து வருகின்றோம். மிக்க நன்றி சகோ..
அப்படின்னா நீங்க அவரை நிச்சயம் சந்திக்க வேண்டும்...வாய்ப்பை உருவாக்குவோம்...மிக்கநன்றி...
Deleteஅன்பு சகோவுக்கு வணக்கம்
ReplyDeleteதங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.
முகவரி -
http://www.killergee.blogspot.ae/2015/11/1.html
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
12.11.2015
U.A.E. Time: 03.44 pm
வணக்கம் சகோ...அவசியம் பார்க்கிறேன்..
Delete