Sunday 18 January 2015

சொல்லவியலா...வலியாய்..


துள்ளி விளையாடிக்கொண்டிருந்த
ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
இரவுப்பொழுதில் வலியோடு என்னில் உறைந்தாய்
உனக்கும் எனக்கும் பிணக்கில்லை...
ஏற்றுக்கொண்டேன்...நீ தந்த வாதையை
மெல்ல என்னை பிசைந்து
பிழிந்தெடுத்தாய்....காலந்தவறாது

இத்தனை வருடங்கள்
பாடாய்ப்படுத்தி போகையிலும்
உச்சி முதல் பாதம் வரை சூடாக்கி
நினைவுகளை மறக்கச்செய்து
எப்போது வருவாயோ என்ற பதற்றத்திலேயே
தவிக்கவிட்டு,வந்தாலும் அச்சுறுத்தி,
தனிமை வலியை அதிகமாக்கி,
என் சுறுசுறுப்பை உறிஞ்சி,
சோம்பலாய் படுக்கையிலேயே
சொந்தமனமும் வெறுக்க,
எதிலும் பிடிபடாது,
எல்லாவற்றிலும் எரிச்சலூட்டி,
உடலைத் துவைத்த துணியாய்
உயிரோடு பிழிந்து,உடல் நடுங்க
மனதில் நிறையும் பதற்றத்தை
இம்சையை தாங்கவியலாத் துயரத்தோடு
வலிகளால் நான் துடிக்க துடிக்க
 வதைத்துச் செல்கின்றாய்...
.என்னில் வாழ்ந்த நீயே
போதும் உன்னுடனான வாழ்வு
போய் வா...


10 comments:

  1. சிறப்பான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மனதைப் பிசையும் வரிகள் கீதா
    த.ம.1

    ReplyDelete
  3. விடயங்கள் மனதில் வலித்தது.
    தமிழ் மண் 2

    ReplyDelete
  4. இனி கால்சியம் நிறைந்த உணவாய் தவறாது எடுத்துகொள்ளுங்கள் அக்கா:)

    ReplyDelete
  5. சொல்லிற்குள் அடங்காச் சோக உணர்வுக் கவிதை தோழி!

    ReplyDelete
  6. உடல் வலியும்
    மன வலியும்
    உயிரைப் பிழிந்தெடுத்து
    வதைக்கத்தான் செய்யும்

    இதுவும் கடந்து போகும்
    என்ற எண்ணம் வைப்போம்
    எதுவுமே கடந்து போகும்
    தம +1

    ReplyDelete
  7. தம +
    நலம் பெருக

    ReplyDelete
  8. மெல்லினத்தாளை(பெண்)
    வல்லினத்தான் (வலி)
    என் செய்ய முடியும்
    இன்சொல் உன்னிடம் இருக்கையிலே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  9. ம்ம்ம்ம் வலிக்கின்றன வரிகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...