சென்னையில் 38 ஆவது புத்தகக்கண்காட்சி
நான் கலந்து கொள்ளும் 2ஆவது புத்தகக்கண்காட்சி..700 ஸ்டால்கள்..ஏயப்பா...
எனது நூல் இருந்த கீதம் பதிப்பகத்தில்...
13மற்றும் 15 ஆகிய இரு நாட்களும் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது.
7வீதிகள் ஒவ்வொரு வீதிக்கும் ஒரு பெயர்..வேலுநாச்சியார் வீதின்னு ஒரு வீதிக்குப்பெயர்...கீதம் பப்ளிகேஷன்ஸ் நடத்தும் தம்பி சிங்காரம் 2 ஸ்டால்கள் முத்துநாடு பதிப்பகம்,கீதம் பப்ளிகேஷன்ஸ் என 2 ஸ்டால்கள் வைத்திருந்தார்கள்...
எங்கு பார்த்தாலும் புத்தகங்கள்..குழந்தைகள் முதல் முதியோர் வரை மகிழ்வுடன் ,வியப்புடன்,வாங்கமுடியாத ஆதங்கத்துடன் என புத்தகப்பிரியர்கள் நிறைந்து வழிய...உள் நுழைந்தேன்...நானும் .
இம்முறை ஸ்டால் எண்கள் மற்றும் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல்களை எழுதி வைத்து இருந்ததால் சிரமமின்றி புத்தகங்களை வாங்க முடிந்தது ..நடந்து நடந்து கால்கள் வலித்தாலும் ..கண்கள் தேடிக்கொண்டே இருந்தன...
முத்துநிலவன் அய்யா வலைப்பூ நண்பர்கள் சந்திப்பு அன்னம் பதிப்பக ஸ்டாலில் ஏற்பாடு செய்திருந்தார்கள்...
இப்பொழுதெல்லாம் எந்த நிகழ்வு மற்றும் விழாக்களில் முகநூல் நண்பர்கள்,வலைப்பூ நண்பர்கள் சந்திப்பு நிகழ்வும் சேர்ந்து கொள்கின்றது.
அன்னம் ஸ்டாலில் முத்து நிலவன் அய்யா,மகாசுந்தர் சார்,சகோதரி தேன் மதுரத்தமிழ் கிரேஸின் தந்தை,தம்பி கோவை ஆவி ,சகோ துளசிதரன் தில்லையகத்து கீதா,குடந்தை சரவணன் சார்,அய்யா செல்லப்பன்,சகோ தளிர் சுரேஷ்,சமீபத்தில் கண்ணகி காவியம் நூல் வெளியிட்ட அய்யா,எழுத்தாளர் ஜெயபிரகாசு,சகோ பால கணேஷ்,ம.பொ.சி பேத்தியும் எனது முகநூல் நண்பருமான பரமேஸ்வரி திருநாவுக்கரசு,மூங்கில்காற்று டி.என் முரளீதரன் சார்,சகோ கிருஷ்ண வரதராஜன் மற்றும் அனு ....இன்னும் பலநண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கண்காட்சிக்கு வந்திருந்த திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள்
புத்தகக்கண்காட்சிக்கு வெளியில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க குழுமியக்கூட்டத்தை காவல்துறை முதலில் தடுத்தாலும் பிறகு அனுமதிஅளித்து நகர்ந்தனர்..அமைதியாக தனது எதிர்ப்பைக்காட்டிய குழுவினருடன் நானும் கலந்து கொள்ள வாய்ப்புகிடைத்தது.
எதிர்பார்த்ததை விட வழக்கம் போல் கூடுதலாகப் புத்தகங்கள் வாங்கி, தூக்கி வரமுடியாததால் தம்பியிடம் அனுப்ப சொல்லி வந்துவிட்டேன்.வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாய் புத்தகக்கண்காட்சி..
சென்ற வருடம் சென்றிருந்த போது தங்கம் மூர்த்திசாரின் புத்தகத்தை அன்னம் ஸ்டாலில் பார்த்ததும் மகிழ்வாய் உணர்ந்தேன் ...இம்முறை முத்துநிலவன் அய்யாவின் நூல்களும் ,கீதம் பதிப்பகத்தில் எனது நூலும் இருந்ததைக் கண்டதும் வந்த மகிழ்வை அளவிட முடியாது...
புத்தகப்பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டியக்கண்காட்சி...

சகோதரி தக்னளையும், முத்துநிலவன் ஐயா அவர்களையும், சகோதரி தேன்மதுரக் க்ரேஸ் அவர்களின் தந்தையையும் மற்றும் பலரையும் நேரில் சந்தித்ததில் மிகவும் சந்தோஷம். நண்பர் துளசியின் சார்பிலும். அவர் முத்துநிலவன் ஐயாவுடன் பேசினார் அன்று. மிகவும் மகிழ்ச்சி சகோதரி! ஒரு கோப்பை மனிதம் எங்களுக்குத் தந்தமைக்கும் மிக்க நன்றி! வாசித்துக் கொண்டிருக்கின்றோம்.
ReplyDeleteசந்தோஷமான சந்திப்பு கண்டு சந்தோஷித்தேன்.
ReplyDeleteமகிழ்வு தரும் சந்திப்புதான். தங்கள் புத்தகமும் வெளிவந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. புத்தகங்களை கையில் எடுத்து பார்ப்பதே ஒரு அலாதிதான். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதகவலை பகிர்ந்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்.த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சென்னை புத்தகத் திருவிழாவிற்கு இதுவரை சென்றதில்லை சகோதரியாரே
ReplyDeleteஅடுத்த ஆண்டாவது அவசியம் செல்ல வேண்டும் என்ற உந்துதலை தங்களது பதிவு ஏற்படுத்தி உள்ளது
நன்றி சகோதரியாரே
தம 2
ReplyDeleteஇனிமையான சந்திப்பு... ம்... கலந்து கொள்ள முடியவில்லை...
ReplyDeleteதங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! நேரமின்மையால் அதிக நேரம் செலவிட முடியவில்லை! உங்கள் நூலையும் வாங்கவில்லை வருந்துகிறேன்! விரைவில் வாங்கி படித்து கருத்திடுகிறேன்! நன்றி!
ReplyDeleteஎனக்குதான் கொடுத்து வைக்கலை.
ReplyDelete