World Tamil Blog Aggregator Thendral: அஹிம்சை

Sunday 24 August 2014

அஹிம்சை



                                          அஹிம்சையாய் வாழ்வது அத்தனை எளிதாயில்லை. பல உயிர்களைக் கொன்றே தினமும் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது.கரப்பான் பூச்சிகள்,எறும்புகள்,கொசுக்கள் என நம்மால் அழிக்கப்படும் உயிர்கள் கணக்கிலடங்காதவை....

கொல்லாமையை வலியுறுத்திய சமணர்களை நினைத்துப் பார்க்கின்றேன்...தலையில் கத்தி வைத்தால் உயிர்கள் துன்புறும் என்பதால் கைகளால் முடிகளைக பிடுங்குவார்களாம்...!


சாலையில் நடக்கையில் விசிறிக்கொண்டு நடப்பார்களாம்..எந்த பூச்சியும் காலால் நசுங்கி இறந்து விடக்கூடாதென்பதற்காக...ஏயப்பா!

எத்தகைய கட்டுப்பாடான வாழ்க்கை..அப்பப்பா நினைக்கவே முடியவில்லை..ஆனால் வாழ்ந்து காட்டியிருக்கின்றனர்.சித்தன்னவாசல் கூறும் சமணர்களின் வாழ்க்கை முறை கண்டு நம்பமுடியாது வியந்திருக்கின்றேன்..

அத்தகைய சிறு உயிர்களுக்குக் கூடத் தீங்கு செய்யாது வாழ்ந்த சமணர்கள் 3000 பேரைக் கழுவேற்றிக்கொன்றே இப்போதுள்ள சமயங்கள் வளர்ந்திருக்கின்றன...என்பது மறுக்கவியலா உண்மை...

ஒரு கரப்பான்பூச்சிக்கு மருந்தடித்து விட்டு அது சாவதற்கு பட்ட பாட்டைக் கண்டு பொறுக்க முடியாமல் எழுந்த நினைவுகள்...

நானெல்லாம் இந்த உலகத்துல உருப்படுவனா....தெரியல...

6 comments :

  1. ஊருப்படலாம் கவலை வேண்டாம்,

    ReplyDelete
  2. உங்கள் நல்ல மனம் தெரிகிறது கீதா...முழுதாய் நல்லவர்களாக இருப்பது மிகக் கடினம்..

    விளையாடும்பொழுது தெரியாமல் மட்டையால் அடித்துவிட்ட பட்டாம்பூச்சிக்காய் இரண்டு நாட்கள் அழுதான் என் மகன்...அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றது நினைவு வருகிறது ..

    ReplyDelete
  3. வினோதமான சிந்தனையாக இருக்கிறதே.....
    எனது கவிதைப்போட்டி கவிதையை காண்க..

    ReplyDelete
  4. என்ன ஒரு மென்மையான மனம் அக்கா! உங்களைவிட அழகான மனம்:)) மருந்து வைத்துவிட்டால் மறந்துவிட்டு அப்புறம் பார்க்கவேண்டும்:) இனி இப்படி கவனிக்காதீர்கள்:) ஓகே வா?

    ReplyDelete
  5. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தும் ,நாட்டை விட்டு விரட்டி அடித்தும் 'உருப்பட்டு கொண்டு இருக்கிறவர்களும்' ,சமண மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மனம் !

    ReplyDelete
  6. உயிரின் உன்னதம் அறிந்தவர்கள் நீங்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...