பேச்சாளராய் அறிமுகம்
எழுத்தும் வலிமையாய்
கவிதையிலுமா..?
சமூக அக்கறையுடன்
காசுக்கு விலையாகா
மனிதநேயமுடையவராய்...
”அந்தகேள்விக்குவயது 18”,”பத்துகிலோ ஞானம்”,”இவனுக்கு அப்போது மனு” என்று பெயர் ஆகிய நூல்களின் ஆசிரியரான திரு .எட்வின் அவர்களின்
” எப்படியும் சொல்லலாம்” நூல் வெளிவந்துள்ளது.
”மலட்டு மரம்
பூத்தது
ஒலிப்பெருக்கி”
என்ற ஹைக்கூவோடு துவங்கி அவரது பாதையில் நம்மை வழிநடத்துகின்றது.ஆற்றில் மணலாறு பாய்வதை அழகாக
”பழகிக் கொள்ள
வேண்டியதுதான்
கானலில் நீந்த”
என்ற வரிகள் கண்முன் காட்டுகின்றது பாலைவன ஆற்றை...!
எள்ளலுடன்,சமூக அக்கறையுடன்,இயற்கையை நேசிக்கும் தன்மையுடன்,வறுமையைக்கூட மனம் கனக்கும் நகைச்சுவையுடன்.....இவரின் கவிதைகள் மனதைக் கொள்ளை கொண்டு போகின்றன...
”அரச்சிடலாம் துவையல்
இருக்கு
.........
..............
வறுகடலை
கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்
காய்ச்சிடலாம் கஞ்சியும்
எதிர்வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப....”
தவறி தீண்டாத ஜாதியில்
பிறந்த காரணத்திற்காய்
மலம் தின்ற அவஸ்தையை .... இவரின் கவிதை சாட்டையடியாய் நமக்கு உரைக்க வைக்கின்றது.
”ஓடப்பரெல்லாம் உதையப்பராகி விட்டால்” என்ற பாரதிதாசனின் வரிகளை நினைவூட்டுவதாய் ஒரு கவிதை...
”தெரு தாண்டும் வரை
.............................
கைகளில் தான்
இருக்கிறது
செருப்பு”
பெண்ணியச்சிந்தனைகளை மிக ரசனையுடன் கூறும் கவிதையாய்....
”.......................
......................
அப்பா வண்டுன்னா சரி
எப்பவேணாலும்
போகலாம்
வீட்டுக்கு “
ஒவ்வொரு கவிதையும் சிந்திக்க வைப்பதாய் படைத்துள்ள விதம் பாரட்டுக்குரியது...
சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.....
வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் தோழருக்கு பகிருங்கள் நூலைப் படித்து....

அவரின் ஹைக்கூ வரிகள் என்றும் ரசிக்க வைக்கும்...
ReplyDeleteதிரு .எட்வின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
உண்மைசார்.நன்றி.
Deleteசகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteஅருமையான சமூக சிந்தனையாளரின் படைப்பைப் பற்றி பகிர்ந்தமைக்கு எமது நன்றிகள் முதலில். நூலைப்படித்து அழகான மதிப்புரை தந்துள்ளது அழகு சகோதரி. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். பகிர்வுக்கு நன்றிகள்..
நன்றி சகோ
Deleteஎட்வின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது..புத்தக அறிமுகத்திற்கு நன்றி கீதா!
ReplyDeleteதஞ்சைப் புத்தகக் கண்காட்சியில் நூலினை வாங்கி படித்துவிட்டேன் சகோதரியாரே.
ReplyDeleteஅருமையான கவிதைகள்
நன்றி சார்.புத்தக கண்காட்சியில் உங்களையும் பிரேமா மேடத்தையும் பார்த்தது மிகுந்த மகிழ்வைத்தந்தது
Deleteநல்ல பதிவு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
எட்வின் அய்யாவின் எழுத்துக்கள்
எனக்கும் பிடிக்கும்...
ம் அவரிடமிருந்து நல்லாருக்குன்னு ஒரு கவிதைக்கு ஒரு வார்த்தை சொன்னா போதும் .வசிஷ்டர் சொன்னது போல
Delete