World Tamil Blog Aggregator Thendral: நம்ப முடியவில்லை

Monday 10 February 2014

நம்ப முடியவில்லை



2012 ,டிசம்பர் 6ஆம் நாள் கணினி யில் எனது வேலு நாச்சியார் வலைத்தளத்தை  எந்த வித முன் அனுபவம் இல்லாமல் விளையாட்டாய் துவங்கினேன்
.எனது கவிதை நூலான விழிதூவிய விதைகள் வெளியான (2.12.2012 )சில தினங்களில் இவ்வலைத்தளத்தை ஆரம்பித்தேன் .முன் அனுபவம் இல்லாமல் துவங்கியதால் அது வளர்ச்சியின்றி நடை பழகாத குழந்தையாகவே இருந்தது


.சனவரியில் 1,ஜூலையில் 1,ஆகஸ்டில் 2 என என் படைப்புகள் தட்டுத்தடுமாறி வெளியாகின .
குழந்தையின் நலனுக்காகவே அளிக்கப்பட்ட பயிற்சியாய் ,நவம்பர் மாதம் 7ஆம் தேதி 2013ல் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக் கல்லூரியில் அளிக்கப்பட்ட
                          கன்னித்தமிழ் கணினிப் பயிற்சி
இரு தினங்கள் வாழ்வில் மறக்க முடியாத பயிற்சியாக அமைந்ததை இப்பொழுது  நினைவு கூர்கிறேன் .
                                        அதன் பின் அக்டோபர் மாதம் 26,நவம்பர் மாதம் 26, டிசம்பர் 20 என எனது வலைத்தளம் நடை போடத்துவங்கிய மகிழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் .
இன்று நல்  மேய்ப்பராய்  என்ற பதிவு 100 ஆவது பதிவாக உங்கள் முன் ....

இதற்குள் எத்தனை எத்தனை மாற்றங்கள் .....

இந்தியா,யுனைடட் ஸ்டேட்ஸ் ,கனடா ,ஸ்ரீலங்கா .ஆஸ்திரேலியா ,சுவிட்சர்லாந்து ,வியட்நாம் ,மலேஷியா ,ஜெர்மனி ,சைனா என பல நாடுகளில் பார்வையாளர்கள் ......

கணக்கின்றி பின் தொடரும் தோழமைகள் ......

அக்கறை நிரம்பிய விமர்சனங்கள் ,பாராட்டுக்கள் ...எதையும் எதிர் பாராத அன்பு ....
இத்தனையும் எனக்கு கிடைக்க காரணமான தமிழ் ஆய்வை சுவாசமாக நினைக்கும் ....எங்களின்மதிப்பிற்குரிய  முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ,திரு .முத்துநிலவன் அய்யா ,திரு .திண்டுக்கல் தனபாலன் அய்யா ,திரு .கரந்தை ஜெயக்குமார் அய்யா ,இன்னும் பலரும்...
 எனது வலைத்தளம் 100ஆவது பதிவு காண காரணமாய் ....பின்புலமாய் ...
மேலும் எனது வலைத்தள தோழமைகள் .....
எல்லோருக்கும் என் மனம் நிறைந்த நன்றிதனை உரித்தாக்குகின்றேன் ......

17 comments :

  1. வாழ்த்துகள், வாழ்த்துகள். உங்கள் “வலைக்குழந்தை“ இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து வளர்ந்து, தமிழ்ச்சமூகத்தில் நல்ல நல்ல விளைச்சலைத் தருமென்று நம்புகிறேன். தரவேண்டுமென்று வாழ்த்துகிறேன். படைப்பும், விமர்சனமும் உங்களிரு கண்களாகவும், செயல்படுவதும் செயல்படுத்துவதுமாய் உங்களிரு கைகளும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. தங்கள் பயணம் மென்மேலும் சிர்ச்க்க வாழ்த்துகள் டீச்சர்!

    ReplyDelete
  3. மிக்க மிக்க மகிழ்ச்சி... மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    அன்று பேசியதை ஒரு பதிவாகிக் கொண்டிருக்கிறேன்... நாற்பதும் நமதே... விடுவதாக இல்லை... 40 சிறந்த ஆசிரியர்களின் வலைத்தளங்களை சொன்னேன்... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. mindum unkalin vakuppirkaaka kaathukkondu sir.nandri

      Delete
  4. 100 பதிவுகள் வாழ்த்துக்கள் சகோதரியாரே.
    மனதில் உள்ள கருத்துக்களை எல்லாம்,
    இறக்கி வையுங்கள் இந்த வலைப் பூவில்,
    வலையுலக உறவுகள் எல்லாம்
    தங்களின் எழுத்துக்களை வாசிக்கக்
    காத்திருக்கின்றன.
    இந்த உலகம் முழுதும் நமது உறவுகளால்
    நிரம்பி வழிகின்றது.
    தங்களின் எழுத்துலகப் பயணம் தொடர
    அன்புடன் வாழ்த்துகின்றேன் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வழிகாட்டுதல்களே இத்தனைக்கும் காரணம் சார் .மிக்க நன்றி

      Delete
  5. கூறு... கூறா இருந்தது நூறாயிருச்சா?

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி
    வாழ்த்துகள்! உங்களின் சுறுசுறுப்பு கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். நடை பழகாத குழந்தை என்று கூறிக்கொண்டே உசேன் போல்ட் அளவிற்கு ஓடி விட்டீர்களே! நூறாவது பதிவைத் தாண்டி பயணிக்கும் தங்களுக்கு நல்வாழ்த்துகள்.. தொடரட்டும் படைப்புகள். நன்றி சகோதரி..

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சகோதரி. 100 பதிவுகள், 1000 பதிவுகளாக மாறுவதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வணக்கம் தோழி
    1௦௦ பதிவுகள் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் தோழி ! மேன் மேலும் வளர்ந்து சிறப்பிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....! தோழி
    நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  9. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் கீதா! பல நூறு தாண்டி ஆயிரமும் தாண்டி உங்கள் வலைத்தளம் வளர வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  11. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கவிஞரே...
    சீக்கிரம் ஆயிரமாவது பதிவினை தருக..

    ReplyDelete
  12. பலநூறு காண வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. அது ஏன் உங்க வலைப்பக்கத்தில் என் வலைப்பக்க இணைப்பு மட்டும் எப்பவுமே “கடேசியா“ நிக்கிது? ஏதாவது தொழில்நுட்பச் சிக்கலா? இல்ல... வலைப்பக்கம் பற்றிய விமர்சனமா?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...