World Tamil Blog Aggregator Thendral: குடும்பத்தலைவி

Wednesday, 4 December 2013

குடும்பத்தலைவி

அதிகாலை
இயற்கை உபாதை
கழிப்பறைக்கு போட்டி
பொறுமையின் துவக்கம்..

கொதிக்க கொதிக்க
அனைவருக்கும் டீ
ஆறி அவலானது
அவளுக்கான டீ...

அனைவரின் பசியறிந்து
அன்போடு பரிமாறியபின்
காலிப் பாத்திரங்களுடன்
அவளுக்கான உணவு....

விழா நாள்
புத்தாடையுடன் இல்லமே மகிழ
அவள் அணியும் நேரம்
அனைவரும் உறக்கத்தில்..

7 comments :

  1. ஒரே நாளில் 3 பதிவுகள் எதற்கு...?

    ReplyDelete
  2. wநன்றி சார்.இது 3நாள் பதிவு சார்

    ReplyDelete
  3. சகோதரிக்கு வணக்கம்
    குடும்பத் தலைவியின் தியாகத்தை மிக அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். படத்தேர்வு மிக அருமை. விளக்கு ஒளிர்வது போன்ற ஒரு உணர்வு. குடும்பத்தலைவிக்கும் அந்த விளக்குக்கும் ஒற்றுமை உண்டு என்பதை படமே விளக்குகிறது. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி..

    ReplyDelete
  4. நன்றி கீதா.
    2005இல் எழுதிய எனது “இன்றைய தமிழிலி்ல் பெண்கவிகள்“ கட்டுரையை இன்றுவரை அப்டேட் செய்தால் அவசியம் சேர்க்கும்படியான ஒரு நல்ல கவிதை தந்ததற்கு. தொடர்ந்து இதுபோல -காட்சிப்படிமத்துடன்-( ) எழுதுங்கள். அதுதான் என்றும் நினைவில் நிற்கும். இன்னும் சொற்களைச் சுருக்கி பன்முகப் பரிமாணம் தரமுடிந்தால் நலலது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறேன் தோழர்.நன்றி .

      Delete
  5. பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் புரியும்படி எழுதியிருக்கிறீர்கள்.பொருத்தமான படமும் தேர்ந்து அருமையாக இருக்கிறது. நன்றி தோழி ....! .வாழ்க வளமுடன்....!
    அன்பின் எல்லை அவள்
    அதை அறியாதோர்க்கு தொல்லை.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...