Monday, 30 October 2017

அதிகாலை

வலசைப் போகும் பறவையின் லாவகத்தில்
அதிகாலையை சுவைக்க நடக்க ....
நடைப்பாதையை கழுவி
காத்திருந்தது அது..
தென்றலை துணையாக செல்ல
கட்டளையிட்டது......
விடுமுறை கேட்டு துள்ளிடும்
குழந்தைகளாய்...
 வரவேற்றன தளிர்கள்....
கதகதப்பாய் அணைத்து உறங்கும்
நாய்க்குட்டிகளோடு உறங்க
எழுந்த ஆசையை
செல்லமாய் அதட்டி...
நீரலைகளிலில் பறந்த வானத்திற்கு
நீண்ட கண்முத்தங்களை
பறக்கவிட்டு.....
தொட்டு மகிழ்ந்த
சாரலுக்கு...
தாராளமாய் அனுமதிக்க
பட்டுத்தெறித்த மழை
பரவசமாய் விடுமுறை
பரிசை அன்போடு தந்து
சிரித்தது....

5 comments:

  1. அருமை
    மாமழை போற்றுவோம்

    ReplyDelete
  2. நகரத்தில் சாத்தியமில்லை.
    கிராமத்தில் சாத்தியம்.

    ReplyDelete
  3. நகரத்தில் சாத்தியமில்லை.
    கிராமத்தில் சாத்தியம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...