Sunday, 29 October 2017

வீதி கலை இலக்கியக் களம் 44

இன்றைய வீதி கலை இலக்கியக் களம் 44 ஆவது கூட்டம் எதிர் பார்த்ததை விட மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி நிறுவனர் கவிஞர் இளங்கோ அவர்கள் தலைமை ஏற்றார்.

கவிஞர் மலையப்பன் வரவேற்புரை வழங்க, கவிஞர் சிவக்குமார் நன்றியுரை நல்கினார்.


அரபு நாட்டில் பணிபுரியும் தோழர் சாதிக பாட்ஷா அவர்கள் வீதியில் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.

நிகழ்வு துவங்கும் முன் கவிஞர்கள் இளங்கோ ஜெர்மானிய படம் குறித்தும் ,மலையப்பன் அஸ்ஸாமில் பார்த்த மலையாள திரைப்படம் டேக் ஆஃப் மற்றும் மாம் படங்கள் குறித்தும், நாகநாதன், சிவக்குமார், பேராசிரியர் விஜயலெக்ஷ்மி ஆகியோர் தங்களது அனுபவ உரைகளையும் வழங்கினார்கள்.

2016 ஆம் ஆண்டு  புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிவந்த நூல்கள் குறித்த விமர்சன நிகழ்வு.

கவிஞர் சுராவின் "ஒரு நாடோடி கலைஞன் மீதான விசாரணை"என்ற சிறுகதை தொகுப்பை அருமையாக விமர்சனம் செய்தார் பேராசிரியர் விஜயலெக்ஷ்மி.

முனைவர் நா.அருள்முருகன் அய்யாவின்"பாறைஓவியங்கள்"என்ற ஆய்வு நூலை கவிஞர் மீரா செல்வகுமார் தனக்கே உரிய கவிதை நடையில் மிகச் சிறப்பாக விமர்சனம் செய்தார்.

கவிஞர் ஸ்டாலின் சரவணன் எழுதிய"ஆரஞ்சு மணக்கும் பசி"கவிதை நூலை கவிஞர் கீதா ஆய்வுரையாக சமர்ப்பித்து பாராட்டினார்.


கவிஞர் சச்சின் எழுதிய"ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ் பாண்ட் ஆகிறார்"என்ற கவிதை நூலை கவிஞர் ரேவதி அனைவரும் பாராட்டும் படி விமர்சனம் செய்தவிதம் மிகச் சிறப்பு.


கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின்"தேவதைகளால் தேடப்படுகிறவன்"கவிதை நூலை திருமிகு இரா.ஜெயலெட்சுமி அவர்கள் கலகலப்பாக.... அனுபவித்து ரசித்து சொன்ன விதம் வீதியை மகிழ வைத்தது.

கவிஞர் சோலச்சியின் "காட்டுநெருஞ்சி"நூலை மாணவர் சூர்யா சிறப்பாக விமர்சனம் செய்தார்.

கவிஞர் தூயன் அவர்களின் "இருமுனை"சிறுகதை தொகுப்பை கவிஞர் ஸ்டாலின் சரவணன் மிக அருமையாக விமர்சனம் செய்தது அந்நூலை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியது.


கவிஞர் நீலாவின்"அலையும் குரல்கள்"கவிதை நூலை மாணவர் அஜீத் குமார் மதுவின் தீமைகள் குறித்து விமர்சனம் செய்தது சிறப்பு.


கவிஞர் மிடறு முருகதாஸ் அவர்களின்"மிடறு"கவிதை நூலை கவிஞர் இந்துமதி விமர்சனம் செய்த விதம் பாராட்டுக்குரியது.

இறுதியாக மருத்துவர் ஜெயராமன் அவர்களின்"நான் ஏன் பதவி விலகினேன்"என்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உரைகள் அடங்கிய நூலை கவிஞர் ராசி பன்னீர் செல்வம் அவர்கள் அறிமுகம் செய்தபோது அண்ணல் அம்பேத்கர் பற்றிய வியப்பில் வீதி திளைத்தது.


பத்து புத்தகங்கள்.... அதன் படைப்பாளர்கள்..... மிகச் சிறந்த விமர்சனங்கள் என வீதி ஆகச் சிறந்த களமாக இன்று திகழ்ந்தது.
இளைஞர்கள் பலரின் வருகை மகிழ்வைத் தந்தது.
விமர்சனம் செய்தவர்கள் படைப்பாளர்களுக்கு நூல் பரிசளித்து கௌரவித்தார்கள்
கவிஞர் பாலா கவிஞர் கந்தர்வன் ஆகியோர் இருந்த சூழலை தற்போது காண்பதாக..... படைப்பாளர்கள் ஒன்றிணைந்து....ஒருவரை ஒருவர் ஊக்குவிக்கும் பண்பு பாராட்டுதற்குரியது என்று வீதியை கவிஞர் பன்னீர் செல்வம் அவர்கள் வாழ்த்தினார்கள்.
வீதி தனது பாதையில் வளர்ச்சி அடைந்து முன்னேறி உள்ளது என்று கவிஞர் ஸ்டாலின் சரவணன் பாராட்டினார்.
வீதி தனது வளர்ச்சியில் எங்களையும் வளர்த்து கொண்டு நடை போடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

6 comments:

  1. விழா சிறப்புடன் நிகழ்ந்தது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. கல்யாணத்துக்குப் போய் சாப்பிட்டு வந்தவன், வரமுடியாதவனைப் பார்த்து “அடடா நீ வரலயே! சாப்பாடு அசத்திட்டாங்கப்பா” என்று சொல்லும்போது வரும் ஆற்றாமைதான் எனக்கு எழுகிறது.. அடுத்த முறை தவறாமல் வந்துவிட இப்போதே தேதியைத் தெரிந்து கொள்கிறேன் ஆமா அடுத்த மாத அமைப்பாளர்கள் யார்னு சொல்லலியேம்மா...

    ReplyDelete
    Replies
    1. யாரும் முன் வரவில்லை அண்ணா.19.11.17.குழந்தைகள் சிறப்பு நிகழ்ச்சி யாக வைக்கலாமா என்று யோசனை அண்ணா.குழந்தைகளுக்கான நூல்கள்.... கல்வி குறித்த நூல்களை அறிமுகம் செய்யலாமா?

      Delete
  3. அருமையான முயற்சியும்..தொகுப்பும்...உவப்பு...

    ReplyDelete
  4. பகிர்ந்துள்ள விதம் அருமை. வீதியின் நிகழ்வுகள் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...