Saturday, 21 October 2017

22.10.17 விஜய் (விஷ) டிவி

விஜய் (விஷ)டிவிக்கு
இன்று தமிழ் பெண்கள் அழகா?கேரளப் பெண்கள் அழகா?
நீயா நானா கோபிநாத்
நாட்டில்
தீர்க்க வியலா
பிரச்சினைகள்
கடலலையாக..
கல்லா கட்ட
பொம்பளய வச்சி
சம்பாதிக்கும்
நாதாரிகளே
அழகு என்பது
அகத்தில்..

அந்நியரை
எதிர்த்து போரிட்டாளே
வேலுநாச்சியார்....
அவளிடம் உள்ளது
போர்க்குண அழகு...

முதல் தற்கொடைப்போராளி
குயிலியின்
தியாகம் அழகு.

ஒற்றை காலுடன்
சிகரம் தொட்டாளே
அருணிமா
அவளின் உடைந்த
காலில் உள்ளது
தன்னம்பிக்கை அழகு.


கேவலமான
ஆணாதிக்கவாதியால்
ஆசிட் தாங்கிய
முகத்துடன்
அன்பை பொழியும்
லெட்சுமியின்
மனம் உறுதியழகு

சாக்கடையை
மனதில்
சுமக்கும்
உங்கள்
அழகு எப்படி?

6 comments:

  1. தலைப்பு மிகச்சரியானதே மலம் தின்னும் பன்றிகள் இந்த ஊடகக்காரர்கள் இதையும் இந்த கேடுகெட்ட மக்கள் இரசித்துப் பார்ப்பதால்தானே அவர்களின் அலங்கோலம் தொடர்கிறது அனைவரும் இதைப்பார்ப்பதை தவிர்க்க வேண்டும் இதைப் படிப்பவர்கள்கூட என்னைச் சொல்லலாம் கிறுக்கன் என்று.....

    இந்த நாடு இன்னும் நாசமாகப் போகும்.

    ReplyDelete
  2. நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  3. அப்படி போடுங்கள் அரிவாளை

    ReplyDelete
  4. எங்கும், எதிலும் வணிக மயம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...