Tuesday, 14 March 2017

இன்னும் எத்தனை காலம்?


குப்பைகள் பொறுக்கிய
கைகளில் புத்தகங்கள்
தவழ்வதை பொறுக்காத
பொறுக்கிகளா .....

குருதி கொதிக்கும் நிலை
குனிந்த முதுகு சற்று
நிமிர்வதை தாங்க முடியாது
கொலை செய்தீர்..

வயல்களில் காய்த்த விரல்கள்
வடுவேறிய கால்கள்
கல்லூரி மிதிப்பதை
கண்கொண்டு சகிக்க முடியாத
கடைமடையர்களே..

மலம் அள்ளவா கைகள்
மதியற்றீரா நீவிர்...

வந்தேறிகளே....
வரம்புமீறி போகின்றீர்....
ஒரு விதை
ஒரு வனத்தின் திறவுகோல்

ஒரு மரணம்
ஓராயிரம் குருதிகள் வெடித்துச்
சிதறும்.....அணுக்கூட்டம்

மூடர்களே.....
முடை நாற்றம் வீசும்
உங்கள் குருதியைக் கழுவிக்கொள்ளுங்கள்...
எங்களின்..........ல்
பாவம் தொலைய.....







7 comments:

  1. கயிறுகளை கைகள் தேடி போகாமல் கையில் அருவாளை தூக்கி தனக்கு எதிரனவர்களை வெட்டி சாய்க்கும் வரை இப்படித்தான் நடை பெறும்

    ReplyDelete
    Replies
    1. கூடிய விரைவில் அதுவும் ....எத்தனை தான் பொறுக்க முடியும்? சகோ...

      Delete
  2. வேதனை காலம் மாறாது மாற்றணும்.

    ReplyDelete
  3. நல்ல மாற்றம் வரும்... நம்புவோம்...

    ReplyDelete
  4. நம் நாட்டின் அவலம் தொடர்கிறது

    ReplyDelete
  5. வேதனைதான்

    தம

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...