Saturday, 11 March 2017

இரோம் ஷர்மிளா

இரோம்....
இரும்பு பெண்மணியே
துருப்பிடித்த மனங்கள் உனை
தூக்கி எறிந்துள்ளது, உன்
தியாகம் உணரா மாக்கள்.
பலியாவதையறியா
பலியாடுகள்....

எத்தனை வலி தாங்கினாய்
எதையும் நினைக்கவில்லையே.
இத்தனை துரோகத்தை ஏற்க
இதயத்திற்கு வலிமை வேண்டும்
உன் அருமை பெருமை உணர
காலம் வழி செய்யட்டும்.

5 comments:

  1. .....இலட்சியவாதிகளை என்றைக்கு மதித்தார்கள் மக்கள் ? இவர்களுக்கு சின்னம்மாக்கள் தானே முக்கியம் !

    ReplyDelete
  2. ம்ம்ம்.. என்ன சொல்ல... அரசியல் இது போன்ற பலரை காவு வாங்கிவிடுகிறது.

    ReplyDelete
  3. வேதனை சகோதரியாரே
    கொடும் வேதனை
    தனக்காக உழைத்தவர்களை உழைப்பவர்களைக் கூட அடையாளம் காணத் தெரியவில்லை எனில் இவர்கள் மக்கள்தானா என்ற ஐயமே ஏற்படுகிறது
    இத்தனை வருடப் போராட்டத்தில் பெறாத ஞானத்தை இந்த ஒரு தேர்தலின் மூலம் பெற்றிருப்பார் சர்மிளா
    தோல்வி சர்மிளாவிற்கு அல்ல

    ReplyDelete
  4. தனது வாழ்க்கையை தவறான மக்களுக்காக வீண் அடித்த பெண்மணியாகத்தான் என் கண்களுக்கு தோன்றுகிறார் கூவத்திற்கு அருகே சந்தனம் இருந்தால் அதை மலம் என்று மக்கள் கருதி தாண்டி செல்வதை போலத்தான் இருக்கிறது

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...