Saturday, 10 September 2016

மிக்க நன்றி கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு...

மிக்க நன்றி கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு...

அக்கா இன்று சம்பளம் கொடுத்தாங்க....ரோஸ்லின்

கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லினுக்கு சென்றமாதம் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் தனது வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆசிரியப்பணி அளித்துள்ளார்..என்பது அனைவரும் அறிந்ததே...

இன்று மாலை கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லின் அலைபேசியில் அழைத்து அக்கா இன்று சம்பளம் கொடுத்தாங்க அக்கான்னு சொல்லிட்டு ஒரே அழுகை ஏண்டாம்மா...நல்ல விசயம் தானேன்னு கேட்டபோது இல்லக்கா...கவரில் சம்பளம் ரூ10,000/ இருந்தது அக்கா..நான் அந்தளவு வேலை பாக்கலக்கா..இப்பதான் கத்துகிறேன்னு சொல்லிட்டு கண்கலங்கிய போது மனம் நெகிழ்ந்து போனேன்...

இனி நீ யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டாம்மா...உன் குடும்பத்தை நீயே பார்த்துக்கலாம்னு ஆறுதல் கூறி உன் அம்மாவின் கைகளில் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ என்றேன்..இல்லக்கா முதன்முதலில் உங்களிடம் தான் சொல்ல நினச்சேன்னு சொல்லிட்டு விசும்பியதை உணர்ந்தேன்..கவலப்படாதேம்மா ..
எல்லோரும் இருக்கோம்..பார்த்துக்குவோம்டான்னு சொன்னேன்..

அரசு வேலை வாங்கும் வரை இனி ரோஸ்லினைப்பற்றி கவலை வேண்டாம்னு சொன்னபடியே செய்த கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் ,திருமிகு அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி அவர்களுக்கும் வைகறையின் நட்புகளும் உறவுகளும் மனம் நெகிழ்ந்த நன்றிதனை சமர்ப்பிக்கின்றோம்...

6 comments:

  1. நல்ல மனிதர்கள்...
    வாழ்த்துவோம்...

    ReplyDelete
  2. நல்ல மனம் வாழ்க.....

    மகிழ்ச்சி தொடரட்டும்.

    ReplyDelete
  3. மனம் நெகிழ்ச்சியான பதிவு. கல்வியாளர்கள்,தங்கம் மூர்த்தி - அஞ்சலிதேவி தம்பதியினருக்கு நன்றி.

    ReplyDelete
  4. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ... :-)

    ReplyDelete
  6. போற்றுதலுக்கு உரிய மாமனிதர்
    மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...