Wednesday, 7 September 2016

அள்ளித்தந்த புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம்..

அள்ளித்தந்த புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம்..

சந்தைப்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 7.9.16 நேற்று மாலை புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் மூலம் முப்பெரும் விழா எங்கள் பள்ளியில் நடைபெற்றது..

விழாவில்பள்ளியின் இன்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் திருமிகு அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி அவர்கள் ஒருங்கிணைக்க பள்ளி மாணவிகள் இன்ராக்ட் பதவியை பொறுப்பேற்றனர்..















விழாவில்
திருமிகு கிருஷ்ணவேணி அவர்கள் வரவேற்றார்
திருமிகு பானுமதி கண்ணன் அவர்கள் தலைமை ஏற்றார்.
திருமிகு முத்துச்சாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.
திருமிகு அ.லெ.சொக்கலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திருமிகு சுபா கருணாநிதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்

வாழ்த்துரை வழங்கியவர்கள்.

திருமிகு இராஜலெட்சுமி நெடுஞ்செழியன் அவர்கள்
திருமிகு அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி அவர்கள்
திருமிகு பார்வதி இராமதாஸ் அவர்கள்
திருமிகு ப்ளாரன்ஸ் ஜெயபரதன் அவர்கள்

ஏற்புரை
திருமிகு கோ.அமுதா அவர்கள்
தலைமையாசிரியர் அ.ம.மே.நி.பள்ளி சந்தைப்பேட்டை

1]பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை வழங்கி மாணவிகள் சுத்தமான குடிநீர் பருக வழி அமைத்தனர்.

2]மோட்டார் அடிக்கடி பழுதாகிறது என்று கூறியதும் மின் மோட்டார் ஒன்றை புதிதாக வாங்கித்தந்து எங்களை வியக்க வைத்தனர்.

3]மாணவிகளின் நலன் சார்ந்து பல நல்ல கருத்துகளையும் வாழ்த்துரையும் வழங்கினர்.

பள்ளிக்கு புரவலர் திட்டம் பற்றி கூறியதும் முதன்முதலாக ரூ1000/நிதியை உடனே வழங்கினார் புதுக்கோட்டைமகாராணி ரோட்டரி சங்கத்தின் தலைவி திருமிகு பானுமதி கண்ணன் அவர்கள்..அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லையென மகாராணி ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ரூ1000/ தர,

புதுக்கோட்டை மௌண்ட்சியான் பள்ளியின் தாளாளர் திருமிகு ப்ளாரன்ஸ் ஜெயபரதன் அவர்கள் ரூ3000/தந்து அசத்தினார்..

அன்புக்கு பஞ்சமில்லாத எங்கள் பள்ளி செல்வத்தில் தான் குறையாக உள்ளது..அதைப்போக்கும் முயற்சியின் முதல்கட்டமாக தலைமையாசிரியரின் வேண்டுகோளை ஏற்று ஒரே நாளில் ரூ 10,000/ பள்ளியின் புரவலர் திட்டத்தில் இணைந்து பள்ளியின் முன்னேற்றத்திற்கு உதவிய சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கு பள்ளி மனம் நிறைந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றது...

4 comments:

  1. தகவல் பகிர்வு மகிழ்ச்சியைத் தந்தது. நன்றி.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அக்கா...
    நல்ல உள்ளம்.. நல்ல செயல்...

    ReplyDelete
  3. அள்ளித்தந்த புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் செயல் பாராட்டுக்குரியது.

    இதுபோன்ற நல்ல எண்ணங்களும், நற்செயல்களும் பிறருக்கும் ஏற்பட்டு, பிற பள்ளிகளுக்கும் அங்குள்ள குழந்தைகளுக்கும் இதுபோன்ற சிறுசிறு வசதிகள் ஏற்பட இந்தப்பதிவு நிச்சயம் உதவக்கூடும்.

    பதிவும் படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. வாரி வழங்கிய வள்ளல்கள் அனைவருக்கும் நன்றி
    தம +

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...