Saturday, 10 September 2016

வித்தியாசமானவரின் வித்தியாசமானப்பள்ளி

வித்தியாசமானவரின் வித்தியாசமானப்பள்ளி

இன்று 10.9.16 கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களின் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் உணவுத்திருவிழா மற்றும் கண்காட்சி

உள்ளே நுழையும் போதே பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன ஆடை அணிந்த மழலைகளின் வரவேற்பு....





விருந்தோம்பலில் இவரை மிஞ்ச இனி ஒருவர் பிறக்க வேண்டும்...உபசரித்துக்கொண்டே உணவுத்திருவிழாவிற்கான பணிகளைச்செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திய தன்மை இவரது நிர்வாகத்திறமைக்குச் சான்று...

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் கண்காட்சியைத்துவக்கி வைத்தார்.
உணவு மற்றும் உடல்நலம் தொடர்பான கையெழுத்து பிரதி வெளியிடப்பட்டது..

குழந்தைகள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாதென தெளிவாகக்கூறிய போது அப்பள்ளிக்குழந்தைகளைப்பற்றி பெருமையாக இருந்தது.

இதுவரை உணவுத்திருவிழா என்றால் நிதி திரட்டும் வழிகளில் ஒன்றாக இருந்ததை மாற்றி பாரம்பரிய உணவுகளை குழந்தைகளை அறிய வைத்து ,,அவர்கள் வாயிலாகவே அனைவருக்கும் கூறவைத்தது மிகச்சிறப்பு.

குழந்தைகள் கேழ்வரகு கஞ்சி,கம்பங்கஞ்சி,உளுந்தங்கஞ்சி ,கேப்பை அடை ,தானியங்கள் அடை,முடக்கத்தான் சூப்,முருங்கைக்கீரை சூப்னு எண்ணிலடங்கா வித்தியாசமான உணவுகளை இன்று ஒரே நேரத்தில் காணவும் , சுவைக்கவும் வைத்தனர்...

ஒவ்வொரு குழந்தையும் மூலிகைகள் பற்றியும் அதைக்கொண்டு உணவுத்தயாரிக்கும் முறைகளையும் அருமையாகக்கூறினர்.

நம் பாரம்பரிய உணவு மருந்தாக இருந்ததை இன்று பள்ளிக்குழந்தைகள் உணர்த்தியது போற்றுதற்குரியது..

தனியார் பள்ளிகள் குறித்து உள்ள பொதுப்பார்வையை தகர்த்தெறிந்து குழந்தைகளின் நலன் சார்ந்த பள்ளியாக ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி புதுக்கோட்டையில் திகழ்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்...இவ்விழாவிற்கு காரணமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும்...பள்ளி ஆசிரியர்களுக்கும்..




5 comments:

  1. ஆஹா... மிகுந்த சந்தோஷம் கொடுத்த நாள் என்பது அக்கா படங்களைப் பெரிது பெரிதாக பகிர்ந்திருப்பதில் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. அட இன்று படங்கள் எல்லாம் சின்னதாகிவிட்டதே...
      நல்ல பணி...
      சிறப்பான விழா...

      Delete
  2. சிறப்பான விழா என்பது உங்கள் பதிவில் இருந்து புரிகிறது. இது மாதிரி விழாக்கள் தொடர வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும், படிக்கும் குழந்தைகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வலைப்பதிவர் விழாவின்போது நண்பர்களுடன் ஒரு முறை அங்கு சென்றேன். நல்ல பணி, நல்ல உழைப்பு, முன்னுதாரண நட்பு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்,
    வித்தியாசங்களின் விகிதங்கள்
    கூடிக்கொண்டு போகும் பொழுதுகள்,,,,,/

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...