Thursday, 28 April 2016

நினைவஞ்சலி கூட்டம்...தேதி மாற்றம்

முக்கிய அறிவிப்பு
-------------------------------

 நினைவஞ்சலி கூட்டம்...தேதி மாற்றம்
 --------------------------------------------------------------

4.5.16 அன்று புதன்கிழமை மாலை 5.30 மணி அளவில் .

புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு உணவகக் கல்லூரியில்...

[புதிய பேருந்து நிலைய மாடியில்]

 நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்,கூடுதலான நண்பர்களின் வருகையை விரும்பியும் சனிக்கிழமை நடக்க இருந்த கூட்டம்...

4.5.16 புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.....என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 நல்ல நோக்கத்திற்காக இம்மாற்றம் செய்யப்படுவதால் ,அன்புடன் ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்டு வைகறையின் நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.

 தங்களது பொருளாதார உதவியை அனைவரும் செலுத்துகிறோம் என்று தங்களது அன்பை அனைவரும் வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் இந்நிலையில்,

 சகோ கஸ்தூரிரங்கன் அவர்கள் கூறியபடி வைகறையின் குழந்தைக்கு நாம் செய்யக்கூடிய உதவித்தொகையை ரூ 5,00,000 என்று நிர்ணயம் செய்து அதை நிறைவேற்றும் பணியில் வீதி உறுப்பினர்கள் களம் இறங்கி உள்ளனர். 

இலக்கியம் வாழ வைக்கும் என்பதை உணர்த்தும் காலம் இது.... 

கவிதையையே உயிராய் நேசித்த மகா கவிஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி..

 ஜெய்குட்டிக்கு வைகறையை நாம் தர இயலாது....ஆனால் அவர் அவனுக்கு அளிக்க நினைத்த வாழ்க்கையைத் தர முயற்சி செய்வோம்..

 சிறு துளிகூட அவனது வாழ்வில் வசந்தத்தைத் தரட்டும்..

 உதவிடும் கைகளை வாழ்த்தி ,,,அஞ்சலிக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கின்றோம்..

8 comments:

  1. நல்லது. தகவலுக்கு நன்றி.




    ReplyDelete
    Replies
    1. வரவேற்கிறோம் சார்

      Delete
  2. கூட்டம் சிறப்புறட்டும்...

    ReplyDelete
    Replies
    1. சிறப்புற்றது சகோ.

      Delete
  3. நினைவஞ்சலிக் கூட்டம் சிறப்பாக இடம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.

    தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
    http://tebooks.friendhood.net/t1-topic

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் செய்கின்றேன் சார்.

      Delete
  4. வைகறை - நினைவஞ்சலி கூட்டம்...தேதி மாற்றம்
    --------------------------------------------------------------

    4.5.16 அன்று புதன்கிழமை மாலை 5.30 மணி அளவில் .

    புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு உணவகக் கல்லூரியில்...

    [புதிய பேருந்து நிலைய மாடியில்] - சகோ கஸ்தூரிரங்கன் அவர்கள் கூறியபடி வைகறையின் குழந்தைக்கு நாம் செய்யக்கூடிய உதவித்தொகையை ரூ 5,00,000 என்று நிர்ணயம் செய்து அதை நிறைவேற்றும் பணியில் வீதி உறுப்பினர்கள் களம் இறங்கி உள்ளனர்.
    - அவசியமான, மகத்தான பணி. கூட்டம் முடிந்ததும் எனக்கு முழு தகவல் தர எங்கள் அருமை மகள் கீதாவை வேண்டுகிறேன். என்னால் முடிந்த உதவி செய்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அருமை மகள் Geetha M - Thendral

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...