Tuesday, 26 April 2016

வைகறை -நினைவு அஞ்சலி கூட்டம்

                                                        வீதி
                                     கலை இலக்கியக்களம்
                         வைகறை நினைவஞ்சலி கூட்டம்

 வரும் சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் ஆக்ஸ்போர்டு உணவகக்கல்லூரியில் நடக்க உள்ளது.

வைகறையின் மகன் வீதியின் செல்லக்குழந்தை..அவனது எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு துணை செய்வதை, வீதி தன் கடமையாக நினைக்கின்றது... 

ஏதேனும் செய்ய வேண்டும் .என்ன செய்வது என்பதை அன்று முடிவெடுப்போம்...

 தனக்கென காப்பீட்டு தொகை,பென்சன் எதுமில்லாது மறைந்து விட்ட நிலையில்.வைகறையின் இழப்பை பொருளாதார அளவில் ஈடுகட்ட முயல்வோம்.

நாம் செய்ய வேண்டுமென ஒவ்வொருவரும் எண்ணுவதை கூடிச்செய்தால் ஜெய்சனுக்கு பயன்படும்..

 நன்றி

7 comments:

  1. 'வீதி” வைகறையின் அன்பால் விசாலமான நட்பைப் பெற்றது.
    தன் செல்லக்குட்டி ஜெய் மேல் அவர் வைத்திருந்த அன்பை “ஜெயக்குட்டிக்கு” என்ற அவரது கவிதைத் தொகுப்பே காட்டும். எனவே, இது நம் உள்ளார்ந்த கடமைம்மா.. நல்லவிதமாக யோசித்து நிச்சயமாக வைகறையின் நினைவோடு செயல்படுவோம்.

    ReplyDelete
  2. கண்டிப்பாக அவரது வாரிசுக்கு உதவுவது போல் செய்வோம்.

    ReplyDelete
  3. சொல்லுங்கள் உதவக்காத்திருக்கிறோம்/

    ReplyDelete
  4. நல்லதொரு யோசனையை தெரிவித்துள்ளீர்கள் சகோ. அவரது குடும்பத்தார் விரைவில் இந்த நிகழ்வின் தாக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும். வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை..

    ReplyDelete
  5. கவிஞர் வைகறைக்கு நினைவஞ்சலி.
    மற்றவை நேரில்.

    ReplyDelete
  6. நண்பரின் குடும்பத்திற்கு உதவுதல் நம் கடமையல்லவா

    ReplyDelete
  7. கண்டிப்பாக அவர் குடும்பத்துக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும். பணம் யாருக்கு அனுப்புவது என்ற விபரத்தைத் தெரிவியுங்கள் கீதா!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...