Saturday, 30 April 2016

மீள்வேனா....

மீளவே விரும்புகிறேன்
மீளவிடாது ஆழ்த்துகின்றன
 நினைவலைகள்...
 மறக்கவே நினைக்கின்றேன்
மறக்கவிடாமல் வீழ்த்துகின்றன
எண்ணச்சுழல்கள்...
 பழுத்த இலையாய்
துளிர் வீழ்ந்த தருணங்கள்
செல்லை அரிக்கும்
செல்லாக

15 comments:

  1. மறதி என்பதே மனிதன் சில விடயங்களை மறந்து வாழத்தான் சகோ.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஆனால் வலி மறையாது தழும்பாக சகோ..

      Delete
  2. வலி நிறைந்த கவிதை....

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்தும் மீள முடியா துயரம் பா

      Delete
  3. சில நினைவுகள் என்றுமே அழிவதில்லைதான்

    ReplyDelete
    Replies
    1. அவை தரும் வலி தான் முடியல அன்ணா.

      Delete
  4. Replies
    1. வாழ்க்கை பலி கேட்பதை ஏற்க முடியவில்லை அய்யா.

      Delete
  5. வலிகள் மறந்திட வரிகள் இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. இருக்குப்பா முயற்சிக்கின்றேன்.

      Delete
  6. செல்லை அரிக்கும்
    செல்லாக

    என் மர மண்டைக்கு இந்த வரிகள் சுத்தமா புரியலை. ஒரு வேலை புரியாமல் இருப்பதுதான் புதுக்கவிதையோ?
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. செல்லை என்பது-நமது உடலில் உள்ள செல்களையும்,
      அரிக்கும் செல் என்பது-கரையான்களையும் குறிக்கும் சகோ..

      Delete
  7. முயன்றால் முடியாதது எதுவுமில்லை!காலம்தான் சற்று கூடும்!

    ReplyDelete
  8. மறதி நல்லது பல சமயங்களில்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மை தான்.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...