Tuesday, 12 April 2016

வேண்டுமா...?

வேண்டுமா...?
 வேலை முடிந்ததும் அலையாம
சீக்கிரமா வீட்டுக்கு போனும்.

 நண்பர்களை கட் பண்ணனும்.
சே..என்ன கொடுமை..

 அரிசி பருப்பு வாங்கி தந்து
 சமைச்சத பிடிக்கலன்னாலும்
அன்போடு பாராட்டனும்..

 எத்தனை எடுத்துக்கொடுத்தாலும்
 நிறைவடைய மாட்டாள்.
என்ன சொன்னாலும்
 எதிர்ப்பு தான்..

 செலவு பண்ணா சேர்க்கனும்பா.
சேர்க்கனும்னா கஞ்சூஸ்ம்பா.
நல்ல பேர் வாங்குறதுக்குள்ள
நாக்கு தள்ளி, வழுக்கை விழுந்திடும்.
 குழந்தைகள நினச்சா பக்குன்னு இருக்கு
மற்ற அப்பாக்களோட ஒப்பீடு செஞ்சே
கொன்னுடும்..
 வாலில்லா குரங்குகளே
குழந்தைகள் வடிவில் இருப்பதைப் பார்த்தால்..
 அதுக்கு சீட்டு வாங்கி
பள்ளிக்கூடம் அனுப்பி
பட்டம் வாங்கி,
வேலை வாங்கி
கல்யாணம் பண்ணி முடிக்கிறதுக்குள்ளே
மாரடைப்பு வந்து போய் சேர்ந்துடுவோம்...
 இத்தனைக்கவலைகளும் ஒன்றாய் சேர ,
அத்தனை பேரும்
 அட்சதை தூவி வாழ்த்த
வந்தது திருமணம்..
மணமகன் கனவில்...

9 comments:

  1. கடைசியில் எல்லாம் கனவா ?

    ReplyDelete
  2. அட...பயமுறுத்திறீங்களே கீதா :)

    ReplyDelete
  3. கனவு, பலருக்கு இப்படித்தான்.

    ReplyDelete
  4. ஆஹா, ஆண்களுக்கான அன்றாட உலக யதார்த்தத்தை அப்படியே புட்டுப் புட்டுச் சொல்லிக்கொண்டே வருகிறீர்களே என்று பார்த்தால் கடைசியில் நம்மாளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலையா? எல்லாமே கனவா? சூப்பர் !

    நான் எழுதிய குட்டியூண்டு கதையான ‘பெயர் சூட்டல்’ என் நினைவுக்கு வந்தது.

    http://gopu1949.blogspot.in/2011/10/blog-post.html

    ReplyDelete
  5. சிலருக்கு இது கனவாதான் போகுது....

    ReplyDelete
  6. ஆண்களின் உலகை சுட்டிக்காட்டிய கவிதை. கனவென்றாலும் அருமையே!

    ReplyDelete
  7. இப்போதே நன்றாக கனவு காணட்டும் ,அப்புறம் ,தூங்கவே நேரமிருக்காது :)

    ReplyDelete
  8. அட்சதை தூவி வாழ்த்துகளோடு ஆரம்பிக்கும் வாழ்க்கை அதற்கு அப்புறம் அக்கப்போராகத் தான் இருக்கும்னு சொல்றீங்க!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...