Friday, 1 April 2016

குட்டிமா

பூக்களை ரசிக்கும்
பூவென கைபிடித்து \
குதித்தாடி வந்தவள்
சட்டென்று கத்தியபடி
கால்களினூடே ஒளிகிறாள்...
 வாலை கால்களுக்குள் நுழைத்தோடும்
நாயைப்பார்த்து 
பயப்படாதே குட்டிமா...
அது நல்ல நாயென்றேன்..
 நம்பமுடியாமல்
நல்லன்னா என்னான்னு கேட்டவளுக்கு
விளங்க வைப்பதெப்படியென முழித்தவள்.
தயங்கியபடி தெரியாதே என உண்மையைக்கூறி ..
 நீ நல்ல பிள்ளையா?
கெட்டப்பிள்ளையா? என்றேன்
நல்லப்பிள்ளை என்றவளிடம்
 நல்லன்னா என்னன்னு கேட்டேன்? 
என்னபதில் வருமென்ற ஆவலில்....
 சட்டென்று தயங்காமல்
தன் குழந்தமையை நிரூபித்தபடி
தெரியாதென்றே
ஓடுகிறாள் குட்டிமா..

4 comments:

  1. அருமை. பாராட்டுகள்.

    குழந்தைப் பருவத்திலேயே இருந்துவிட்டால் எத்தனை நிம்மதி.....

    ReplyDelete
  2. 'குட்டிமா' என்ற குட்டியூண்டு பதிவு சொல்லிப்போவதோ மிகப்பெரிய விஷயங்கள். :) பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. குட்டிப் பதிவில் குட்டி வாழ்க்கை
    அருமை சகோ அருமை

    ReplyDelete
  4. அருமை!! குழந்தைப்பருவமே அழகான பருவம்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...