Friday, 1 April 2016

கவிப்பேராசான் மீரா விருது பெற்ற ”விழிதூவிய விதைகள் நூல்”

கவிப்பேராசான் விருது பெறும் விழாவிற்கு மதுரை வலைப்பதிவர்களை அன்புடன் அழைக்கின்றேன் .
 நாள்:3.4.16 ஞாயிறு
 இடம்:நற்றிணை அரங்கு [மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகில்] 

’விழி தூவிய விதைகள் கவிதை” நூல் வந்த பாதை

 எனது முதல் கவிதை நூல் அட்டைப்படம் சிறப்பா இருக்கனும்னு இணையத்தில் தேடிய பொழுது இப்படம் மிகவும் பிடித்து இருந்தது..ஆனால் புத்தகத்தை அச்சிட்ட திரு.இரவி அவர்கள் இதை புத்தக அளவில் பெரிதாக்கினால் உடைந்து போயிடும்மா..வேற படம் பாருங்க என்று கூறிய பொழுது இல்ல இதுதான் வேணும் என்ற பொழுது இதை பெரிதாக வரைந்து தந்தால் போடலாம் என அரை மனதுடன் கூறினார்.

 எனக்கு ஓவியம் கற்றுத்தந்த ஓவியர் மகேந்திரனிடம் கூறிய போழுது நிச்சயமா வரையலாம் அக்கான்னு அழகாக வரைந்து தந்துவிட்டார்.. 

கவிதைகள் அச்சிடும் தாட்கள் சிறப்பாக இருக்கனும்னு வழவழப்பான தாளைத்தேர்வு செய்தேன்... எனக்கே தெரியாம அட்டைப்படத்தை முப்பரிமாணத்தில் செய்து புத்தகத்தை பளபளப்பாக்கி விட்டார்..திரு இரவி அவர்கள்...

 கவிஞர் தங்கம் மூர்த்தி,கவிஞர் முத்துநிலவன்,கவிஞர் சுவாதி,தோழி கிருஷ்ணவேணி நூலுக்கு முன்னுரை,அணிந்துரை,நட்புரை வழங்கி அணி செய்தனர்...

 கவிதை நூலை கைகளில் தொட்ட பொழுது என் மகளை முதன்முதலாய் தொட்ட உணர்வு...

 நூல் வெளியீட்டுவிழா \
நாள்:2.12.2012

 இடம்: நகர்மன்றம் புதுகை

அன்று  எனது விழிதூவிய விதைகள் நூலும், கவிஞர் சுவாதியின் மழைவெளிதனிலே நூலும் வெளியிடப்பட்டன.
வரவேற்புரையை முனைவர் கண்மணி கவிதையாக வரவேற்றார்.

 தோழர் ஓவியா அவர்கள் தலைமை ஏற்றார்.

 திருமிகு பானுமதி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்

 தோழர் ஓவியா அவர்கள் வெளியிட கவிஞர் பாலாவின் துணைவியார் அன்புக்குரிய மஞ்சுளா அம்மா பெற்றுக்கொண்டார்கள்..

 அன்புக்குரிய பட்டிமன்ற பேச்சாளரும் தோழியுமான திருமிகு .ரேணுகாதேவி அவர்கள் நூல் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

 கவிஞர் ரத்திகா விழாவில் புத்தகங்களை அறிமுகம் செய்து வாழ்த்தினார். 

கவிஞர் சுவாதி நன்றி கூறினார்.

 முழுக்க முழுக்க நகர்மன்ற மேடை பெண்களால் நிறைந்து அழகு பெற்றது..

15 comments:

  1. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  2. அட்டைப்படம் சிறப்பாக உள்ளது சகோ....
    மதுரை பதிவர்களுக்கு மட்டும்தான் சிறப்பு அழைப்பா...
    கன்னியாகுமரி பதிவர்களுக்கு அழைப்பு இல்லையா...
    விருது விழா சிறக்க வாழ்த்துக்கள் சகோ....
    உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அவசியம் வாங்க....மிக்க நன்றி பா.

      Delete
  3. இன்னும் பல விருதுகள் பெறவும், படைப்புகள் தரவும் வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி .

      Delete
  4. 3d அட்டைப் படம் மனதை திருடிக் கொண்டது !வாழ்த்துக்கள் !
    மதுரை விழா நேரத்தைக் குறிப்பிடுங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சார்...நன்றி நன்றி..

      Delete
  5. “முழுக்க முழுக்க நகர்மன்ற மேடை பெண்களால் நிறைந்து அழகு பெற்றது..
    ஆமா பார்வையாளராகப் போய் அந்தப் “பெண்ணாதிக்க” நிகழ்ச்சியைப் பார்த்ததற்கு நான் நேரடிச் சாட்சிங்கோ! வாழ்த்துகள் மா! பெண்ணாதிக்கம் ஓங்குக!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அண்ணா..பெண்ணாதிக்கம்னு நீங்களே சொல்லலாமா?

      Delete
  6. தங்களின் ரசனை உணர்வை ரசித்தேன். விழா சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா.

      Delete
  7. அட! பெண்கள் அழகாக்கிய மேடையா!! அருமை..

    விருது பெற்றமைக்கு தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேலும் மேலும் தங்கள் படைப்புகள் வெளிவரவும் எங்கள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  9. //நூல் வெளியீட்டுவிழா
    நாள்:2.12.2012 -// எல்லாம் சரியா இருக்கா??

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...