Thursday, 31 March 2016

கவிஞர் நீலாவின் “அலையும் குரல்கள்”கவிதைநூல்

கவிஞர் நீலாவின் “அலையும் குரல்கள்”கவிதைநூல் ---------------------------------------------------------------

படித்து முடித்ததும் குடியும் ,குடித்தவனும் கண்முன் ஆக்ரோஷமாய் தலைவிரித்தாடும் காட்சி மனதில் நிழலாய்...

 போதையின் மயக்கத்தில் அவனும் அறியா அவனது நிலையை ,உணர்ந்தும் உணராதது போன்ற மாய நிலையை, மூளையை பிறழச்செய்யும் மதுவை ஆறென வீதியெங்கும் ஓடவிட்டு ,தனது அக்ரமங்களை அவனறியாமல் மூட நினைக்கும் அரசின் துரோகம் கண்முன் விரிகின்றது..


 அவரது முற்போக்கு சிந்தனையில் பெண்ணியம் வெளிப்படும் இடமாய் ஆண் பெண்னுக்கு இடையேயான கூலி வேறுபாட்டைக்காட்டும் கவிதை 

                    ”ஆம்பளக்கி நூறு ரூவாயும்
                    அரை பிளேட்டு பிரியாணியும்
                    ஒரு ஆஃப் பாட்டிலும்

                   பொம்பளக்கி எம்ப்ளது ரூபாயும்
                  அரை பிளேட்டு குஸ்காவும்
                 ஒரு சிக்கன் சூப்பும்

                   ஆஃபிற்கும் சூப்பிற்கும் நடுவில்
                   ஆப்படித்து கிடக்கின்றது
                   எங்களூரு குடித்தனங்கள்”

 மக்களை குடிக்க வைத்த அரசோ தள்ளாடித்தடுமாறுகின்றது...

பகுத்தறிவு அமிழ்ந்து விலங்கிலிருந்து பிறந்தவனின் விலங்கின் குணம் மெல்ல எட்டிப்பார்க்கிறது மிருகப்பறவை கவிதையில்.

 பெண்ணின் அச்சம்,குடிகாரக்கணவன் செய்யப்போகும் அட்டகாசங்களுக்கு தயாராகும் மனைவி தொலைக்காட்சிப்பெட்டியை அலறவிடுகிறாள் குடும்பமானம் காக்க....

இத்தனைவியூகம் அமைத்து குடிக்காமலே குடியால் போராடும் ஜீவன்கள்.....எத்தனை எத்தனை?

 அலையும் குரலின் ஒலியாய்
                           ”குடிப்பது நீங்கள்
                             மகிழ்வு உங்களுக்கு
                            துடிப்பது பெண்கள்
                           வேதனை அவர்களுக்கு”

* அறிவொளி இயக்கத்தில் தனது முழு பங்கையும் செலுத்தி, மாவட்டமெங்கும் இயக்கத்திற்காக பாடுபட்டவர்,

*த.மு.எ.க.ச வின் மாநில பொறுப்பாளர்...
*நல்ல பாடகர்....

*சமூக சிந்தனையாளர்.. என பன்முகம் கொண்ட

             கவிஞர் நீலாவின் நூலெங்கும் வீசும் மதுவின் வாடைக்கெதிரான குரல்களின் மணம்..

 குழறும் குரல்களுக்கெதிரான போர்க்குரலாய்..

 மதுவால் பெண்களும் குழந்தைகளும் மனம் நொந்து வீழ்வதை ஒரு பெண்ணால் மட்டுமே இப்படி ஓங்கி ஒலிக்க முடியும்...

 இந்நூலை மதுவால் பாதிக்கப்படும் தமிழகம் குறித்து ஆனந்த விகடனில் எழுதிவரும் விகடன் பொறுப்பாசிரியர்  திருமிகு பாரதிதம்பி வெளியிடுகையில், நான் கட்டுரையாக வடிப்பதை நீலா கவிதையால் வடித்துள்ளார் ...என பாராட்டி வெளியிட்டார்..

 வாழ்த்துகள் சகோதரி நீலாவிற்கு...

5 comments:

  1. ”குடிப்பது நீங்கள்
    மகிழ்வு உங்களுக்கு
    துடிப்பது பெண்கள்
    வேதனை அவர்களுக்கு”//

    இதில் கடைசிவரி:
    து ய ர ம் அவர்களுக்கு
    என இருக்கலாமோ
    எனத் தோன்றியது.

    ’அலையும் குரல்கள்’ நூல் ஆசிரியர் அவர்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    நூல் அறிமுகம் செய்துள்ள தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நல்ல நூல் அறிமுகம்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கவிதைநூல் அறிமுகம் அருமை
    பதிவில் கண்ட கவிதைகள் அருமை.....

    ReplyDelete
  4. நல்ல நூல் அறிமுகம் சகோ

    வாழ்த்துகள் பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  5. நல்ல நூல் அறிமுகம். திருடனால் பார்த்து திருந்தப்போவதில்லை என்பது நிதர்சனம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...