Wednesday, 16 March 2016

100% தேர்ச்சி

100% தேர்ச்சி
 100% தேர்ச்சி படுத்தும் பாடு....

இன்று கற்றலில் பின் தங்கிய குழந்தைகளை விசம் குடிக்கத்தூண்டுமளவு சென்றுள்ளது..ஏற்கனவே நூற்றுக்கு நூறு எடுக்க முடியாத மீத்திறக் குழந்தைகள் தற்கொலையை நாடும் சூழலில்,தற்போது படிக்க இயலாத குழந்தைகளை இந்த பாடு படுத்தும் நூறு சதவீத தேர்ச்சி முக்கியமாஎன்ற கேள்வி தோன்றுகிறது.
 முன்பெல்லாம் மாணவர்கள் சரியாகப்படிக்க வில்லையெனில் ஒரே வகுப்பில் இரண்டாண்டு படிக்க வைக்கும் முறையாக பாஸ் ,பெயில் என இருந்தது..அப்போது கற்றலில் பின் தங்கிய குழந்தைகள் இரண்டாண்டு படிக்கும் நிலை.

ஆனால் தற்போது ஒன்பதாம் வகுப்பு வரை பாஸ் என்பதால் அனைத்து குழந்தைகளும் பத்தாம் வகுப்பிற்கு வந்துவிடுகின்றனர். இச்சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100%தேர்ச்சி காட்டி வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சில தனியார் பள்ளிகள் அக்குழந்தைகளை மாற்றுச்சான்றிதழ் கொடுத்தோ அல்லது தேர்வு எழுத விடாமல் செய்வதோ போன்ற இரக்கமற்ற செயல்களை செய்கின்றன.இப்படி அவர்களை நீக்குவதன் மூலம் 100% பெற்று விட்டொம் என பறைசாற்றி கொள்கின்றன.



அரசுப்பள்ளிகளில் தற்போது 100% தேர்ச்சி எடுக்க வேண்டுமென மேலதிகாரிகள் கட்டாயப்படுத்துவதால் ,கற்றலில் பின் தங்கிய ,பாதிப்பிற்குள்ளான குழந்தைகளை, தேர்ச்சி பெற வைக்க முடியாமல் ஆசிரியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.அக்குழந்தைகளின் பிற திறமைகள் கண்டுகொள்ளப்படாமல் மதிப்பெண்களால் நசுக்கப்படுகின்றன. சில குறைபாடுள்ள குழந்தைகளை அதற்கென உரிய சிறப்பு பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென தெரியாத பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளை நம்பி ஒப்படைக்கும் போது,ஆசிரியர்கள் மனிதநேயத்தோடு அக்குழந்தைகளை அணுக முடியாமல் ,100% அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றது.

இது அரசுக்கு தெரிந்து நடக்கிறதா?என்பது கேள்விக்குரிய ஒன்றாக உள்ளது. தேர்ச்சி சதவீதம் குறையும் போது ஆசிரியர்களின் ஊதியம் சமூகத்தால் கவனத்துக்குள்ளாகின்றது.. ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே”என கவிஞர் முத்துநிலவன் அவர்கள் நூலில் கூறியுள்ளது போல...100% தேர்ச்சிகற்றலில் பின் தங்கிய குழந்தைகளை பாதிக்காமல் இருக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்..

8 comments:

  1. படிப்பில் பின்தங்கிய மாணவரை பள்ளியை விட்டுப் போகச்சொல்வது கேள்விப்படும்போதெல்லாம், பள்ளியின் அடிப்படையே ஆட்டம் காண்பதாய் உணர்கிறேன்..

    ReplyDelete
  2. வேதியியல் கேள்வித்தாள் கடினமென்று ஒரு மாணவி,தீக்குளித்துள்ளாள்.இன்னும் எத்தனைப் பிஞ்சு உள்ளங்களைக் கொல்லப்போகிறதோ இந்தத் தேர்வு முறை? இந்தப் பாவத்தில் நமக்கும் பங்கு உண்டு என்பது வேதனை!?.
    மாணவர்கள் தோல்வி அடையலாம்.கல்விமுறை தோற்கக் கூடாது....இனி என்ன செய்யப் போகிறோம்..?

    ReplyDelete
  3. அருமையான பதிவு ....
    ஐயா முத்துநிலவன்
    அவர்கள் சொன்னது
    போலதான் நானும்
    சொல்கிறேன்.....
    முதல் மதிப்பெண்
    வேண்டாம்...
    மன அழுத்தம் இல்லாமல்
    இருந்தாலே போதும்....
    முதல் மதிப்பெண் பெறலாம்...

    ReplyDelete
  4. // முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே... // தாரக மந்திரம்...

    ReplyDelete
  5. நியாயமான ஆதங்கம் சகோ

    ReplyDelete
  6. தேர்ச்சி விகிதம் என்ற அளவீடு கற்பித்தலிலும் தலை தூக்கி வருவது கல்விமுறையின் வளர்ச்சி அல்ல வீழ்ச்சி என்பதை அரசாங்கம் உணர்ந்தால் மட்டுமே குழந்தைகளுக்குக் கற்றல் சுமையாய் இல்லாமல் சுகமாய் அமையும்.

    ReplyDelete
  7. பல கூடங்களில் இதைச் சொல்லி கெட்டபெயர் கூட எடுத்தாகி விட்டது அம்மா... நம்மில் யாரேனும் ஒருவர் உயர் அதிகார நிலையை அடைந்து போராடி மாற்றினால் உண்டு...

    ReplyDelete
  8. அருமையான் பதிவு சகோ. பள்ளியை விட்டு நீக்குதல் எல்லாம் மிக மிக மோசமான மனிதாபிமானமற்ற செயல்.

    நம்மூரில் இன்னும் கற்றல் குறைபாடு விழிப்புணர்வும், கற்றலில் பின் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வும், அதற்கு எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்த கல்வி அறிவோ, சமுதாய உணர்வோ இன்னும் இல்லை. கல்வியில் நான் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. வெறும் 100% தேர்ச்சி என்பது கண் துடைப்பு. ஏனென்றால் தேர்ச்சிப் பெற வைக்க வேண்டும் என்று மார்க்கை அள்ளிக் கொடுத்துத் தேர்ச்சி பெற வைத்து பின்னர் அந்தக் குழந்தைகள் +2 வில் கஷ்டப்படுவதும், கல்லூரியில் கஷ்டப்படுவதும் நடக்கின்றது. கற்றல் என்பது சுத்தமாக இல்லை சகோ.

    ஒவ்வொரு ஆண்டும் தேர்வு சமயங்களிலும், முடிவுகள் வெளியாகும் சமயங்களிலும் தற்கொலைகள் நடக்கின்றன. மன அழுத்தம் இல்லாத கல்வி முறை எப்போது வரும் என்று தெரியவில்லை. இனி அரசை எதிர்ப்பார்ப்பதை விட ஆசிரியர்கள் தீர்மானித்து முனைந்தால் நல்ல மாற்றம் கொண்டுவரலாமே என்று தோன்றுகின்றது.

    நல்ல பதிவு..

    கீதா

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...