Sunday, 13 March 2016

சாம்பார்ல குளிப்பாட்டிவிடாதம்மா

சாம்பார்ல குளிப்பாட்டிவிடாதம்மா
----------------------------------------------------
நீண்ட நாட்களுக்கு பின் இரயில் பயணம் காலை உறவுகளுடன் சிதம்பரம் சென்று மாலை மாயவரத்தில் மீண்டும் திருச்சி வழியாக பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸில் பெண்களுக்கான பெட்டியில் ஏறினோம்.

கும்பகோணத்தில்...திமுதிமுவென கூட்டம் கூட்டமாய் பெண்களும், குழந்தைகளும் ,முதியவர்களும் ஏற ,பெட்டி மூச்சு விடத்திணறியது.

அக்கா தங்கை இருவர், நான்கு குழந்தைகள் மற்றும் அவர்களுடன் சிலர் மகாமகக்குளத்தில் குளித்து தர்மபுரிக்கு திரும்புவதற்காக ஏறினர்...ஏறும் பொழுதே சண்டைக்காரங்க குரல் போல் அதட்டலும் அதிகாரமுமாக இருந்த அக்கா,சட்டென்று நான்கு குழந்தைகளையும் எங்கள் இருக்கைக்கு மேல் இருந்த பைகள் வைக்கும் இடத்தில் ஏற்றி அமர வைத்தார்...அவர்கள் போட்டுருந்த செருப்புடன்...

சங்கடத்தில் நெளிய...ஆரம்பித்தோம்...ஏன்னா அப்பதான் கும்பகோண மகாமக குளத்தில் கலந்திருந்த கழிவுகளைப்பற்றி பேசி முடித்திருந்தோம்.


நிக்கக்கூட இடமில்லாத நிலையில் இரயில் அசைவிற்கேற்ப ஆடிக்கொண்டே

படபடவென்று தட்டுகளை எடுத்து குழந்தைகள் கைகளில் கொடுத்த போது ,எங்களின் தலை மேல் டைனிங் டேபிள் தயாரானதை உணர்ந்தோம்.இட்லி வைத்த சாம்பார் பொட்டலத்தை எடுத்த போது கொஞ்சம் அச்சம் வந்தது..

அம்மாடி சாம்பார்ல குளிப்பாட்டி விட்டுடாதம்மான்னு கெஞ்சும் குரலில் நான்..

சேச்சே அப்படி கொட்ட மாட்டேன்னு சொல்லி தன் தங்கையிடம் பொட்டலத்தைக்கொடுத்த நொடியில் ,,சொத்தென்று கால்களில் விழுந்தது சாம்பார் பை...

ஙேன்னு விழித்தோம்....இட்லி அபிஷேகம் தான் என பயத்தோடு அமர்ந்திருந்தோம்....தஞ்சை வந்ததும் அப்பாடின்னு நான் இறங்க ஆரம்பித்தேன்..கால் வைக்க இடமில்லாத கூட்டம்..நெரிசலில் கிளம்பிய போது...

அக்கா உங்களுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்துருந்தா மன்னிச்சிடுங்க அக்கான்னு அந்த இடி போன்ற குரல் நெகிழ்வாய்க்கூறிய போது...மனம் நெகிழ்ந்து சேச்சே அப்படி இல்லம்மான்னு குட்டீஸ்களுக்கு டாட்டா சொல்லி விட்டு இறங்கினேன்...

மனதில் முன்பின் தெரியாத தர்மபுரிக்குடும்பத்தை மனதிலே சுமந்து கொண்டு...




6 comments:

  1. அருமையான ரெயில் பயணம்
    குட்டீஸ் சந்திப்பு அருமை...
    பயணம் சிறந்தமைக்கு
    வாழ்த்துக்கள் சகோ......

    ReplyDelete
  2. //அக்கா உங்களுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்துருந்தா மன்னிச்சிடுங்க // இளகிக்கிய குரல். வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. என்ன சொல்ல வாறிங்க?
    உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  4. நெகிழ்ச்சியான அனுபவம்...

    ReplyDelete
  5. அதிகார குரலுக்குள் ..அமைதியான அன்பு ...

    ReplyDelete
  6. இப்படித்தான் சில கிராமத்து மனிதர்களுக்கு எப்படி பொதுவெளியில் நடந்து கொள்வது என்று தெரியாமல் இருக்கும்-இருக்கலாம்...அவர்கள் குரலும் கூட எட்டு ஊருக்குக் கேட்பது போல அதிகாரத் தோரணையுடன் இருக்கலாம். ஆனால் பலாப்பழம் போல் அகத்தினுள் அன்பும் இருக்கும்..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...