Tuesday, 22 March 2016

வீதி சிறப்புக்கூட்டம் -25

அன்புடன் அழைக்கின்றோம்....வந்துடுவீங்க தானே...
 வீதி கலை இலக்கியக்களம்
25 ஆவது சிறப்பு கூட்டம்
 நாள்:27.03.16
இடம் :நில அளவையர் கூடம்.புதுக்கோட்டை.              

                                      மதிப்பிற்குரிய எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர் திருமிகு அருள்முருகன் அவர்களின் சிந்தனையால் புதுகையில் தமிழ், கணினியில் புதிய வளர்ச்சியின் அடையாளமாக ,வலைப்பதிவர்களை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி அளித்தார்.இன்று வலைப்பதிவர் விழா சிறப்புடன் நடந்ததும்,புதுகையில் அறுபதுக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இருப்பதற்கும் அவர் அன்று விதைத்த விதையே காரணம்..

                                   அது மட்டுமின்றி சிறந்த இலக்கியவாதிகளை,படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற அவரது சிந்தனையில் தோன்றியது தான் வீதி என்ற அமைப்பு.இதற்கான பெயர் வைத்தலில் நிறைய பெயர்கள் இடம் பெற்றாலும் திரு.மகாசுந்தர் அவர்கள் புதுகையின் சிறப்பு வீதி என்பதால் வீதி என பெயர் வைக்கலாம் என்றதும் அனைவராலும் ஏற்கப்பட்டு வீதி நிலை பெறத்துவங்கி இன்று தனது 25 ஆவது வாரத்தை வெற்றியுடன் கொண்டாட உள்ளது.

 வீதியின் வளர்ச்சியுடன் தங்களை வளர்த்து கொண்டவர்கள் இன்று வீதியை கொண்டாடும் ஆவலில் உள்ளனர்.

வீதி நல்ல படைப்பாளிகளை,வாசகர்களை,கவிஞர்களை உருவாக்கிக்கொண்டு வருகின்றது...

 மகிழ்வுடன் அழைக்கின்றோம்...உங்கள் வருகையால் வீதி சிறக்கட்டும் ....
அனைவரின் கரங்களும் வீதியில் ஒன்றிணையட்டும்..

8 comments:

  1. வணக்கம்
    நிகழ்வு சிறக்க எனது வாழ்த்துக்கள்
    http://www.trtamilkkavithaikal.com/2016/03/blog-post_22.html

    ReplyDelete
  2. விழா சிறக்க வாழ்த்துகள்
    அன்று எனக்கு விடுமுறை இல்லாததால் வர முடியாது என்பதை தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வெள்ளிவிழா காணும்' வீதி'தொடர்ந்து வெற்றி பெறும்.. வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. விழா சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. விழா சிறக்க வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  7. கில்லர் ஜி......லீவ் லட்டர் எழுதி அக்காவுக்கு அனுப்பிடுங்க. அப்பத் தான் ஒப்புதல் தருவாங்களாம்!

    ReplyDelete
  8. வீதி கூட்டம் சிறக்க வாழ்த்துக்கள்/

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...